Tuesday, January 27, 2009

கல்மடுல குளம் உடைப்பின் அவிழ்க்கப் படாத முடிச்சுகளும்!.. வன்னிப் பேரவலமும்

சனிக்கிழமை தமிழ் இணைய வெளியெங்கும் ஒரே பரபரப்பு, கல்மடுவக் குளம் உடைக்கப் பட்டதாகவும், அதனால் பலநூறு இராணுத்தினர் பலியானதாகவும்: முதலிலே ஐந்நூறு என இருந்த இந்த எண்ணிக்கை பின் மூவாயிரம், நாலாயிரம் என ஏதோ பங்குச்சந்தைச் சுட்டெண் போல அதிகரித்துக் கொண்டே சென்றது. மன்னிக்கவும் அதிகரிக்கப்பட்டது!

இது வதந்தியாக வைத்துக் கொண்டாலும் குளம் ஏனோ உடைக்கப்பட்டது உண்மைதான்: அலறியடித்த படி தனது பாதுகாப்புத் தொடர்பான இணையத்திலே இச்செயலை ஒரு மனிதாபிமானமற்ற செயலென்றும் (inhuman act) மிக வன்மையாக கண்டிப்பதாகவும் உலக நாடுகளும் இதைக் கண்டிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. இதைப் பார்த்த எமது வலைபூ மற்றும் இணைய வல்லுனர்கள் பல்வேறு வகையான தத்தமது ஊகங்களை வெளியிட்டனர்.

அவற்றையும் மிஞ்சி சில தளங்கள் யாழ்ப்பாணம் ஊடறுப்பு எனவும், இருகிபிர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன எனவும், பல்வேறு வகையான செய்திகளை வெளியிட்டன. இவை உண்மையா? இல்லையா? என சிந்திப்பதற்க்கு இடையில் முல்லைத்தீவு படையினரிடம் வீழ்ந்தது, என்கின்ற செய்தி ஆதாரத்தோடு வெளிவந்து அனைத்து ஊகங்களையும் உறங்குநிலைக்கு இட்டுச் சென்றது.

அன்றைய நிகழ்வுகளை இருவேறு வகைகளாக பிரித்து ஆராயலாம்.

1) குள உடைப்பின் சேதங்கள் குறிப்பிடும் படி இருந்திருப்பின், அவற்றை வெளியிடமுடியாத படி இலங்கை அரசாங்கம் தனது இரும்புக்கரம் கொண்டு ஊடக வாய்களை அடைத்திருக்கிறது.
ஆகவே, அங்கிருந்து செய்திகள் வரா! நான் கடந்த ஞாயிறு காலை (இலங்கை நேரப்படி) சக்தி FM இன் செய்தியறிக்கையைக் கேட்ட போது! அது கண்டியில் மோட்டார் வாகன விபத்தில் இருவர் காயம் எனும் செய்தியை தனது முதன்மைச் செய்தியாக வெளியிட்டது. இதனூடாக, இலங்கை ஊடகங்களின் நிலமை தெளிவாக புரிய வருகிறது.

சரி! அப்படியாயின் இராணுவத்துக்கு ஏற்பட்ட இழப்பை புலிகள் மறைக்கக் காரணம் என்ன???... அங்கு சில வேளைகளில் புலிகளின் கைகள் ஓங்கிய வாறு ஒரு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கலாம். மற்றது! முக்கியமாக தமது அரசியல் முன்னெடுப்புக்களுக்கு இத்தகைய தாக்குதல்கள் பங்கம் விளைவிக்கலாம் என அவர்கள் நினைக்கலாம். அதற்கு அரசின் ஊடகத்தடை அவர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது கூட..

2)இராணுவத்திற்கு குறிப்பிடும் படி இழப்புக்கள் இல்லை எனில் புலிகள் மெளனம் சாதிப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை, ஆனால் அரசாங்கம் அலறியடித்தது ஏன் என்பதே கேள்வி!
புலிகளின் கட்டுடைப்பினால் இராணுவத் தரப்பு தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கலாம். அதனால் ஏற்பட்ட அதிர்வின் விளைவாக இருந்திருக்கலாம்.

வலைப்பதிவு பக்கம் வந்தோமாயிருந்தால் பெரும்பாலான ஈழ(புலி) ஆதரவு எழுத்தாளர்கள். அந்தச் செய்தியை முதன்மைப் படுத்தி வெளியிட்டனர். முதலிலே சக்கடத்தாரின் வலைபூவிலே கொழுவி இழப்பு தொடர்பான செய்திகள் வதந்தி என்று பின்னூட்டமிட்டு விட்டு தனது பதிவையும் அழித்து விட்டார்.(நான் அவர் பதிவை வாசிக்கவில்லை)இத்தருணத்தில் இணைய தளங்கள் எங்கும் ஓரளவு அடக்கிவாசிக்க ஆரம்பித்தன.

