Monday, April 13, 2009

ஒட்டோவாவில் அலையாக திரளும் மக்கள்!






நான் பொதுவாக இங்கு நடைபெறும் நிகழ்வுகளை வலையில் ஏற்றுவதில்லை ஆனாலும் twitter ல் அவ்வப்போது அவ்விடங்களில் இருந்து பதிவேற்றியிருக்கிறேன். நீண்ட காலத்திற்குப் பின் (ஓரு வாரத்திற்க்கும் மேலாக) தற்பொது ஒரு நீண்ட ஒரு ஒய்வு எடுத்தாகி விட்டது. நடந்த நிகழ்வுகளை சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த திங்கட் கிழமை!
காலை 10 மணியளவில் இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதம் பாவித்ததை அறிந்து தமிழ் உணர்வு இளையோர்களிடையே ஏற்பட்ட ஓர் எழுச்சி toronto Queen park ல் திரள ஆரம்பித்தனர். அது ஒரு தன்னெழுச்சியான போராட்டம் அங்கே தொடர்ந்து போராட்டம் செய்வதென முடிவெடுத்து இரவிரவாக இடம் பெற்ற வேளையில் தமிழ் சமூகம் ஒட்டோவாவில் நடத்துவதென முடிவெடுத்து மக்களுக்கு அழைப்பு விடுத்தது.

செவ்வாய் கிழமை
அதையடுத்து குயின் பார்கிலிருந்து புறப்பட்டு ஒட்டாவா போய் சேர்ந்தோம். ஆரம்பத்தில் அமைதியாக பார்லிமென்ட் முன்னாலே மக்கள் அமைதியாக ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர் தீடீரென உத்வேகம் கொண்ட மக்கள் Wellington ஆகிய வீதிகளில் வீதி மறியல்களில் ஈடுபட்டனர்.


புதனிரவு வரை வீதிமறிலில் ஈடுபட்டனர்.

வியாழன் மதியம் பெருமளவில் குவிக்கப்பட்ட பொலிசார் வீதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களை அகற்றியதுடன்.அங்கு வைக்கபட்டிருந்த உணவுப் பொருட்களையும் எடுத்துச் சென்றனர்

வெள்ளி மற்றும் சனி ஞாயிறு தினங்களில் பெரும் திரளாக மக்கள் திரண்ட வண்ணமுள்ளனர். ஆனாலும் அங்கு அமைதியான வழியில் போராட்டங்கள் நடக்கின்றன.

இதற்கிடையில் அங்கு ஐவர் உண்ணா நிலையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

(அந்த இறுதிப் போட்டோவில் தலைக்கு முக்காடு போட்டபடி கழுத்தில கமராவோட இருக்கிற பையன யாருக்கும் தெரியுமே!)


சில செய்தி இணைப்புக்கள்
ottawa citision 1

A well-mobilized, orchestrated campaign


வக்தா tv