Thursday, November 27, 2008

மும்பை பயங்கரம்// நம்மூர் வெள்ளத்தில் மூழ்கியதாம்

முப்பையில் நடந்த பயங்கரவாத செயலால் இறந்த அனைத்து இந்திய சகோதரர்களுக்கும் மற்றை நாட்டனருக்கும் நினைவஞ்சலிகளை செலுத்திக் கொள்கிறேன். இன்று ஓர் இந்திய நண்பனுடன் Markam( canada) பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயத்துக்கு செல்ல முடிந்தது; அவர்கள் இறந்தவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்.

இந்த நேரத்தில் அனைத்து விதமான பயங்கரவாத செயல்களையும் எதிர்ப்பதுடன்; (மக்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள்) அதற்கு, அவர்களின் எந்த விதமான நியாப்படுத்தல்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

................................................................................

நம்மூர் வெள்ளத்தில் மூழ்கிருப்பதாகவும்! புயலின் தாக்கம் பற்றியும்! மேலே உள்ள செய்தி ரைப் அடித்துக் கொண்டிருந்த போது; எனது சகோதரன் தோலைபேசியூடாக அறிய தந்து கொண்டிருந்தான். விவசாயம் மற்றும் கால் நடைகள் முற்றாக அழிந்துவிட்டதாம். நேல் மூட்டைக்கு மேல் படுக்குமளவுக்கு வரலாறு காணாத மழையாம். அலுவலங்கள் மற்றும் பாடசாலைகள் அனைத்தும் அறிவிக்கப்படாத விடுமுறையில் பூட்டப்பட்டு இருக்கின்றன. மின்சார கம்பங்கள் பெருமளவில் சரிந்து வீழ்ந்து விட்டதனால், இருவாரத்துக்கு மின்சாரம் சாத்தியம் இல்லையாம்,,, (இது யாழ்பாண வடமராட்சி பகுதியின் நிலவரம்)

தமிழா! உன்னை இயற்கையும் சீண்டி விளையாடுதடா,,,,,,,

Thursday, November 20, 2008

இணையத்தில் மாவீரர்க்கு விளக்கேற்றுவோம் வாருங்கள்!


மாவீரர் வாரம் ஆரம்பித்த விட நிலையில் எம் உரிமைக்காக தம் இன்னுயிர்களை எல்லாம் உவந்தளித்த அந்த உத்தமர்களுக்கு புலம்பெயர் தமிழர்களும் அனைத்து தமிழ் சார் உணர்வாளர்களையும் இணையத்தில் விளக்கேற்ற அழைக்கிறோம்
இணைய முகவரி http://www.karthikai27.com/

தகவலுக்கு நன்றி CTR தமிழ் வானோலி கனடா

Wednesday, November 5, 2008

you want to speak for us?.

அன்பார்ந்த தமிழ் உணர்வாளர்களே! இந்த ஒளித்தொகுப்பு கனேடிய மாணவ சமுதாயத்தால் பல்லின சமூகத்திடம் எமது பிரச்சினை போய் சேருமாறு ஆங்கில மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது கனடாக்குள் மட்டும் முடங்காமல் இந்த அகன்று விரிந்த இணையம் மூலம் உலக உள்ளங்கள் அனைத்தையும் தொட நான் Diggல் இணைத்திருக்கிறேன். அங்கு சென்று வாக்களித்து அது பலமடைய உதவுமாறு வேண்டுகிறேன்! அத்துடன் social இணைய தளங்களினூட இயன்றவர்களுக்கு தெரியப்படுத்தவும்! நன்றி!

If you have time please speak for us. They can't run...

வீடியோ பார்க்க | digg ல் வாக்களிக்க

Sunday, November 2, 2008

நானும் helloweenனும்

நேற்று முன்தினம் வெள்ளி அன்று! சிறுவர்களுடன் சிறுவர்களாக நானும் இனிப்பு சேகரிக்க சென்றேன். அதே வேளை கல்விக் கலாசாலைகளில் ஆசிரியர்கள் பல்வேறு வகையாக உடைகளில் வந்து அசத்தியிருந்தார்கள்.


அன்று எனது கமராவுக்குள் அகப்பட்ட சில புகைப்படங்கள்.




















div>

Saturday, November 1, 2008

இவை ஏன் குப்பறப் படுக்கினம்???

ஒருவர்:- இவை ஏன் குப்பறப் படுக்கினம்.

மற்றவர்: ஒரு வேளை இவையள் சிறிலங்காவுக்கு மச்சுக்கு போறதுக்காண்டி பயிற்சி எடுக்கினமோ?? ஏனென்றால் இப்ப எங்கட தம்பிகளுந்த பிளேனுகள் அறம்புறமாக கொழும்புல வெளுக்குதல்லோ?? அதனால ஏதும் இல்லாத பொல்லாதது எல்லாம் சொல்லி வெருட்டியிருப்பாங்கள். அங்க பிளேன கண்டாலே பலருக்கு வியர்கிறதா அறிஞ்சன்.

முதலாமவர்: மகிந்தவே குண்டைப் போட்டுட்டு புலி போட்டுட்டுது என்றால். உலகம் நம்பிடுமல்லோ??

மற்றவர்;-அவங்கள் எப்ப எங்க அடிப்பாங்கள் எண்டு யாருக்கும் தெரியாது! ஆனால் அடிக்க வேண்டிய நேரத்தில கரக்ரா குறிதவறாமல் அடிப்பாங்கள். அதுதான் அவங்கட 30 வருட வரலாறு. அது உலகுக்கும் தெரியும்.
எங்கேயோ கப்பல் அடிச்சிட்டாங்களாம் நில்வாறன் செய்தி கேட்டுக் கொண்டு..........................