-------------------------------------------------------------------------------------

வன்னியிலே தனது இன அழிப்புப் போரை மிகவும் உக்கிரமாக மேற்கொண்டிருக்கும். இராணுவம் அங்கு, எதிலிகளான மக்களை குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கில் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். அதை தமிழ்வலைப்பூக்கள் அழுது வடித்துக் கொண்டிருக்கின்றன. என்னைப் பொறுத்தவை இணையத்தில் ஊலா வருகிற 95% மான தமிழருக்கு அங்கு நடப்பது தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. மற்ற அந்த ஐந்து வீதமானோரும் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்காத செம்மறியாட்டுக் கூட்டங்கள் அவர்களுக்காக நேரத்தை செலவிடுவதை விட நீங்கள் வசிக்கும் அந்தந்த நாடுகளின் தேசிய ஊடகங்களுக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலம் மற்றை இனங்களுக்கு எமது பிரச்சினையை கொண்டு செல்ல வாய்ப்பிருக்கிறது. இது தமிழக உறவுகளுக்கும் பொருந்தும்.

நீங்கள் மின்னஞ்சல் செய்யும் போது கவனிக்க வேண்டியது
*ஓரே மின்னஞ்சலை பலரும் அனுப்பாதீர்கள். அவரவர் தத்தமது சொந்த கருத்துக்களை எழுதுங்கள்.
*உங்கள் பிரச்சினையை மட்டும் எழுதுங்கள் எவரையும் திட்டியோ அல்லது நீங்கள் உணர்ச்சி வசப்பட்டோ எழுத வேண்டாம்.

எமது வீட்டு இழவை எமக்குச் சொல்வதற்க்கு ஆயிரம் வலைபூக்களை காட்டிலும் இது நல்லதாக இருக்கும். என்பதே! எனது சொந்தக் கருத்து,

சிந்தியுங்கள்! செயற்படுங்கள் நாளை நமதே!

(பின்னூட்டங்கள் மட்டறுக்கப் படவில்லை)

10 comments:

Anonymous said...

சோதனை 1

puduvaisiva said...

வேதனை - 2

Anonymous said...

உங்கட நிலமை இப்படியா போச்சே அண்ணா!!!

தமிழ்பித்தன் said...

யாரை சொல்லுறியள் அனானி எதைச் சொல்லுறியள்

Anonymous said...

lankan army thaan shell adithu kulathai udaiththathaaam.

சவுக்கடி said...

**உங்கள் பிரச்சினையை மட்டும் எழுதுங்கள் எவரையும் திட்டியோ அல்லது நீங்கள் உணர்ச்சி வசப்பட்டோ எழுத வேண்டாம்.**

உண்மையை உணர்வு வெளிப்பாட்டை உள்ளபடி எழுதக்கூடாதா?

தமிழ்பித்தன் said...

//உண்மையை உணர்வு வெளிப்பாட்டை உள்ளபடி எழுதக்கூடாதா?///

நண்பா சவுக்கு!
இப்போது எமக்கு தலையாய பணி சாவின் விளிம்பில் உள்ளொர்களைப் பற்றியது. மற்றைது பற்றி சிந்திக்க வேண்டிய தரப்பு கட்டாயம் சிந்திக்கும். உணர்சிகள் சிக்கலுக்கு சில வேளைகளில் தீர்வைத் தரா! பல நேரங்களில் அதே இன்னும் சிக்கலாக்கிவிடும் ஆகவே, இங்கு பொறுமை மிக முக்கியம்

தமிழ்பித்தன் said...

lankan army thaan shell adithu kulathai udaiththathaaam ////

சாத்தியமான தரவுகளும் நிலவரங்களாலும் இதனை உறுதி செய்ய முடியாமலுள்ளது நண்பா!

தரவுகள் நிலவரங்கள் எதிர்மறைாகவே தோற்றமளிக்கின்றன.

Anonymous said...

//"உன் தாய் மொழி அறிவாவிடினும் உன் விழி மொழி அறிவேன் பெண்ணே!//

Hi who is she?? and what is her mother tangue??
tell me I will give to you easy learn site worry Tamilpithaa.

தமிழ்பித்தன் said...

Why i need to learn her mother tangue?? i already told her "you have to learn Tamil."
:-)