Friday, December 19, 2008

toronto snow storm! வீடியோ

இன்று toronto வில் Snow storm காரணமாக போக்குவரத்துகள் மிகவும் நெரிசலுக்கு ஆளானது. அத்துடன் இன்றிலிருந்து குளிர்கால விடுமுறை ஆரம்பிப்பதால் அதுவும் நெரிசலை இன்னும் அதிகரித்தது. நானும் எனது நண்பனும் காரிலே snow storm உலாத்த சென்றோம். அதன் வீடியோ.

Friday, December 5, 2008

என்னோடு எப்போதும்…. மென்பொருட்களுக்கான தொடர் விளையாட்டு

எப்போதோ மாயா அழைத்திருந்தார். உடனே வரமுடியாதபடி மன உடல் சுமைகளும் இன்றும் பிற தார்ப்பரிய பொறுப்புக்களும் தடுத்தன, நேரம் கிடைத்த இந்த நேரத்தில் விரிவாக எழுதுகிறேன்.
((ஒவ்வொரு படத்திலும் அவற்றுக்கான இணைய இணைப்புள்ளது))
Maya:- இது முப்பரிமான கணணிச் சூழலில் அதிகமாக பயன்படும் ஒரு முப்பரிமான மென்பொருள். இதன் மூலம் முப்பரிமான தோற்றங்களும், அசைபடங்களும், இன்னும் பிற effectக்களும் உருவாக்க முடியும். இதற்க்கு வேகமான கணிணி வேலைகளை இலகுவாக்கும்.

இதே பயன்பாட்டுக்காக எனது கணணியில் படுத்துறங்கும் பிற மென் பொருட்கள்


3D MAX
XSI


Blender(இலவச மென்பொருள்)

Team viewer:- மல்டி மீடியா மாணவர்களில் மிகவும் அதிகமாக பயன்படும்; மல்டி மீடியா அல்லாத மென்பொருள் இது என்றால், அது மிகையாகாது. ஏனெனில் இதன் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ள ஒருவரது கணிணியை இயக்கவோ, tutorial செய்து காண்பிக்கவோ, அல்லது கோப்புக்களைப் பரிமாறவோ இது உதவும். இது முற்றிலும் இலவசமான மற்றும் 100% பாதுகாப்பானதாம்.

Adobe after effectcs3 :- இது மல்டி மீடியா உலகில் முக்கியமானதொன்று இதன் மூலம் வீடியோகாட்சிகளுக்கு Graphic effectகளை வழங்க முடியும்.


Adobe Illustratorcs3 ;- இதன் மூலம் 2D வகை உருவங்களை உருவாக்க முடியும்.


Adobe audition 3;- இது ஒலிப்பதிவு செய்யவும் மற்றும் ஒலிக்கலவை செய்யவும் உதவும்.

12voip;- இலங்கைக்கு மலிவாக voip call களை தரும் ஒரே voip provider (( 4Euro cents))Rapidshare manager;- Rapid share இணைப்புக்களை ஒவ்வொன்றாக copy past செய்து download செய்யும் சிரமத்தை குறைக்கிறது அப்படியே அனைத்து இணைப்புகளையும் இதனுள் paste செய்து Download செய்யலாம். ஆனால் கட்டாயம் நீங்கள் rapid share ன் premium கணக்கு வைத்திருக்க வேணும்பலர் பயன்படுத்தி நானும் பயன்படுத்தும் மென்பொருட்கள்
skype , live and yahoo masanger, photoshop CS3 , adobe flash CS3 realplayer, neroburner Quicktime player, Dvix player,WinRar

Thursday, November 27, 2008

மும்பை பயங்கரம்// நம்மூர் வெள்ளத்தில் மூழ்கியதாம்

முப்பையில் நடந்த பயங்கரவாத செயலால் இறந்த அனைத்து இந்திய சகோதரர்களுக்கும் மற்றை நாட்டனருக்கும் நினைவஞ்சலிகளை செலுத்திக் கொள்கிறேன். இன்று ஓர் இந்திய நண்பனுடன் Markam( canada) பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயத்துக்கு செல்ல முடிந்தது; அவர்கள் இறந்தவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்.

இந்த நேரத்தில் அனைத்து விதமான பயங்கரவாத செயல்களையும் எதிர்ப்பதுடன்; (மக்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள்) அதற்கு, அவர்களின் எந்த விதமான நியாப்படுத்தல்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

................................................................................

நம்மூர் வெள்ளத்தில் மூழ்கிருப்பதாகவும்! புயலின் தாக்கம் பற்றியும்! மேலே உள்ள செய்தி ரைப் அடித்துக் கொண்டிருந்த போது; எனது சகோதரன் தோலைபேசியூடாக அறிய தந்து கொண்டிருந்தான். விவசாயம் மற்றும் கால் நடைகள் முற்றாக அழிந்துவிட்டதாம். நேல் மூட்டைக்கு மேல் படுக்குமளவுக்கு வரலாறு காணாத மழையாம். அலுவலங்கள் மற்றும் பாடசாலைகள் அனைத்தும் அறிவிக்கப்படாத விடுமுறையில் பூட்டப்பட்டு இருக்கின்றன. மின்சார கம்பங்கள் பெருமளவில் சரிந்து வீழ்ந்து விட்டதனால், இருவாரத்துக்கு மின்சாரம் சாத்தியம் இல்லையாம்,,, (இது யாழ்பாண வடமராட்சி பகுதியின் நிலவரம்)

தமிழா! உன்னை இயற்கையும் சீண்டி விளையாடுதடா,,,,,,,

Thursday, November 20, 2008

இணையத்தில் மாவீரர்க்கு விளக்கேற்றுவோம் வாருங்கள்!


மாவீரர் வாரம் ஆரம்பித்த விட நிலையில் எம் உரிமைக்காக தம் இன்னுயிர்களை எல்லாம் உவந்தளித்த அந்த உத்தமர்களுக்கு புலம்பெயர் தமிழர்களும் அனைத்து தமிழ் சார் உணர்வாளர்களையும் இணையத்தில் விளக்கேற்ற அழைக்கிறோம்
இணைய முகவரி http://www.karthikai27.com/

தகவலுக்கு நன்றி CTR தமிழ் வானோலி கனடா

Wednesday, November 5, 2008

you want to speak for us?.

அன்பார்ந்த தமிழ் உணர்வாளர்களே! இந்த ஒளித்தொகுப்பு கனேடிய மாணவ சமுதாயத்தால் பல்லின சமூகத்திடம் எமது பிரச்சினை போய் சேருமாறு ஆங்கில மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது கனடாக்குள் மட்டும் முடங்காமல் இந்த அகன்று விரிந்த இணையம் மூலம் உலக உள்ளங்கள் அனைத்தையும் தொட நான் Diggல் இணைத்திருக்கிறேன். அங்கு சென்று வாக்களித்து அது பலமடைய உதவுமாறு வேண்டுகிறேன்! அத்துடன் social இணைய தளங்களினூட இயன்றவர்களுக்கு தெரியப்படுத்தவும்! நன்றி!

If you have time please speak for us. They can't run...

வீடியோ பார்க்க | digg ல் வாக்களிக்க

Sunday, November 2, 2008

நானும் helloweenனும்

நேற்று முன்தினம் வெள்ளி அன்று! சிறுவர்களுடன் சிறுவர்களாக நானும் இனிப்பு சேகரிக்க சென்றேன். அதே வேளை கல்விக் கலாசாலைகளில் ஆசிரியர்கள் பல்வேறு வகையாக உடைகளில் வந்து அசத்தியிருந்தார்கள்.


