Monday, December 31, 2007

வரும் முன் புத்தாண்டே உன்னுள் உறுதிகொள்!


உலகவ வரலாற்றில் ஒரு வெண்புறாவாகவும்

அன்புக்கு ஒரு தாயாகவும்

காதலர்ளுக்கு ஒரு பூங்காவாகவும்

ஒரு இலட்சிவாதிக்கு ஒரு ஆசானாகவும்

ஒரு குழந்தைக்கு ஒரு அவர்கள் தவண்டு எழும் கை வண்டியாகவும்
வறுமைக்கு ஒரு தூக்கு மேடையாகவும்

தீவரவாதத்துக்கு ஒரு சவக்குழியாகவும்

இருக்க உறுதியெடுத்து வருக புத்தாண்டே!

"அனைத்து வலைப்பதிவர்களுக்கும் 2008 ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்"
வரும் முன் புத்தாண்டே உன்னுள் உறுதிகொள்!

உலகவ வரலாற்றில் ஒரு வெண்புறாவாகவும்

அன்புக்கு ஒரு தாயாகவும்

காதலர்ளுக்கு ஒரு பூங்காவாகவும்

ஒரு இலட்சிவாதிக்கு ஒரு ஆசானாகவும்

ஒரு குழந்தைக்கு ஒரு அவர்கள் தவண்டு எழும் கை வண்டியாகவும்

வறுமைக்கு ஒரு தூக்கு மேடையாகவும்

தீவரவாதத்துக்கு ஒரு சவக்குழியாகவும்

இருக்க உறுதியெடுத்து வருக புத்தாண்டே!


"அனைத்து வலைப்பதிவர்களுக்கும் 2008 ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்"

Friday, December 28, 2007

பெரியாருக்கும் வீவேகானந்தருக்கும் வேறுபாடு???????

ஒரு தாய் தனது பிள்ளைக்கு உணவு ஊட்ட நினைக்கிறாள். அந்த பிள்ளை உண்ண மறுக்கிறது. ஆனாலும் அவள் ஏதோ வழியில் ஒரு பிள்ளைக்கு உணவு ஊட்ட நினைக்கிறாள். அந்தவகையில் இரு வகையான தாய்மைகள் உள்ளன. ஒன்று நிலவைக் காட்டி அன்னமூட்டுகிறது. மற்றது பேயை அல்லது பயமுறுத்தி அன்ன மூட்டுகிறது. இரண்டினதும் இலக்கு ஒன்றே அதே போலத்தான் வாழ்வியலின் உண்மை நிலமையை புரிந்து கொள்ள அல்லது மேம்படுத்த இரண்டு வழிகள் ஒன்று ஆன்மீகம் அல்லது நாஸ்தீகம்


ஆன்மீகமானது நிலவைக் காட்டி சோறூட்டியது நாஸ்தீகம் பேயை காட்டி சோறூட்டியது. தாய் நிலவைக்காட்டி சோறூட்டும் போது பிள்ளை மேல் விழுந்த மழைத்துளியால் பிள்ளைக்கு காய்ச்சல் வந்து விடுகிறது. அதை வைத்து விதண்டா வாதமாக பிள்ளைக்கு நிலவைக் காட்டி சோறு ஊட்டாதே என்று அடம் பிடிக்கிறார் பெரியார்(( நாஸ்த்தீகம்)) அதற்கு பிள்ளைக்கு குடைபிடித்து சோறு ஊட்டுங்கள் என்கிறார் விவேகனந்தர்(ஆன்மீகம்).

இதை புரிந்து கொள்வார்களா? நரியார் சீ..சீ பெரியார் வா(பே)திகள்

Monday, December 24, 2007

Don't look at me

அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்கள்!


அனைத்து வலைப்பதிவு அண்ணாக்களுக்கும் அக்காக்களுக்கும் இந்த அன்புத்தம்பி தமிழ்பித்தனின் நத்தார்(கிறிஸ்மஸ்) வாழ்த்துக்கள்

மற்றும் இப்ப இந்த குட்டீஸ்களும் வந்திட்டுதெல்லோ அவங்களுக்கு குட்டி மாமாவின் வாழ்த்துக்கள்

Sunday, December 23, 2007

PIT க்கு எடுத்த படம் ஆனால் போட்டிக்கு அல்ல!

