( எனது நடனமும், சிறு பேட்டியும்)
கனடாவில் மேள..தாள கருவிகளில் ஈடுபாடு உடையவர்கள் பிரதி செவ்வாய் தோறும் இரவு வேளைகளில் Drum Circle எனும் பெயரில் ஒன்று கூடவது வழக்கம். இதில் அவரவர் தங்களுக்குப் பிடித்தமான இசைக்கருவிகளைக் கொண்டு வந்து வாசிப்பார்கள்.
இவர்களின் இசைக்கு நடனமாடவென்றே பலர் வருவதுண்டு! மது மற்றும் போதைப் பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக வருகைதருவர் . ஆனாலும் நகரசபை இதற்கு உரிய அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடக் கூடிய விடயம்.
நகரத்தில் பொது இடத்தில் குடிப்பது சட்டப்படி குற்றமானாலும் இங்கு குடிப்பதோ அல்லது பொதைப் பொருள் பாவிப்பதையோ! பொலீஸார் கண்டும் காணமல் விட்டு விடுவார்கள்.
கடந்த செவ்வாய்கிழமை cherry Beach Toroto ல் நடைபெற்றது அதில் நானும் பங்கு பற்றியிருந்தேன். யாரோ முதல் நாள் காணாமல் சென்றதாக கூறி பொலீஸார் கடற்கரையில் தேடுதல்களில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் குடிபோதையில் இருந்தவர்களுக்கோ அல்லது கஞ்சா முதலான போதையை பாவித்தவர்களுக்கோ அவர்கள் எந்த விதமான இடையூறுகளையும் விளைவிக்கவில்லை. மாறாக தமது இடையூறுக்கு மன்னிக்குமாறு ஒலிபெருக்கியில் வேண்டி நின்றனர்.
கூட்டத்தின் நடுவே ஒரு பொலீஸ் அதிகாரி
பித்தன் உருவேறிய நிலையில் :)
இதற்கு நடுவே யோகா மற்றும் தியானம் போன்றவற்றுக்கான இலவச பயிற்சிகளையும் அதன் ஆர்வலர்களால் பயிற்றிவிக்கப்பட்டது. மொத்தத்தில் வெளியிலிருந்து பார்க்கும் போது இது ஒரு காலாச்சார சீர்கேடாகவோ அல்லது ஏற்க முடியாத விடயமாகவும் தொன்றலாம். ஆனால் உள்ளே சென்று அனுபவித்து விட்டு அன்னத்தைப் போல பாலை மட்டும் பிரித்தெடுத்து அருந்தும் திறமை உமக்கும் இருந்தால்; இவை போன்ற நிகழ்வுகள் உங்களுக்கு பல அனுபவங்களைச் சொல்லித்தரும்.
இந்த நிகழ்வின் அறித்தல்களுக்குரிய தளம் http://drummersinexile.com
Thursday, July 16, 2009
கனடாவில் இப்படியும் சில கூத்து....
Posted by தமிழ்பித்தன் at 9:54 AM 0 comments
Subscribe to:
Posts (Atom)