அன்று எனது கமராவுக்குள் அகப்பட்ட சில புகைப்படங்கள்.
div>

Saturday, November 1, 2008

இவை ஏன் குப்பறப் படுக்கினம்???

ஒருவர்:- இவை ஏன் குப்பறப் படுக்கினம்.

மற்றவர்: ஒரு வேளை இவையள் சிறிலங்காவுக்கு மச்சுக்கு போறதுக்காண்டி பயிற்சி எடுக்கினமோ?? ஏனென்றால் இப்ப எங்கட தம்பிகளுந்த பிளேனுகள் அறம்புறமாக கொழும்புல வெளுக்குதல்லோ?? அதனால ஏதும் இல்லாத பொல்லாதது எல்லாம் சொல்லி வெருட்டியிருப்பாங்கள். அங்க பிளேன கண்டாலே பலருக்கு வியர்கிறதா அறிஞ்சன்.

முதலாமவர்: மகிந்தவே குண்டைப் போட்டுட்டு புலி போட்டுட்டுது என்றால். உலகம் நம்பிடுமல்லோ??

மற்றவர்;-அவங்கள் எப்ப எங்க அடிப்பாங்கள் எண்டு யாருக்கும் தெரியாது! ஆனால் அடிக்க வேண்டிய நேரத்தில கரக்ரா குறிதவறாமல் அடிப்பாங்கள். அதுதான் அவங்கட 30 வருட வரலாறு. அது உலகுக்கும் தெரியும்.
எங்கேயோ கப்பல் அடிச்சிட்டாங்களாம் நில்வாறன் செய்தி கேட்டுக் கொண்டு..........................

Friday, October 31, 2008

இலங்கை தமிழர் நிவாரணத்திற்கு ஷூ பாலிஷ் செய்யும் இளைஞர்


திருநெல்வேலி: இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்காக, இளைஞர் ஒருவர் பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து ஷூ பாலிஷ் செய்து, நிதி திரட்டி வருகிறார். நெல்லையை சேர்ந்தவர் பாபுராஜ் (30). சமூக சேவைகள் செய்து வருகிறார். அண்மையில் சென்னை அருகே திருக்கழுக்குன்றத்தில் இதயேந்திரன் என்ற மாணவர் விபத்தில் சிக்கி இறந்தபோது அவரது இதயம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ததற்காக அவரது தந்தை டாக்டர் அசோகனுக்கு, நெல்லையில் பாராட்டி விருது வழங்கினார்.


இவர் நேற்று காலையில் பாளையங்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து அங்கு வருகிற பயணிகளின் ஷூக்களுக்கு பாலிஷ் செய்தார். அதற்கு கட்டணம் என்றில்லாமல் நன்கொடையாக எவ்வளவு தந்தாலும் வாங்கிக் கொள்கிறார். ஒரு வாரத்திற்கு இதே போல ஷூ பாலிஷ் செய்து இதன் மூலம் கிடைக்கும் தொகையை, இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

thanks dinamalar

Monday, October 27, 2008

ஈழம் வாழ தமிழ்நாடு கைகொடுக்கும்....

தமிழக உறவுகளே இரத்தம் சிந்தும் எனது உறவுகளுக்காக பொங்கு தமிழ் உண்ணாவிரதம் ஆர்பாட்டம் என அனைத்தையும் செய்து களைத்துவிட்டோம்.

தமிழீழ மக்களின் வாழ்வை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் எதிரி தனது நேச நாடுகளின் கால்களில் விழுந்து உணவுக்கே அல்லாடுகிற நாட்டிடை குண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் நிரப்புகிறான். ஒரு வல்லாதிக்க நாட்டுடன் மோதுவது பொல மூர்க்கமாக அழித்துக் கொண்டிருக்கிறான். "அ" எழுத வேண்டிய கைகள் அங்கே சிதைக்கப்படுகின்றன.

உங்களால் முடியும் தமிழக உறவுகளே தூங்கும் அனைத்து தமிழக உறவுகளும் விழித்தெழுங்கள் உமை விட்டால் எமக்கு வேறு நாதியில்லை கரம் கொடுங்கள். இதை விட்டால் தமிழனில் சாம்பல் மேட்டிலேதான் அனைவரும் கண்ணீராலே கருமாதி செய்ய நேரிடும் இதை விட்டால் வேறு தருணம் கிடையாது.

"ஒன்று படுவோம் வென்று விடுவோம்"
(((தவறாது வீடியோ பாடல்களை கேட்கவும்)))

நம்பியே கெட்டோம்!

எங்கள் உறவுகள் இரத்தம் சிந்ததல் கண்ட கலைஞர் மனம் கரைந்தாரே! என்று மெய்சிலிர்தோம் நேற்றைய செய்தி கேட்டு மெய்அதிர்ந்தோம்.

என்ன வானாலும் தலைவன் வழியில் ஈழத்தமிழ் மக்கள் அணிதிரண்டு தமிழ்மண் பெறுவர் என்பது திண்ணம்!

ஓயாது உழைத்திடும் அலையான கடலே தமிழீழம் தனை நோக்கி விரைந்திடும் படையே!

Friday, October 24, 2008

விடியலை நோக்கி,,,,,,

எம் தமிழக உறவுகளுக்கு!
கொட்டும் மழையிலும்
கோடி கோடியாய்
எம்மை நோக்கி உங்கள்
அன்புக் கூட்டமே

தமிழக முதல்வருக்கு!

தமிழக முதல்வரே
தமிழுலகின் மூத்தவரே
தயையுடன் எமை வாரி அணைத்தவரே

தள்ளாத வயதிலும்
கொட்டும் மழையிலும்
உடன் பிறப்புகள் உயிர்காக்க
வீதி வந்தவரே!

மற்றேரர்க்கு!
அணல் தெறிக்கும் உங்கள் பேச்சு
எமக்கு புதுரத்தம் பாச்சுகிறது
சிறை என்று தெரிந்தும் சீறிப்பாயும்
சிறுத்தைகளே

தங்களின் அன்புக்கும் எனது வணக்கங்கள்

-ஒரு தேசம் பிரிந்த அகதி!

தனியே ஈழத்து பதிவுகளுக்காக மட்டும் தொடர்வேன்,,,,,,,,,,

Tuesday, May 13, 2008

அம்மா.. அம்மா எந்தன் ஆருயிரே..

அன்னையர் தினம் கடந்து விட்ட நிலையில் அனைத்து அன்னையர்களுக்கும் இந்த பித்தனின் வாழ்த்துக்கள்.

இன்று அன்னையர் தின சிறப்பு கவியும் கானமும் கேளுங்கள்


Wednesday, May 7, 2008

பாழைக்காட்டுப் பக்கத்திலே.........

அண்மையில் வெளிவந்த "யாரடி நீ மோகினி" என்ற திரைப்படத்தில் நயந்தாராவின் சகோதரிக்கும் தனுசுக்கும் Remix பாடல் வழங்கப்பட்டிருக்கும் அதனுடைய பழைய பாடலானது வியட்நாம் வீடு திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது அப்பாடலை கேட்டுத்தான் பாருங்களேன்.

வியட்நாம் வீடு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்


யாரடி நீ மோகினியில் இடம் பெற்ற பாடல்

Monday, May 5, 2008

மகனுக்கு ஏற்ற தந்தை!

கல்லூரியில் கல்வி கற்க்கும் ஒருவன் தந்தையிடம் பின்வருமாறு சூட்சுமமாக பணம் கேட்கிறான்

Dear Dad,
$chool i$ really great. I am making lot$ of friend$ and $tudying very hard. With all my $tuff, I $imply can`t think of anything I need. $o if you would like, you can ju$t $end me a card, a$ I would love to hear from you.
Love,
Your $on

அதற்கு தந்தை அளித்த பதில்

Dear Son,
I kNOw that astroNOmy, ecoNOmics, and oceaNOgraphy are eNOugh to keep even an hoNOr student busy. Do NOt forget that the pursuit of kNOwledge is a NOble task, and you can never study eNOugh.
Love,
Dad

Monday, April 7, 2008

நட்புக்கு ஏன் இந்தப் பிரியாவிடை!

Monday, March 31, 2008

அஜித்க்கு எயிட்ஸா?????????


பில்லாவில் அஜித்


எயிட்ஸ் நோயினால் பாதிக்கபட்ட அஜித்தமிழ் திரையுலகத் தலை என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் அஜித்குமார் சில தினங்களாகவே நோய்வாய்பட்டிருந்தார். நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து கிடைத்த மருத்துவ அறிக்கையில் அவருக்கு எயிட்ஸ் என்ற செய்தி எல்லா தமிழ்திரையுலக ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இது எவ்வாறு தொற்றியது போன்ற தகவல்களை அஜித்தோ அல்லது மருத்துவமனை வட்டாரங்களோ வெளியிடமறுத்து விட்டன. மனைவி சாலினி கண்ணீர் தோய்ந்த முகத்துடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிற்குறிப்பு:- அனைவருக்கும் முட்டாள் தின வாழ்த்துக்கள் ((ஸ்பெசலாக கனடா வருகை தந்திருக்கும் சயந்தன் அண்ணாவுக்கு))

கொசுறு:- பிள்ளையார் சஷ்டி வாழ்த்து சொன்ன போது அக்கா ஒராள் எனக்கு முட்டாள் தின வாழ்த்து சொல்ல ஆசைபடுதாக சொன்னவா ஆனால் எனக்கு அவா சொல்லவில்லை இன்று எனக்கு நித்திரையும் வராது போல கிடக்கு

Thursday, March 27, 2008

இப்படியா ஒருத்தனைப் போட்டு அடிக்கிறது????துஷாரா பெரீஸ் மாத்தையா இவ்வளவு நாளும் பேப்பரிலையும் கற்பனையிலும் தான் தமிழனின் அடி பார்த்திருப்பா.

அப்பு! எப்படி அனுபவம்.

Monday, March 24, 2008

யாரிவளோ??????????????????????


<
இது யாரென்று கண்டு பிடிங்க பார்ப்பம்

தமிழ் பித்தன் மனமெல்லாம் இவள் மயம்

Saturday, March 22, 2008

பெண்களே இப்படித்தான் ஆண்களை கவிழ்கிறனீரா????


Comedy - Watch more amazing videos here

தயவு செய்து இதை காமடியாக மட்டும் பார்க்கவும்

Monday, March 17, 2008

அக்கா ரவுசரை உருவிட்டாளே!

ஆகா! அவனா நீ!

Friday, March 14, 2008

செல்லா அண்ணை உங்களிட்டையும் அது இல்லையா???

//வேற என்ன சொல்ல!?... என்னிடம் களிம்புகள் கைவசமில்லை என்பதைத்தவிர!////

உங்கள தானே முழுமையா நம்பினம் இப்படி கழுத்தறுதிட்டியளே

Thursday, March 13, 2008

அவளுக்கும் தமிழ்((....)) என்று பெயர்...

கான பிரபா நன்னாதான் பாட்டுப் போட்டாரு திடிரென கொழுவி அண்ணை பாட்டுப் போட்டாரு பின் அக்காவும் போட்டாரு நான் மட்டும் ஏன் போடலை???
அப்ப போட்டுட வேண்டியதுதான்.
பஞ்சவர்ண கிளி திரைப்படத்தில் இடம்பெற்ற வரிகள் கேட்கும் போதே
புல்லரிக்கிறது


ஜோரா கை தட்டுங்கோ! நான் எழுதிய கவிதையை அக்கா திருத்தித் தந்துட்டா???

பிழை கண்டுபிடித்து பட்டம் வாங்கும் நக்கீரர் பரம்பரை அக்காவே! இந்த செல்லத்தம்பியின் கவிதையில் சொற்பிழை பொருட்பிழை நடைப்பிழை என ஏதும் இருப்பின் அவற்றை திருத்தி தந்தால் வருகிற நோவல் பரிசுக்கான இலக்கிய விருதுக்கு அனுப்ப வசதியாக இருக்கும்

எனது மனதில் பட்டவரிகள்

வந்தாள்
துண்டு விரித்தாள்
சரித்தாள் எனை
தொட்டாள் அங்கம்

வியர்த்தது மேனி
விட்டது நாணம்
தொட்டது சொர்க்கம்
கேட்டது சத்தம்
கலைந்தது கனவு
நனைந்தது படுக்கை

ஆனாலும் அக்கா திருத்தினால் இப்படித்தான் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு ஊகம்
((மாற்றப்பட்ட வரிகள் bold செய்யப்பட்டிருக்கின்றன))))

வந்தாள்
துண்டு
விரித்தாள்
சரித்தாள்
எனை தொட்டாள்
அங்கம்


விறைத்தது
.........

விட்டது
நாணம்
கிழிந்தது
...........
கேட்டது
சத்தம்
கலைந்தது
கனவு
நனைந்தது
......

Monday, March 10, 2008

உண்மையைச் சொல்லு இங்கதான கொப்பி பண்ணிணாய்??

நாங்கள் தான் copy paste இல் வல்லவர்கள் என்று பார்த்தால் இவர்கள் எங்களை வென்றுவிடுவார்கள் போல கிடக்கு!

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு!

சிறிகாந்தேவா அண்ணா


இந்தப்பாட்டைஇங்கேதான் கொப்பி பண்ணியல் உண்மையை சொல்லுங்க!

Saturday, March 8, 2008

புதுப்பெடியனை வெளியில வரவிடடி

இதென்ன கொடுமை சரவணா??

Monday, March 3, 2008

வலைப்பதிவுலகில் 3 ம் ஆண்டு முடிந்து 4 ம் ஆண்டில்

இது வரை எனது அரட்டல்களையும் ஆத்திரங்களையும் கோமாளித்தனங்களையும் ரசித்தும் கண்டித்தும் வந்த எனது வலைப்பதிவு வாசகர்களுக்கு பல கோடி நன்றிகள். எனது வலையுலகம் சார்ந்த ஒரு காலப் போக்கின் அட்டவணை
1999- முதலில் கம்பியூட்டரை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கண்ணுற்றேன்

2001- கம்பியூட்ரை முதல்தடவையாக எனது கரங்கள் தழுவுகின்றன இடம் வல்லை சிதம்பர கல்லூரியில்

2004-ஜனவரி - முதல் தடவையாக இணையத்தை பாவித்தேன் ((அப்ப எல்லாம் இணையம் பற்றி ஒன்றுமே தெரியாது சில பலான மற்றும் சஞ்சிகை செய்தி தளங்களை தவிர))

2004-ஓகஸ்ட்- முதல் தடவையாக யாகூவில் மின்னஞ்சல் கணக்கு திறந்தேன்

2004-டிசம்பர்-வெப்தமிழன் ஊடாக தமிழ் வலைப்பூ தொகுப்பை கண்டேன்.

2005-பெப்ரவரி- நானும் நீண்ட கால போராட்டத்தில் தமிழ் யுனிகோட்டில் அமைந்த
வலைப்பூவை அமைத்தேன்

2005-மார்ச்-தமிழ் மணத்தில் இணைந்து கொள்கிறேன்

2005- ஏப்ரல்- எனது முதல் இணைய நண்பனாக வசந்தன் அவுஸ்ரேலியாவிலிருந்து அறிமுகமாகிறார்

அதனை தொடர்ந்து சயந்தனும் அறிமுகமாகிறார்

2005-ஓகஸ்ட்- வசந்தன் தந்த தகவலின் அடிப்படையில் நெல்லியடியில் குழைக்காட்டான் அல்லது விஜயன் என்பவரை சந்திப்பதன் மூலம் யாழ்பானத்தில் அது முதல் வலைபதிவர் சந்திப்பாகிறது

விஜயன் தந்த தகவலின் படி ஈழநாதனை அடையாளம் கண்டு ((எனது வீட்டுக்கு அருகில் இருப்பவர்)) அவரை சந்திக் நினைக்கையில் அவர் மீண்டும் வெளிநாடு திரும்பிவிட்டார்.

2006 - ஈழநாதனை சிங்கையில் சந்தித்தது.

2006 செப்ரம்பர் - 2007- மார்ச் வரை எழுத முடியவில்லை அந்த இடை வெளிக்குள் எனது வலைப்பதிவு கவலையீனத்தால் அழிவுற்றது.

2007- மார்ச் - மீண்டும் எழுத தொடங்கியது.

இன்று கானா பிரபா இஸ்மாயில் வடுவூர் குமார் மயூரேசன் என பெரிய பட்டாளமே இணைய நண்பர்களாக இருந்தும் ஒருவருடனும் அலவளாவ நேரம் இல்லை

2007 ஓகஸ்ட்- தமிழ் it நீயுஸ் எழுத ஆரம்பித்தது.

2007-செப்ரம்பர் - தமிழச்சியுடன் நடந்த மோதலில் தமிழ்மணத்திலிருந்து தமிழ்பித்தன் நீக்கப்படுகிறது.

2007- ஓக்டோபர்- என் உலகம் ஆரம்பம்

இது வரை முன்நூறுக்கும் அதிகமாக எழுதி முடித்தாச்சு

முதலில் யாழ்பாணத்திலிருந்து எழுதியமைஇம் முறை என் ஏதாவது செய்யலாம் என்று எண்ணியதில் ஒலிப்பேழை மனதில் உதித்திருக்கிறது பார்ப்பம். என்னடா ஒவ்வொன்றையும் தொடங்கி அப்படி விட்டு விட்டு போறியே என்று நினைக்கிறது தெரிகிறது. என்ன எப்போது செய்யனும் என்று எனக்கு தோன்றுகிறதோ அது அப்போது கட்டாயம் செய்வன் இது எனது இயல்பு இது வலைப்பூவிலும் காணலாம்.

உண்மையில் யாழ்பாணத்தில் இருந்து எழுதும் போது சீரியசாக எழுதுவதுண்டு மொக்கை போடுவர்களை கண்டால் கோபம் வரும். இப்போ இயந்திரமாகி விட்ட வாழ்கையில் கிடைகிற சிறிது நேரத்தில் யாருடனாது செல்லமாக சில நெருடலும் வருடலும் அது உங்களை பாதித்தால் இந்நாளில் மன்னிப்பு கோருகிறேன். தொடந்தும் எனது வருடல்கள் தொடரும் நீங்கள் என்னை விரட்டி அடித்தாலும் கூட..........

இவற்றை எல்லாம் தந்த தமிழ் மணத்துக்கு சிரம்தாழ்த்தி நன்றி செலுத்துகிறேன்

நன்றி!

எப்படி இருந்தியள் இப்படி ஆயிட்டியளே...((பொங்களூரிலிருந்து நேரடி றிப்போட்)))

தமிழச்சி அக்கா சில நாட்களாகவே பெண் விடுதலை என்ற பெயரில் தமிழ்மணத்தையும் சூடாக்கி எங்களையும் சூடாக்கிட்டுவாறார். வருகிற 8 ம் தேதி மகளீர் தினம் அதை முன்னிட்டு NBC யில் சென்ற செய்தியை பிடித்து உங்களுக்கா...


இந்த சுதந்திரம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா,,,,

Sunday, March 2, 2008

ரொம்பத்தான் ஆடுறா.....

Friday, February 29, 2008

நாமளே திருந்தீட்டம் நீங்க திருந்தலையா???


Thursday, February 28, 2008

சுஜாதா எனும் வாரிசை இழந்த தமிழ்த்தாய்

சுஜாதா என்கின்ற ஒரு சிறந்த ஒரு எழுத்தாளனை நாம் இழந்து நிற்கிறோம். அவரது எழுத்துக்களுக்கு அடிமையாகாதவர்கள் இருக்க முடியாது. நான் மிகவும் விரும்பி வாசித்தது அவரது "கற்றதும் பெற்றதும்" ஆனந்த விகடனில் வந்த இதை தவறாது வாசிப்பேன்.

இணையம் எனது கரத்தில் தவழ துவங்கிய சில நாட்களிலேயே, (அக்காலத்தில் இணைய முகவரிகள் எங்களுக்கு தட்டுப்பாடு புத்தகங்களில் வருவனவற்றை சோதிப்பது தான் வழக்கம்)) நான் writersuyatha.com என்ற வலைத்தளத்தினுள் சென்று சனி தோறும் 10 மணி முதல் 11 மணி வரை அவருடைய அரட்டையில் கலந்து கொள்வது வழக்கம். பல காலங்களில் அந்த அரட்டையை கூர்ந்து கவனிப்பேனே ஒழிய நல்ல கேள்விகளை நான் தெடுத்ததாக தெரியவில்லை. அக்காலத்தில் யுனிக்கோட்டைப் பற்றியும் தமிழ் இணையம் பற்றியும் அதிகம் அரட்டப்பட்டன. எனக்கு அக்காலத்தில் இவை பற்றி எதுவும் தெரிந்திராத காலத்தில் சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல பார்த்ததுதான் மிச்சம்.

என்னவானாலும் கூட இன்று தமிழ் எழுத்து உலகத்தில் அவரின் இடத்ததை நிரப்ப எவரும் இல்லை என்பது மட்டும் உண்மை.

Tuesday, February 26, 2008

தமிழச்சியின் பதிவை நீக்கக் கோருவோருக்கு எச்சரிக்கை!

தமிழச்சியின் பதிவு காம நோக்கத்துடன் எழுதப்படுவதாக சில கிழட்டுச் சிங்கங்கள் கர்ஜித்துக் கொண்டிருக்கின்றன. அவர் ஆ..டி அடங்கிய வயது உங்களுக்கு புது உலகின் புதிய சிந்தனைகளை பற்றி தெரியாது. எங்கள் அருமை அக்கா இளையோரையும் கருத்திற் கோண்டு அவர் பதிவேழுதுவதை பொறுக்காமல் அவர்கள் கர்ஜிப்பதை தமிழ்வலைப்பதிவு இளையோர் அணி வன்மையாக கண்டிக்கிறது.

அத்துடன் இளையோர் அணி தமிழச்சியிடம் சில பரிந்துரைகளை செய்கிறது.
1)உங்கள் கதைகளுடன் நல்ல பிட் புகைப்படங்களை இணைக்குமாறும்.

2) தினமும் உங்கள் கதைகளை வாசித்து போ(F)ர் அடித்ததால் இனி சகிலாவின் பிட் திரைபடங்களை றபிட் செயருடாகவோ அல்லது யூரீப் ஊடாகவோ எங்களுக்கு இணையமூடாக வழங்குமாறும்.

கேட்டுக் கொள்கிறது.

மலையாள பிட் படங்களுக்கு கதையெழுதும் வாய்ப்பு கிடைத்தும் எங்களை மனதில் நிறுத்தி, இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது பணியை செவ்வனவே செய்துவரும் தமிழச்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, எங்கள் ஆண்மை இருக்கும் வரை உங்களுக்காக போராடுவோம்...
என்று உறுதி கூறுகிறோம்.
இப்படிக்கு
இளையோர் செயற்கழகம்
தமிழ் வலைப்பதிவுகம்
இணையம்.


என அண்மைய தினங்களாக தமிழச்சியை நீக்குமாறு கூறுவோருக்கு எதிராக இணையத்தில் கண்டன கூட்டத்தை கூட்டிய தமிழ்வலைபப்பதிவு இளையோர் கழகம். தனது கூட்ட முடிவில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Monday, February 18, 2008

ஒரு வயதுக்கு வந்த பெண் என் முன் ஒட்டுத்துணியின்றி... (நினைவில் மலர்பவை )

ஒரு அந்தி சாயும் பொழுது சன நடமாட்டமே குறைய தொடங்கிய நேரம் எனக்கு அப்போது ஒரு பதினைந்து வயசிருக்கும், இலகுவாக உணர்ச்சிவசப்படப் கூடிய வயது. அன்று, வழமைபோல் ரியூசன் வகுப்பை முடித்துக் கொண்டு எனது வீடு திரும்பிப் கொண்டிருந்தேன் எங்கள் ஊருக்கும் ரியூசனுக்கும் இடையில் அடர்பற்றைகளுக் கூடாக எனது சைக்கிளை மிதித்த வண்ணம்..

திடீரென என் கண்முன்னே செக்கச்சிவந்த ஒரு அழகான ஒரு வயசுக்கு வந்த பொண்ணு உடம்பிலே ஒட்டுத் துணியின்றி அம்மணமாக!!

அவள் என்னை ஏதே ஏக்கத்துடன் பார்த்தாள். எனது நரம்புகள் முறுக்கேற உணர்சிகள் பொங்கியது ஓடிப்போய் பாய்ந்து அவளை வாரிஅள்ளி அணைந்து முத்தமிட்டு விட்டு இந்த இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறாய்!

எனது அடுத்தடுத்த கேள்விக் கணைகளால் திணறி அந்த ஒரு வயசு நிரம்பிய பிஞ்சு உள்ளத்தின் வாயால் பேச்சு திக்கித்திணறி வெளிவருகிறது அண்ணா பசிக்குது....

கடையில் ஒரு பண் வாங்கி கொடுத்து விட்டு பின் அவளை குடிகார தந்தையின் வீட்டில் இறக்கி விட்டு எனது வீட்டில் வந்து நடந்ததைக் நினைத்து பின்வருமாறு பராசக்தி வசனம் படித்தேன்!!!!!!!!!!!


காதலித்தவனுடன் கஞ்சியேனும் குடித்து வாழ்வேன்

என காதலித்தவனை மணமுடித்த உன்தாயின் குற்றமா?

அவன் பின் பெரும் குடியாரனாக மாறியது குற்றமா??

அந்த நேரத்தில் அவள் வயிற்றில் வந்து பிறந்தது உன் குற்றமா?

கூலி வேலைக்குச் சென்றவளின்

கற்புக்கும் கூலி கொடுத்தவனின் குற்றமா??

பின் அவள் உன்னை வளர்க்க நினைத்து

தன்னை முழுமையாக விலை கொடுத்தது குற்றமா??

அவள் விலைமாதுவாக மாறியது குற்றமா??

அவளை காலச்சாரத்தின் பெயரால் வேட்டையாடி

கலாச்சாரக் காவலரின் குற்றமா???

இது யார் குற்றம்.............???????

Monday, February 11, 2008

நான் முதல் பார்த்த நீலப்படம் (மீள்பதிவு)

அப்ப எனக்கு ஒரு பதின்ம வயது (13 அல்லது 14வயதிருக்கும் )இலங்கை கல்வி முறையில் சொல்வதானால் 8 ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தன். காமம் என்றால் என்ன என்று அறியத்தொடங்குகிற அல்லது ஆவல் படுகிற வயசு அக்காலத்தில் எங்களுக்கு எல்லாம் காமப் பாடம் புகட்டியது. ஒரு சில பத்திரிகைகளே. வாரமித்திரன்(வீரகேசரி வெளியீடு) தினமுரசு (ஈபிடிபி அரசியல் கட்சியின் சார்ந்த பத்திரிகை ) வாரமித்திரனில் வரும் உண்மைசச்சம்பவம் மற்றும் தினமலரில் வருகின்ற இடியமீன், ஹிட்லர் தொடர்கதைகள் அப்போதைய காலத்து எம் நண்பர் வட்டத்தில் மிக பிரபல்யம் வாய்ந்தவை. ஆனால் இவைகளை எங்கள் ஊர் நூலகங்களில் பெற்றுக் கொள்ள முடியாது. உதயன் வீரகேசரி தவிர்ந்த வேறு பத்திரிகைகளை அவர்கள் போடுவதில்லை. அதனால் அவர்களை மனதில் திட்டுவதும் உண்டு. வல்வெட்டித்துறையின் நகராட்சி மன்ற நூல் நிலையத்தில் தான் போய் வாசிக்க வேணும் அப்பத்திரிகைகள் வாசிப்பதானால் பெரிய கியூவே நிற்க்கும், காத்திருந்துதான் வாசிக்கவேணும்.பத்திரிகையை மட்டுமே படித்த நாங்கள் ஆங்கில படங்கள் தொடர்பாக அறிய தொடங்கினோம்

அக்காலத்தில் ஆங்கிலப்படங்கள் என்பதே கிடையாது. காரணம் யாழ்பாணத்தில் மின்சார விநியோகம் கிடையாது. அப்படி படம் எடுத்துப் போடுவதானாலும் இளைஞர்கள் பலர் சேர்ந்து மிக ரகசியமாக ஓடுவார்கள். (அக்காலத்தில் ஆங்கிப்படம் பார்ப்பதே பெரிய குற்றமாக நினைக்கபட்டது)சிறுவர்களை சேர்க்க மாட்டார்கள் அத்துடன் எங்களுக்கு தனியே படம் எடுத்து போடுவது என்பது எங்கள் சக்திக்கு அப்பால் பட்டதாகவே இருந்தது. (ஓர் சர்பத் குடிப்பதற்கே மாத கணக்கில் சேமிப்பு நடக்கும் காலம் அது) அக்கால கட்டத்தில் சிறிய அளவில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க ஆரம்பித்தார்கள் சரி நாங்களும் ஒரு நாள் ஆங்கிலப்படம் போட வேணும் என்று எல்லோரும் இலட்சியம் ஆக்கிக் கொண்டோம்அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினோம்

ஒரு நண்பனின் உறவினர்கள் வெளிநாடு போனதால் அந்த வீட்டை நண்பனின் குடும்பமே பராமரித்து வந்தது. அந்த வீடு எங்களுக்கு ஒரு பாசறை போல இருந்து வந்தது. (கள்ள இளநீ மரவள்ளி கிழங்கு அவித்தல் உடும்பு சுட்டு சாப்பிடுதல் போன்ற வற்றுக்கு அது எமக்கு பேருதவியாக இருந்து வந்தது ) அங்கே ரீவி டெக் ஆகியன இருந்தன. அதனால் ரீவி டெக் பிரச்சினை இருக்க வில்லை அவர்கள் வீட்டில் இருந்த மோட்டர் வயர் கொண்டு கள்ள கறன் (மின்சாரம்) பெறுவது என்பதும் முடிவாகியது. படக்கொப்பிதான் பிரச்சினைஅப்போதுதான் டைட்டானிக் படம் வந்து சக்கை போட்டுக்கொண்டிருந்தது.

அக்காலத்தில் பத்திரிகைகள் எல்லாம் அதில் வந்த காட்சிகளை எல்லாம் விபரணம் செய்து எழுத ஆரம்பித்தன. அது எங்களுக்கு பேரவாவையும் எதிர்பார்ப்பையும் தந்தது சரி இந்த படம் பார்ப்பது என்றும் முடிவெடுத்துக் கொண்டோம் இனிகொப்பி எடுப்பதில் பெரிய சிக்கல் பெரியவர்களுடன் திரிபவன் ஒருவனை வளைத்துப் போட்டால் காரியம் ஆகும் என நான் ஆலோசனை கூற எல்லோரும் அதற்க்கு தலையாட்டினார்கள் யாரை தெரிந்தெடுப்பது பெரிய பிரச்சினை நீண்ட கால புலனாய்வு முடிவுகளில் ஒருவனை தெரிந்தெடுத்தோம்அன்று அடித்த முயல்கறியுடன் அவனிடம் பேச்சுவார்தைகள் ஆரம்பமாகியது எங்கள் தரப்பு நிபந்தனைகள
* இந்த விடயம் வெளியில் தெரியக் கூடாது

* நீயும் எம்முடன் இருந்து பார்க்க கூடாது

அவன் அனைத்துக்கும் தலையாட்டிவிட்டு அவன் நிபந்தனையை சொன்னான்
*உடும்போ அல்லது முயலோ அடித்தால் எனக்கு அறிவிக்க வேண்டும்
*படக்கொப்பி வாடகை 30 இரண்டு தடைவையும் போய்வரும் ரான்ஸ்போட் செலவு 40 (சுண்டங்காய் காப்பணம் சுமைகூலி முக்கால் பணமாம் )பலருக்கு இந்த நிபந்தனையில் விருப்பம் இல்லை எனிலும ஒத்துக்கொண்டோம் (கோயிலுக்கு ஐஸ்கிறீம் குடிக்க வழங்கப்பட்ட காசுகள் அனைத்தும் சேமிக்கபட்டன)

இவ்வளவும் நடக்க டைட்டானிக் வந்து 3 மாதகாலத்துக்கும் மேலாகியது கொப்பியையும் கொண்டு வந்து தந்து விட்டு பின்னேரம் வாறன் போட கறன்டை கொளுவி வையுங்கோ என்று கூறி சென்றான்ஒருவன்தான் போஸ்டில் ஏறி கறன்ட் கொழுவ ஒப்புக்கொண்டான் (அவன் வீட்டையும் கள்ள கறன்ட் அவன்தானம் கொழுவானம் அந்த எக்ஸ்பீரியன் அடிப்படையில் அவருக்கு அந்த வேலை வழங்ப்பட்டது)இருட்டியது பெரிய ஆவவோடு இருந்தோம் கறன்டும் வந்தது அவனும் வந்து படம் போட்டுவிட்டு போய்விட்டான்

பேப்பரில் வாசித்த அனுபவத்தில் படம் போக போக கதை சொல்ல ஆரம்பித்தேன் (சிலருக்கு இது போறமையாகவும் இருந்தது ) எப்ப படம் கீறும் கட்டம் வரும் என ஆவலோடு எதிர்பார்த்தோம் அதுவும் வந்தது அவன் அவளை கூட்டிக்கொண்டு ஒரு தனியறைக்கு செல்கிறான் எங்கள் மத்தியில் மிகவும் அமைதி நிலவியது (அந்த நேரத்தில் யாரையாவது சொறிஞ்சாலே கொலைபண்ணியிருப்பார்கள் ) அவன் பென்சில் சீவியது தான் பார்த்தோம். ஒரு காட்சி கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து சென்றது. அக்காலத்தில் எங்களுக்கு ஸ்ரில்(still) பண்ணவோ றீபிளேய்( replay) பண்ணவோ தெரியவில்லை. திடீரென அவன் தான் கீறிய படத்தை காட்டுகிறான். அடப்பாவி எங்கேடா நீ சொன்ன கட்டம் என்று எல்லோரம் ஏக்கத்துடம் பார்க்க பெறுங்கோ சில வேளை இன்னொரு கீறல் கட்டம் வராலாம். என்று ஆறுதல் கூறினேன் பின் அப்படி ஒரு கட்டம் வரவேயில்லை. என்பது போக கப்பல் மோத முதல் இருந்த அந்த ஜீப் கட்டமும் இருக்க வில்லை எல்லொரும் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம். போந்து விசாரத்ததில் முந்தி வந்த கொப்பிகள் ஒழுங்காக வந்ததாம் பேந்து சிலரால் அந்த கட்டங்கள் நீக்குமாறு பணிக்கப்பட்டதன் காரணத்தால் அவை நீக்கபட்டதாம்

"அந்த கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து போனாலும் அது எங்களுக்கு நீலப்படமே"

Friday, February 1, 2008

தமிழச்சிக்கு தமிழ்பித்தன் ஜால்ராவா?? யாரிந்த தமிழ்பித்தன்????

என்னடா நம்மட பொடியலுக்கு இன்னும் சொறி கிழம்பவில்லை என்று பார்த்தால் நம்மட கொண்டோடி பின்வருமாறு சொறிந்து காட்டுறார்


அதுசரி, தீவாரே,
ஆய்வாளர் எண்ட வகையில உங்களிடம் ஒரு கேள்வி.

அண்மைய காலங்களில் 'தமிழ்(ப்) பித்தன்' தமிழச்சிக்கு வால்பிடித்து எழுதுவதிலுள்ள சூட்சுமம் என்ன? கடந்த காலங்களில் அவர் எழுதிவந்தவற்றுக்கு முற்றுமுழுதாக 180 பாகையில் திரும்பிநின்று ஜால்ரா தட்ட என்ன காரணம்?
கனடா மாற்றியதா? கன்னியர் மாற்றினரா? என்னதான் நடந்திருக்கும்?
துப்பறிந்து அல்லது துப்பியெறிந்துப் பதில் சொல்லும் தீவாரேவீணா துப்பியெறிந்து நேரத்தை வீணடிக்க வேணாம் இவன்தான் அந்த தமிழ்பித்தன்
பெயர்-தமிழ்பித்தன்

பிறந்தது -எங்கோ

வளர்ந்தது - அன்னை மடிக்குள்

வளர நினைப்பது -பெண்மை மடிக்குள்

சாதனைகள் - பேச்சளவில்

சோதனை - மூச்சளவில்

இழந்தது - காதலை

பெற்றது -நல்ல நட்பை

வாழநினைப்பது - நல்ல மனிதனாக

சாக நினைப்பது - ஒரு தமிழனாக

இதுவரை - எதிர்பாட்டாளன்

இன்று முதல் - மனதில் உள்ளதை உளற ஆரம்பித்தல்

பிடிக்காதது - பெண்மை உருவில் அலையும் .........

பிடித்தது - தாய்மை

வெறுப்பது - பெண் அடிமை

கொதிப்பது - சாதி முறமை

கனவுகள் - எல்லாம் அசின் மயம்

ஆசைகள்- நிறைய பிசினாய் மனதில் ஒட்டியபடி!


சொல்ல நினைப்பது `"நான் எதிர்பார்ப்பதெல்லாம் சாதிகள் அற்ற தமிழ் சமூகத்தையே, நாஸ்தீகமான தமிழ் சமூகத்தை அல்ல"
- தமிழ்பித்தன்

Thursday, January 31, 2008

தமிழச்சியின் அண்மைய பதிவுகளால் குழம்பிப்போன நாகரீக குஞ்சுகள்

எது நாகரீகம் என்கிறாய்!
அன்பான வார்த்தை கதைத்து
இடையே "அன்பே சிவம்" என்றும்
பசுவைத் தெய்வம் என்றும்
கூறி...

மனிதத்ததை அடிமையாக்கி
பரதேசிபோல் நோக்கும்
நீதான் நாகரீக கோமாளி!

திரோபதைக்கு துயிலளிக்கும் கண்ணண்
போருக்கு கணவரை தூண்டிவிட்டு
இரத்த களறி ஓட விட்ட
கதை கேட்டுப் பூரித்துப் போன
புனிதக் குஞ்சுகளே உன்னருகில்
எத்தனையர் துயிலின்றி
அதை நினையாத
நீதான் நாகரீக கோமாளி!

தர்மங்கள் அழிந்து அதர்மம் ஓங்கும் போது பிறப்பெடுக்கும்
கண்ணணிடம் ஓர் கேள்வி தர்மம் ஒரு கிலோ என்ன விலை??

தமிழ்மணத்தில் பரபரப்பு:- மீண்டும் தமிழச்சியின் தளம் தாக்கப்பட்டது

சில மாதங்களுக்கு முதல் தமிழச்சியின் தளம் உடால் செய்யப்பட்டதை அறிவீர்கள். அதைனை தொடர்ந்து தற்போது மீண்டும் இத்தளம் தாக்கப்பட்டிருக்குமே! எனச் சந்தேகம் எழுந்திருக்கிறது அந்த தளம் களவாடப் பட்டிருந்தால் அவர் இவர்தான்


இந்த பேட்டுச் சுரக்காய் வெறும் ஏட்டுச் சுரக்காயே!

கைவிரல் ரேகை தேய கணணியில் தட்டும் அக்கா தமிழ் இனம் உச்சம் தலையில் தட்டியே திருந்தல நீங்கள் கணணியில் தட்டியா திருந்த போகுது வெறும் ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாதம்.

Sunday, January 27, 2008

தமிழச்சியின் கோபம் நியாயமானதா????

எதையும் விளையாட்டாகவும் நகைச்சுவையாகவும் எதிர்வினைக் கருத்தாக எடுக்கும் எனது வாழ்வியல் குணாம்சம் தமிழச்சியின் விடயத்திலும் தாக்கத்தை காட்டியது ஆகவே இது நான் மனதளவில் எழுதும் ஒரு சீரியசான பதிவாக இருக்கும் என்று நம்புகிறேன்
தமிழச்சி சில காலமாக தவறான வார்த்தைப் பிரயோகம் செய்வதாக குத்தி முறிந்து கூக்கிரல் இடுகிறார்கள் பலர். அதில் இந்துத்துவ சாதிய வெறியின் கொப்பளிப்பு தெரிகிறது. இந்துத்துவம் செய்யாத சொல்லாத காம வன்மங்களையா தமிழச்சி குறிப்பிட்டு விட்டார் அல்லது கூறிவிட்டார்.

அவரது சமூகத்தின் மீதான நீயாயமான கோபக் கொப்பிளிப்பின் தடம் புரண்ட ஒரிரு வார்த்தைகளுக்கு அர்த்தம் தேட விளையும் மூடர்களிடம் சில கேள்வி;

சாதியம் சாதியம் என்று கூக்குரல் இடுகிறீர்களே ஒரு தாய் பெற்ற பிள்ளைகளில் ஒன்றை உயர்வாகவும் மற்றதை தாழ்வாகவும் பார்க்குமானால் அந்த தாயை தாழ்வாக பார்க்கப்படும் குழந்தை ஏற்ற மறுக்கிறது. அதே போல தாழ்த்தப்பட்டவனின் நிலை அதை நீங்கள் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்

ஒரு நாய்குள்ள மரியாதையை கூட தர மறுக்கும் சமூகத்திடம் தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வாறு அன்புடன் பழக முடியும். என நினைக்கிறீர்கள். இவற்றை எல்லாம் நியாயமான முறையில் சொல்ல விளைந்தால் தமிழச்சிக்கு சொல்லடி, செருப்பிடி, இணைய கயமை கடைசியாக வளர்மதியின் செவிட்டடி!

அவரின் கோபத்தையும் சமூகம் மீதான அக்கறையையும் கவனத்தில் எடுக்காமல் ஏதோ விதாண்டா வாதம் செய்தாலும் பரவாயில்லை அவரை புண்படுத்துமளவுக்கு நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது

"பார்ப்பனியமும் தீட்டாமையும் ஒழிப்போம் பகுத்தறிவு கொண்டே..."

Friday, January 25, 2008

பெரியார் திரையரங்கில் பலனா படமா???????


எனக்கு இப்ப வரவர ரைப் அடிக்க பஞ்சி பிடிச்சிட்டுது பாருங்கோ! அதனால தான் மேல உள்ள படத்தில் உள்ள வரிகளை எல்லாம் பெரிய ரைப்பிஸ்ட்(நன்றி கொழுவி அண்ணா) இருந்து கொப்பி பண்ணிப் போட்டன்

Monday, January 21, 2008

மின்னஞ்சலில் மின்னியது

Sunday, January 20, 2008

நானும் எனது உண்டியலும் ((நினைவில் மலர்பவை தொடர்கிறது))

அப்போ எனக்கு 10 , 11 வயசிருக்கும் அப்பா வங்கியில் பென்சன் எடுப்பதால் சித்திரைப் புத்தாண்டு அன்றைக்கு அப்பாக்கு ஒரு உண்டியல் மக்கள் வங்கியால் வழங்கப்பட்டது. அப்பா அதை எனக்கு பரிசாக அளித்தார். சரி ஒருக்கா நானும் அதை நிரப்பி பார்ப்பம் என்று தொடங்கியாச்சு கோயிலுக்கு போகேக்க தார காசெல்லாம் அதுக்க போச்சு.

அடுத்த, ஒரு நிரந்தர கொள்கை இருந்திச்சு அதுக்க ஐந்து ருபாவ தவிர வேற ஒன்றும் போடுவதில்லை. என்று அம்மம்மா அப்பப்ப கொஞ்ச காசு தர்றவா அதையும் கொண்டு போய் போடுவன். ((இதை அறிஞ்சு அவா காசுக்கு பதிலாக பண்டமாக வழங்க தொடங்கினது வேற கதை)) அப்பிடி இப்பிடி அங்க பிடுங்கி இங்க பிடுங்கி உண்டியலுக்க போட்டால் அது நிரம்பிற பாட்டை காணவில்லை. என்னடா, இது இப்போதைக்கு நிரம்பாதோ? என்ற ஏக்கம் வேற தினமும் குச்சி விட்டு அளந்து பார்கிறது. இப்பிடியே, ஏக்கத் தோட காலத்தை கழிச்சன்.

அப்ப, ஒரு நாள் வழமைபோல ரீயூஷன் விட்டு வேளைக்கு வீடு திரும்பினம் அம்மா உண்டியலை தலைகீழா கவித்த படி ஒரு குச்சியால ஒவ்வொரு காசு குத்தியா எடுக்கிறா. எனக்கு பொத்தண்டு வந்துதே கோபம். உடனே புத்தகங்களை எல்லாம் சுழட்டி எறிஞ்சிட்டு மண்ணுக்க வந்து பிரண்டு உறுண்டு அழ தொடங்கியாச்சு அப்பா வந்து சமாதானம் செய்து பார்த்தார் (((இதுதான் எங்க ஊர் சிறுவர் பாவிக்கிற அதியுச்ச ஆயுதம் இதை பாவிச்சா பேச்சு வார்த்தைக்கே இடமில்லை என்றுதான் அர்த்தம்)). சரி வரவில்லை ((((எனக்கு எள்ளுப்பாகு வேண்டத்தான் எடுத்தவா அம்மா)), உடனே கடைக்குப் போய் 200 ரூபாவை ஐந்து ரூபாவாக மாற்றி உண்டியலுக்க போட்டபொதுதான் அழுகை நின்னிஞ்சு.

அப்படி, இப்படியாக உண்டியல் நிரம்பிச்சு ஒரு தீபாவளிக்கு முதல் அதை உடைச்சு எண்ணினேன் 1885 இருந்திச்சு அப்ப நான் என்னை நானே கோடீஸ்வரனாகதான் எண்ணினேன் அப்ப இருந்த சந்தோசம் இப்ப ஒரு மில்லியன் லாட்டரி அதிஸ்டம் அடிச்சா கூட வருமா தெரியலை

11 வருடங்களின் பின் மீண்டும் இன்று ஒரு உண்டியலை வாங்கினேன்.சேர்ப்பதற்கல்ல சிதையாமல் இருப்பதற்க்கு!

Monday, January 14, 2008

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தை
எதை - நீ
எமக்காக - விதை-ப்பாய்
இந்நாளில்
சி-தை மீதான வாழ்க்கைக்கு தீர்வா?

கந்தக புகை மறந்து
மாசற்ற மாநிலம் கண்டு
மழுங்கி புகைகள் தெளிந்து
சிங்கள பேய்கள் ஓய்ந்து
தமிழர் தம் கரங்கள் ஓங்கி!
தாயகம் மணம் தரணி எங்கும் வீசிடவே
பொங்கிடுவாய் தமிழ் தை-மகளே

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Sunday, January 13, 2008

ஹி..ஹி சிரிங்க..!

நம்மட இரண்டு பேர் பிரான்ஸ் போய் வாழ்க்கையை தொடங்கினார்கள் அவர்கள் அங்க வேலைக்கு போவதும் வழக்கம் அங்கேயும் ஊரைப் போல சாப்பாடு கட்டிக் கொண்டு போவது வழக்கம். அவர்கள் வழமையாக வேலைதளத்தில்தான் உணவருந்துவது வழக்கம். அன்று ஒருவன் சொன்னான் "வா இன்று நாம் ஏதாவது உணவகத்துக்குப் போய் ஒரு குளிர்பாணத்தோடு உணவை அருந்துவோம்" என்று அதற்க்கு மற்றவனும் ஆமோதிக்கவே இருவரும் ஒரு உணவகத்தை அடைந்தனர். ஒவ்வொரு குளிர்பாணத்தை ஓடர் செய்து விட்டு தங்கள் உணவு பொட்டலங்களை பிரித்து உண்ண ஆரம்பித்த வேளை அங்கே வந்த உணவக மேலாளர் "இங்கே உங்கள் சொந்த உணவுகளை நீங்கள் உண்ணுவதை அனுமதிக்க முடியாது" என்றார் உடனே அவர்கள் "சரி சார்" என்று தலையசைத்து விட்டு தங்கள் உணவுப் பொட்டலங்களை மாற்றி உண்ண ஆரம்பித்தார்கள்

Saturday, January 12, 2008

கடந்த வருடங்களுக்கான விருதுகள் அறிவிப்பு!


எல்லாரும் விருது குடுக்கிறாங்கள் ((றூம் போட்டு யோசிச்சிருப்பாங்களோ??) நாமலும் நம்மட கடனுக்கு நாலு பேருக்கு விருது குடுப்பம் என்று முடிவெடுத்தன். யாருக்கு என்ன விருது குடுக்கலாம் என்று யோசிச்சு வைச்சுட்டு பேந்து பாத்தன் சரி நம்மட பதிவர்கள் என்ன நினைக்கிறார்கள் பார்ப்பம் என்று முடிவெடுத்து இப்ப விருதை உங்கள் கையில் விடுறன் கீழே காணப்படுகிற விருதுகளுக்கு யார் யார் பொருத்தம் என்று கூறுங்கள் சரியாக விடைகளை யார் அதிகம் கூறுகிறாரோ அவர் தமிழ் வலையுலக சிரஞ்சீவி 2007 என்ற வலையுலகின் அதியுயர் விருதைப் பெற்றுக் கொள்வார்

1) இசைப் புயல் இருப்பதால் இசைச் சூறாவளி (இவர் ஒரு பதிவிரதன்)

2) மஞ்சள் துண்டை கனவு காண்பவர் ((இவரின் பார்வையே ஒரு மாதிரிதான்))

3) தசாவதாரி ((இவர் தனது பூனைக்குட்டியை கனகாலமா தேடுறார் சுந்தரா ரவல்ஸில் வடிவேலின் பாஸ்போட்டை எலி கோண்டு போனது போல் இவரின் எலியை பூனைக்குட்டி கொண்டு போட்டுது அதுதான் தேடுறார் தப்பான அர்த்தம் எடுக்க வேண்டாம் கணணி சுண்டெலியை சொன்னேன்))

4)வெள்ளித்திரை இவருக்கு (((சின்ன))குட்டிகளென்றாலே குஷாலாயிடுவார்

5)சேகுவரா ((வலையுலக பொதுவுடமை வாதி))

6)ரவுசர்ப்பாண்டி ((இப்ப இவர் கிழிப்பது இல்லையாம் இவரின் கிழிக்கப்படுகிறதாம்))

7)வலையுலக சுப்பர் ஸ்ரார் (அவரோ ஆஸ்தீகம் இவரோ நாஸ்தீகம் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறான்ரா இவன் நல்லவன் போல கிடக்குடா.......

இனி மூன்று சீரியசான கேள்விகள்

8)*சென்ற ஆண்டின் தமிழ்வலைப்பூவுலகின் சிறந்த முயற்சி எது?

9)*யாழ்ப்பாணத்திலிருந்து முதல் வலைப்பதியப்பட்ட வலைப்பதிவு எது?

10)*அப்போது அவர் என்ன புனைப்பெயரில் எழுதினார்?


சரி உங்கள் பதில்களை தட்டுங்கள்

நிபந்தனைகள்
ஒருவர் குறைந்தது இரண்டு பின்னூட்டம் இடவேண்டும் ஒன்று போட்டியின் விடைகளும் மற்றையதில் போட்டி பற்றிய கருத்துக்களும் காணப்பட வேண்டும் விடைகள் அடங்கிய பின்னூட்டம் பிரசுரிக்கபடமாட்டாது
ஒருவர் எத்தனை தடவையானாலும் பதிலளிக்கலாம் ஆனால் எதில் அதிக விடைகள் சரியாக காணப்படுகிறதோ அது போட்டிக்கு எடுக்கப்படும்

கால எல்லை
அடுத்த வார இறுதி வரை

நடுவர் குழு
எழுத்தாளர் சுஜாதா கவிப்பேரரசு வைரமுத்து நடிகர் சேரன் என்று எல்லாம் பில்டப் கிடையாது அனைத்தும் யாமே!


பரிசு ;- வலையுலக சிரஞ்சீவிக்கு ஒரு வாரகால Rapidshare கட்டணக் கணக்கு

Monday, January 7, 2008

பில்கேட்ஸ் விடை பெற்றார் அவரது நகைச்சுவை வீடியோவும்

பில்கேட்ஸ் தனது மைக்ரோ சாப்ட் வேலையை துறந்து கோண்டார் அது தொடர்பாக நடந்த கூட்டம் ஒன்றில் அவர் தான் பதவி ஓய்வு பெற்றவுடன் என்னவெல்லாம் செய்வேன் என ஒரு நகைச்சுவை வீடியோவையும் போட்டு காண்பித்து அசத்தினார் அவற்றை பார்த்து மகிழுங்கள்