போட்டிக்காக எடுத்த படம் ஆனால் போட்டிகளில் ஈடுபாடு இல்லாததனால் இதை சும்மா உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் கடந்த ஞாயிறு பனிப்புயல் அடித்து ஓய்ந்தது அடுத்த நாள் திங்கள் காலையில் காலேஜ் போகும் போது எடுத்தது. படத்துக்கு காட்சி தந்த வியட்நாம் நண்பனுக்கு நன்றி!
நண்பா குண்டுப் புயலுக்கே நாம் ஓய்ந்ததில்லை
இந்த பனிப்புயலுக்கா சுறுண்டு விடப்போகிறோம்
இன்னும் வேகமாக காலை எடுத்து வை
விடியல் அருகிலே தெரிகிறது!

இந்த புகைப்படம் எடுக்க உதவிய எனது கைத்தொலைபேசிக்கு நன்றி!

Friday, December 21, 2007

நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே! ((தமிழ்மணத்திற்க்கு))

நான் தமிழ்மணத்தால் நீக்கபட்டவன் என்ற வகையிலும் அதிலும் எந்த முன்னறிவிப்போ அல்லது எச்சரிக்கையே விடுக்கப்படாமல் "எம்..மாம்...பெரிய மனசு"" என்று பதிவிட்டு 15 நிமிடத்துக்குள் எனது பதிவு தமிழ்மணத்தை விட்டு நீக்கபட்டது. என்பது அனைவரும் அறிவர் அதற்காக நான் கண்ணகியைப் போல் நீதி கேட்டு எதையாவது எரிப்பேன் என்று நினைக்காதீர் நான் காத்திருந்த நல்ல சந்தர்ப்பம் என கருதி இது தொடர்பாக விளக்கம் அளிக்கலாம். என நினைக்கிறேன். உண்மையில், தமிழ்மணம் திரட்டியில் இருந்து தனது அதிகாரத்தை பயன்படுத்தி பதிவர்களை நீக்கம் அதிகாரத்தை நான் வரவேற்கிறேன். அது ஆபாசத்தை குறைக்கும் என்பதில் எனக்கு உடன்பாடே ஆனால் அந்த அதிகாரமே துஸ்பிரயோகமாகி சர்வதிகாரமாக மாற்றம் பெறுகிறதோ அப்போது அது வன்மையாக கண்டிக்க அல்லது எதிர்க்க வேண்டியது. கடந்த சில காலங்களாக தமிழ்மணம் தன்னை சர்வதிகாரியாக (தமிழில் சிறந்த திரட்டி என்பதில்) காட்டிக்கொள்வதிலும் அதை உறுதி செய்ய பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததையும் எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது என பலர் கூறுவதை காணமுடிகிறது. சரி தமிழ்மணம் என்பது ஒரு தனி வரம்புக்கு உட்பட்ட நிறுவனமாக தொழில்படுமிடத்து அங்கு சேவை என்ற பதம் தேவை அற்றதாகிறது அத்துடன் பொது கருத்து கேட்டறிதல் என்பதும் போலி நாடகமாகி விடுகிறது.

நானெல்லாம் தமிழ்மணத்தைப் பார்த்தே பதிவெழுத வந்தவன் என்பதனால் நான் அதற்க்கு தலைவணங்குகிறேன். நான் (பதிவர்கள்) தலை வணங்குகிறேன் என்பதற்காக உன்கருத்துடன் ஒத்துப்போகுமாறோ அல்லது உன் குறையை என்னை சுட்ட விடாமல் தடுத்தலோ ஏற்கத்தகுமா?? (அதற்காக அப்படி நடந்து விட்டது என்று கூற வரவில்லை அப்படி நடந்தால் அவை ஏற்க முடியாது என்றே கூற விளைகிறேன்

அதற்காக நான் விலக்கபட்டைமையை நான் ஒரு போதும் நான் விமர்சிக்கவில்லை ((இதுவரை)) அதை அன்புடன் அரவணைத்து அதை இதுவரை மீண்டும் சேர்க்க முயலாமல் அதை ஒரு கடந்த பாதைகளின் அடையாளமாக காட்டவே முயல்கிறேன்

தமிழ் மணத்திடம் நான் கண்ட மிகப் பெரிய குறை அந்த 24 மணி அவகாசம்
ஐயா! தமிழ் மண நிர்வாகிகளே நாங்கள் உங்களை போல் கணணிக்கு முன்னமர்ந்து ஜீமெயிலை திறந்து வைத்துக் கொண்டு வரும் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தபடி வேலை செய்பவர்கள் அல்ல. நாலு தட்டு கழுவினால்தான் நாளைய தட்டில் நமக்கு சோறு 24 மணி நேரத்தில் பதிலைத்தா என்று நீ அதட்டும் போது நாம் தட்டு கழுவுதலை விட்டு விட்டு உமக்கு பதில் போடுவதா கொஞ்சம் சிந்தித்துப் பார். எம்மால் சில வேளைகளில் வாரத்துக்கு கூட இணையப்பக்கம் வரமுடியாமல் போகலாம்

நாம் நக்கீரர் பரம்பரை நெற்றிக்கண்ணை திறக்கினும் குற்றம் குற்றமே! அதற்காக நெற்றிக்கண்ணை திறக்காதேயும் நான் தாங்க மாட்டேன். அழுதுடுவேன்

என்னை எழுதத் தூண்டிய பதிவு
http://kanimai.blogspot.com/2007/12/auhority.html

Thursday, December 20, 2007

பனிப்புயலுக்குள் ஓர் காதல் (கவிதை)

பனிப்புயல் நாட்டின்
பட்டுப் பூவே
உன் பாதம் பட்டு
பனித்துளியே பூரிப்பில் உருகுதடி
உன் பாதம் தேடி
ஒலிவ் இலைகள் தேடி
அலைந்து இறுதியில்
உன் பாதங்களை பாதணிகள்
தழுவியிருப்பது கண்டு
அதன் மேல் கோபம் கொள்கின்றன

உன் கண்களை கயலுக்கு (((மீனுக்கு)))
ஒப்பிட்டவன் யார்
தூண்டிலுக்கு ஒப்பிடச் சொல்
ஏனெனில் அதில் விழுந்து
நாம் தானே மீனாக துடிக்கிறோம்

உன் நெற்றி அர்ஜுனனின் வில்லா
அதில் நானேற்றியா காதல் பாணம் எய்தாய்?

உன் கூந்தல்கள் மழை பொழியும் கார் மேகம்
உன் கூந்தல் அழகில் இதையத்தில் இரத்தம் சொட்டுகிறதே

உன் குரல்கள் கேட்டு குயில்கள் ஆணவம்
அழித்துக் கொள்கின்றன


உன்னில் காமம் தேடினேன்
காதலை கண்டு கொண்டேன்
உன்னில் எதையே தேடினேன்
என்னைக் கண்டு கொண்டேன்

மாரப்பினுள் சுருண்டு கிடந்த இதயம்
இப்போ மனசு தேடி அலைகிறது
பெண்ணிகள் தசையால் பின்னபபட்டவர்
என்பது பொய் என உணர்த்தி
உணர்ச்சிகளின் உறைவிடம்
என புரிய வைத்தவளே

காதலுக்காக நானும் ஏங்குகிறேன்
ஆனால் ஏதோ என்னை தடுக்கிறது
அது! கடமையா
காழ்ப்புணர்ச்சியா
கீழ்படியா
குற்ற உணர்ச்சியா
எனக்கே புரியலையே!

Tuesday, December 18, 2007

விருதுக்காக எருதின் மீது சவாரியா?????

பட்டங்கள் விருதுகள் எல்லாம் நாட்டில மலிஞ்சு போச்சு பாருங்கோ எவனெவன் அதை கொடுக்கிறது அல்லது வாங்கிறது என்று விவஸ்தையே இல்லாமல் கிடக்கு இப்ப விருது என்றாளே ஏதோ பஞ்சு முட்டாசி மாதிரி மலிஞ்சு போச்சு

அந்த வியாதி இப்ப வலைப்பூவையும் ஆட்டத் தொடங்கிவிட்டது. அவனவன் எப்படியாவது ஒரு விருது வேண்ட வேணும் என்ற குறிக்கோளை விட்டுட்டு விருது வாங்கிறவனுக்கு அத்துடன் இரண்டு கும்மியும் மொக்கையும் இலவச இணைப்பாக எப்படி கொடுக்கலாம், என்றெல்லோ நம்மட பதிவர் சிந்தித்துக் கொண்டு இருக்கினம், அதுக்கில்ல 17 நடுவர்கள் அறிமுகம் செய்தாகி விட்டது. இவையளுக்கு ஸ்பெஷல் மொக்கைகள் வரலாம் என்று எதிர்பாக்கலாம் சரி இந்த விருது கிடைத்தவன் திறமையான எழுத்தாளன் என்று வைத்துக் கொள்வோம்.

அப்படி எடுக்கமுடியாமல் போனவன் என்ன எழுத்தாளன் இல்லையோஎங்கட எழுத்து பிடித்திருந்தால் ஒரு வரி பின்னூட்டம் மூலம் உட்சாக படுத்துகிறார்கள் தானே,அதை விட என்ன உற்சாக வேண்டிக்கிடக்க

என்ர பிரண்ட் ஒருத்தன் இருந்தவன் அவன் யாரையும் கொழுவி விடுறதெண்டாலே ஏதாவது போட்டியை இரண்டு பேருக்கும் இடையில் வைப்பான். அதனாலேயே, அவர்கள் இருவருக்கும் இடையில் கொழுவல் வந்துவிடும். அப்படி நல்ல நட்பாக இருக்கும் நம்மட வலைப்பதிவாளர்களை பிரிக்க இது ஒரு வழியாகிவிடுமோ என பயமாக கிடக்கு!

இந்த விருது போட்டியால் இங்க கட்சி கொடி பிரச்சாரம் என்று எல்லா கறுமாந்திரமும் வலையேறினாலும் ஆச்சரியம் இல்லை
அதுக்கிடையில் நடுவர்மார் பாடு திண்டாட்டம் தெரிவு செய்து முடிய எவனெவன் கத்தி பொல்லோட அலையிறானே தெரியவில்லை. எதற்க்கும் முடிவுகள் அறிவித்து 48 மணி நேரத்துக்கு எங்கள் நாட்டில் தேர்தல் முடிந்த பின்பு ஊரடங்கு சட்டம் போடுவது போல அனைத்து திரட்டிகளையும் மூடி விடலாம்

Saturday, December 15, 2007

காதலின் அறிகுறிகள் (இது காதல் காலம்)


காதல் புனிதமானது அதை எனது கவிதை மெரு கேற்றா விடினம் கொஞ்சமேனும் இழிவு படுத்தாமல் இருந்தால் சரி

காதலின் அறிகுறிகள்

அப்பன் அரக்கன் ஆவார்
அம்மா தோழியாவாள்
சகோதரன் இராவணன் ஆவான்
சகோதரியோ சூர்பனகையாவாள்

குளியலறை சுவர்க்கமாகும்
கட்டில் நரகமாகும்
காதலியை காணும் நேரம் நிமிடமாகும்
காதலியை காணா நேரம் வருடாகும்

அவளை சுற்றும் மற்றவருக்கு
நீ அசுரன்
அவளின் சிறுபுன்னகைக்கு தவமிருப்பதில்
நீ வசிட்டர்
அவர்கள் தாய் தந்தை உன்னைக் கண்டால்
நீ காந்தி

அவள் வருகையை எண்ணி- உன்
கண்கள் பூத்திருக்கும்
கால்கள் வியர்த்திருக்கும்
மூக்கு பனித்திருக்கும்
காதுகள் ஏனோ சலித்திருக்கும்

காகிதம் கடவுளாகும்
பேனா கவிதை கோட்டும் அருவியாகும்
காகிதக் கழிவால் குப்பைக் கூடை நிரம்பும்
உன் வானோலி காதல் கீதம்மட்டுமே ஒலிக்கும்

இவையேதும் உன்னில் நீ உணரா விடின் கட்டாயம் காதலித்துப்பார்
இக் காதலின் அறிகுறிகளை நீ உணர்வாய்!

காதல் இம்சை தொடரும்.......

Friday, December 14, 2007

இந்து தூக்கி எறிந்தது இஸ்லாம் மற்றும் கிறீஸ்தவம் ஏந்திக் கொண்டன

இந்து மதமானது மதத்துடன் சேர்த்து தன் மொழியையும் இலவச இணைப்பாக வழங்குவதில் குறியாக இருந்தமையே நவீன யுகத்தில் இந்து மதத்தின் வளர்ச்சியானது அல்லது தேய்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இஸ்லாமம் கிறீஸ்தவ மதங்கள் மொழியை ஒரு பொருட்டாக கருதாமல் இந்துவை போல் அல்லாது அந்ததந்த மொழி வளர்ச்சிக்காக உறுதுணையாக இருந்தன.

இந்துமதம் தனக்கென தரக்கட்டுப்பாடு என்ற வகையில் ஜாதியை பிரித்துக் கொண்டது ஜாதியானது அக்காலத்துக்கு இயல்பு பெற்றதாக இருந்திருக்கலாம்.
அக்காலத்தில் பிராமணர் ஆறிவு பெறக்கூடியவர்களாகவும் மற்றவர்கள் கொத்தடிமைகளாகவும் இருந்து வந்துள்ளனர். இதன் விளைவு அவர்கள் தாங்கள் இருக்கின்ற நிலமையை சிந்திக்க முடியாதவர்களாக இருந்தார்கள்

பின் தொடர்ந்து நடந்த முகலாயர்களின் படையெடுப்பு அவர்களை பிராமணிய பூனூல் கட்டுக்குலிருந்து வெளியே வந்து சிந்திக்க தூண்டியது. அதன் விளைவு வட இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பெருபாலானோர் மதம் மாறினர் . இது முஸ்லீம் மதத்தின் வீரியம் என்பதையும் விடவும் இந்து மதத்தின் குறைபாடு எனலாம்.

ஆனால் தென் இந்தியா இதனுள் ஏனோ பெரிதாக அமிழ்ந்து போய் விடாமல் இருந்தது.

பின் வந்த கிறீஸ்தவம் ஒப்பிட்டு ரீதியில் மக்களிடம் சென்று சேரவில்லை.

'இந்துமதம் தானாகதோன்றிய மதம் அதனிடை வந்த கயவர்களினால் வந்த ஜாதி என்ற பேயை ஓட்டும் வரை அதற்க்கு தேய்வு காலமே""

இஸ்லாமிய தளம் ஒன்றை பார்த்தேன் அங்கே அரபிக் உருது ஆகியவற்றுக்கு அடுத்து தாக தமிழையும் இணைத்து தளம் அமைத்திருக்கிறார்கள் சென்று முஸ்லீம் பாடல்களை கேட்டுப்பாருங்கள் எனக்கு முஸ்லீம் பாடல்கள் உயர் ஸ்தாயியில் பாடுவதாலே என்னமோ ரொம்ப பிடிக்கும்

ஜனாப் நாகூர் ஹனீபா (தொகுப்பு)
காயல் செய்கு முஹம்மது (தொகுப்பு)

Wednesday, December 5, 2007

britny spears தனது 26 வது பிறந்ததின வாழ்த்துதுக்கள்


britny spears தனது 26 வது பிறந்ததினத்தை கடந்த வீக்கென்டில் கொண்டாடினார்.
அவருக்கு தமிழ் ரசிகர்கள் சார்பாக தமிழ்பித்தனின் வாழ்த்துக்கள்

கொசுறு:-என்னதான் இருந்தாலும் அசின் அக்கா அசினக்காதான்

மேலதிக செய்தி:-
http://www.people.com/people/videos/0,,20163869,00.html

பிகருக்கு வரவிலக்கணம்.....


