முப்பையில் நடந்த பயங்கரவாத செயலால் இறந்த அனைத்து இந்திய சகோதரர்களுக்கும் மற்றை நாட்டனருக்கும் நினைவஞ்சலிகளை செலுத்திக் கொள்கிறேன். இன்று ஓர் இந்திய நண்பனுடன் Markam( canada) பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயத்துக்கு செல்ல முடிந்தது; அவர்கள் இறந்தவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்.
இந்த நேரத்தில் அனைத்து விதமான பயங்கரவாத செயல்களையும் எதிர்ப்பதுடன்; (மக்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள்) அதற்கு, அவர்களின் எந்த விதமான நியாப்படுத்தல்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
................................................................................
நம்மூர் வெள்ளத்தில் மூழ்கிருப்பதாகவும்! புயலின் தாக்கம் பற்றியும்! மேலே உள்ள செய்தி ரைப் அடித்துக் கொண்டிருந்த போது; எனது சகோதரன் தோலைபேசியூடாக அறிய தந்து கொண்டிருந்தான். விவசாயம் மற்றும் கால் நடைகள் முற்றாக அழிந்துவிட்டதாம். நேல் மூட்டைக்கு மேல் படுக்குமளவுக்கு வரலாறு காணாத மழையாம். அலுவலங்கள் மற்றும் பாடசாலைகள் அனைத்தும் அறிவிக்கப்படாத விடுமுறையில் பூட்டப்பட்டு இருக்கின்றன. மின்சார கம்பங்கள் பெருமளவில் சரிந்து வீழ்ந்து விட்டதனால், இருவாரத்துக்கு மின்சாரம் சாத்தியம் இல்லையாம்,,, (இது யாழ்பாண வடமராட்சி பகுதியின் நிலவரம்)
தமிழா! உன்னை இயற்கையும் சீண்டி விளையாடுதடா,,,,,,,
Thursday, November 27, 2008
மும்பை பயங்கரம்// நம்மூர் வெள்ளத்தில் மூழ்கியதாம்
Posted by தமிழ்பித்தன் at 9:08 PM
Labels: சமகால நிகழ்வு, செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment