Friday, October 31, 2008

இலங்கை தமிழர் நிவாரணத்திற்கு ஷூ பாலிஷ் செய்யும் இளைஞர்


திருநெல்வேலி: இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்காக, இளைஞர் ஒருவர் பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து ஷூ பாலிஷ் செய்து, நிதி திரட்டி வருகிறார். நெல்லையை சேர்ந்தவர் பாபுராஜ் (30). சமூக சேவைகள் செய்து வருகிறார். அண்மையில் சென்னை அருகே திருக்கழுக்குன்றத்தில் இதயேந்திரன் என்ற மாணவர் விபத்தில் சிக்கி இறந்தபோது அவரது இதயம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ததற்காக அவரது தந்தை டாக்டர் அசோகனுக்கு, நெல்லையில் பாராட்டி விருது வழங்கினார்.


இவர் நேற்று காலையில் பாளையங்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து அங்கு வருகிற பயணிகளின் ஷூக்களுக்கு பாலிஷ் செய்தார். அதற்கு கட்டணம் என்றில்லாமல் நன்கொடையாக எவ்வளவு தந்தாலும் வாங்கிக் கொள்கிறார். ஒரு வாரத்திற்கு இதே போல ஷூ பாலிஷ் செய்து இதன் மூலம் கிடைக்கும் தொகையை, இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

thanks dinamalar

Monday, October 27, 2008

ஈழம் வாழ தமிழ்நாடு கைகொடுக்கும்....

தமிழக உறவுகளே இரத்தம் சிந்தும் எனது உறவுகளுக்காக பொங்கு தமிழ் உண்ணாவிரதம் ஆர்பாட்டம் என அனைத்தையும் செய்து களைத்துவிட்டோம்.

தமிழீழ மக்களின் வாழ்வை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் எதிரி தனது நேச நாடுகளின் கால்களில் விழுந்து உணவுக்கே அல்லாடுகிற நாட்டிடை குண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் நிரப்புகிறான். ஒரு வல்லாதிக்க நாட்டுடன் மோதுவது பொல மூர்க்கமாக அழித்துக் கொண்டிருக்கிறான். "அ" எழுத வேண்டிய கைகள் அங்கே சிதைக்கப்படுகின்றன.

உங்களால் முடியும் தமிழக உறவுகளே தூங்கும் அனைத்து தமிழக உறவுகளும் விழித்தெழுங்கள் உமை விட்டால் எமக்கு வேறு நாதியில்லை கரம் கொடுங்கள். இதை விட்டால் தமிழனில் சாம்பல் மேட்டிலேதான் அனைவரும் கண்ணீராலே கருமாதி செய்ய நேரிடும் இதை விட்டால் வேறு தருணம் கிடையாது.

"ஒன்று படுவோம் வென்று விடுவோம்"
(((தவறாது வீடியோ பாடல்களை கேட்கவும்)))

நம்பியே கெட்டோம்!

எங்கள் உறவுகள் இரத்தம் சிந்ததல் கண்ட கலைஞர் மனம் கரைந்தாரே! என்று மெய்சிலிர்தோம் நேற்றைய செய்தி கேட்டு மெய்அதிர்ந்தோம்.

என்ன வானாலும் தலைவன் வழியில் ஈழத்தமிழ் மக்கள் அணிதிரண்டு தமிழ்மண் பெறுவர் என்பது திண்ணம்!

ஓயாது உழைத்திடும் அலையான கடலே தமிழீழம் தனை நோக்கி விரைந்திடும் படையே!

Friday, October 24, 2008

விடியலை நோக்கி,,,,,,

எம் தமிழக உறவுகளுக்கு!
கொட்டும் மழையிலும்
கோடி கோடியாய்
எம்மை நோக்கி உங்கள்
அன்புக் கூட்டமே

தமிழக முதல்வருக்கு!

தமிழக முதல்வரே
தமிழுலகின் மூத்தவரே
தயையுடன் எமை வாரி அணைத்தவரே

தள்ளாத வயதிலும்
கொட்டும் மழையிலும்
உடன் பிறப்புகள் உயிர்காக்க
வீதி வந்தவரே!

மற்றேரர்க்கு!
அணல் தெறிக்கும் உங்கள் பேச்சு
எமக்கு புதுரத்தம் பாச்சுகிறது
சிறை என்று தெரிந்தும் சீறிப்பாயும்
சிறுத்தைகளே

தங்களின் அன்புக்கும் எனது வணக்கங்கள்

-ஒரு தேசம் பிரிந்த அகதி!

தனியே ஈழத்து பதிவுகளுக்காக மட்டும் தொடர்வேன்,,,,,,,,,,