எனது நண்பனின் பிறந்தநாள் கடந்த ஞாயிறு கொண்டாடப் பட்டது. நானும் போனேன். அங்கே எல்லோரும் ஏதோ விட்டுக் குடித்துக் கொண்டிருந்தார்கள். நான் வழமையாக அவற்றை எல்லாம் புறக்கணித்து விட்டு குழந்தைகளின் சங்கீத கதிரை விளையாட்டில் நடுவராக வந்து அமர்ந்து விடுகிறேன்.
((மூன்று வருடமாக தண்ணிக்கே தண்ணி காட்டுறம்))

ஆனால் நண்பன் விடுவதாக இல்லை வா நண்பா வந்து கொஞ்சமாக தனக்கா என்றான்.(நான் அடிச்சாத்தான் அவனுக்கு போதையேறுமோ?.) சரி யெண்டு (நல்ல சாட்டு கிடைத்தது). நண்பா உனக்காகதான் வாரன் மற்றம் படி எல்லாம் விட்டுட்டன் தெரியும்தானே என்று பீலா எல்லாம் விட்டபடி போய் அமர்ந்தால் வழமைபோல் அவர்களது தத்துவார்ந்த சிந்தனையை ஆரம்பித்தார்கள்.

அப்ப ஒருவன் டோய் ஸ்கூலுக்கு போறாய் ஏதாவது தமிழ் ஹிந்தி பிகருகள் அம்பிட்டுதோடா? என்று கேட்க.
((நாமளும் மிகவும் நல்லவன் தானே))

அண்ணா பீகரேண்டா என்ணணா? (நம்ம டாக்டர் ரைலில்)

அவன் ஆத்திரத்தில் ஆகா ஏறினத இறங்கப் பண்ணிடியேடா பாவி..

மச்சான் இவனுக்கு பிகரெண்டால் என்னனு தெரியாதாம் அதுக்கு ஒரு வரவிலக்கணம் எடுத்து விடு என்றான் அதுக்கு மற்றவன்...

பிகரெண்டால்!அலுங்காமல் குழுங்காமல் அம்சமாக செக்க செவேலென ஓரு கன்னிப் பெண்ணு இருந்தால் அது பிகர் எனப்படும் என்று முடித்தார்.

எனக்குள்ள தூங்கிக் கிட்டிருந்த கண்ணதாசன் அப்பப்ப பிரண்டு உறுண்டு படுத்தவர் இதைக் கேட்டவுன் எழுந்து இது பிழை என்றார்.(எல்லாம் இந்தால் உள்ள போனதால வந்த வினை)

அதுக்கு ஒருத்தன் நக்கீரர் ரைலில் சொற்குற்றமா? பொருள் குற்றமா? என்றான்.
அதுக்கு நான் எனக்கு மற்றப் பெக் வாக்காமல் இருக்கிறியளே அதுதான் குற்றம் என்றேன்.

சரி உள்ளேயிருந்து ஒரு குரல் ஊத்துடா இன்னும் ஊத்து அப்பத்தான் கண்ணதாசன் விழிப்பாரு என்று.. சரியெண்டு நானும் மடமடவென கொஞ்சத்தை அடிச்சுட்டு டேய் நிறுத்துங்கடா? என்றொரு சத்தம். (அடேய் யாரெண்டு கேளாதெயும் அது நான்தான்)

உதென்னடா? பிகருக்கு வரவிலக்கணம். அப்ப கறுப்பாயிருந்தால் பிகரு கிடையாதா? கன்னி மட்டும் தான் பிகரா?

அப்ப சொல்லேண்டா நீ என்றார்கள். நானும்...

அலுங்காமல் குலுங்காமல் ஒரு சுமாரான பொண்ணு எம்மைக் கடந்து போகும் போது அவளது கண்ணாணது எமது இதயச் செயற்பாட்டியலில் ஒரு நிமிடமெனிலும் தடுமாற்றத்தை உண்டு பண்ணுமாயின் அது பிகர் எனப்படும் என்றேன்.