Friday, February 29, 2008
Thursday, February 28, 2008
சுஜாதா எனும் வாரிசை இழந்த தமிழ்த்தாய்
சுஜாதா என்கின்ற ஒரு சிறந்த ஒரு எழுத்தாளனை நாம் இழந்து நிற்கிறோம். அவரது எழுத்துக்களுக்கு அடிமையாகாதவர்கள் இருக்க முடியாது. நான் மிகவும் விரும்பி வாசித்தது அவரது "கற்றதும் பெற்றதும்" ஆனந்த விகடனில் வந்த இதை தவறாது வாசிப்பேன்.
இணையம் எனது கரத்தில் தவழ துவங்கிய சில நாட்களிலேயே, (அக்காலத்தில் இணைய முகவரிகள் எங்களுக்கு தட்டுப்பாடு புத்தகங்களில் வருவனவற்றை சோதிப்பது தான் வழக்கம்)) நான் writersuyatha.com என்ற வலைத்தளத்தினுள் சென்று சனி தோறும் 10 மணி முதல் 11 மணி வரை அவருடைய அரட்டையில் கலந்து கொள்வது வழக்கம். பல காலங்களில் அந்த அரட்டையை கூர்ந்து கவனிப்பேனே ஒழிய நல்ல கேள்விகளை நான் தெடுத்ததாக தெரியவில்லை. அக்காலத்தில் யுனிக்கோட்டைப் பற்றியும் தமிழ் இணையம் பற்றியும் அதிகம் அரட்டப்பட்டன. எனக்கு அக்காலத்தில் இவை பற்றி எதுவும் தெரிந்திராத காலத்தில் சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல பார்த்ததுதான் மிச்சம்.
என்னவானாலும் கூட இன்று தமிழ் எழுத்து உலகத்தில் அவரின் இடத்ததை நிரப்ப எவரும் இல்லை என்பது மட்டும் உண்மை.
Posted by தமிழ்பித்தன் at 4:36 PM 0 comments
Tuesday, February 26, 2008
தமிழச்சியின் பதிவை நீக்கக் கோருவோருக்கு எச்சரிக்கை!
அத்துடன் இளையோர் அணி தமிழச்சியிடம் சில பரிந்துரைகளை செய்கிறது.
2) தினமும் உங்கள் கதைகளை வாசித்து போ(F)ர் அடித்ததால் இனி சகிலாவின் பிட் திரைபடங்களை றபிட் செயருடாகவோ அல்லது யூரீப் ஊடாகவோ எங்களுக்கு இணையமூடாக வழங்குமாறும்.
கேட்டுக் கொள்கிறது.
மலையாள பிட் படங்களுக்கு கதையெழுதும் வாய்ப்பு கிடைத்தும் எங்களை மனதில் நிறுத்தி, இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது பணியை செவ்வனவே செய்துவரும் தமிழச்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, எங்கள் ஆண்மை இருக்கும் வரை உங்களுக்காக போராடுவோம்...
இளையோர் செயற்கழகம்
தமிழ் வலைப்பதிவுகம்
இணையம்.
என அண்மைய தினங்களாக தமிழச்சியை நீக்குமாறு கூறுவோருக்கு எதிராக இணையத்தில் கண்டன கூட்டத்தை கூட்டிய தமிழ்வலைபப்பதிவு இளையோர் கழகம். தனது கூட்ட முடிவில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Posted by தமிழ்பித்தன் at 6:07 PM 8 comments
Monday, February 18, 2008
ஒரு வயதுக்கு வந்த பெண் என் முன் ஒட்டுத்துணியின்றி... (நினைவில் மலர்பவை )
ஒரு அந்தி சாயும் பொழுது சன நடமாட்டமே குறைய தொடங்கிய நேரம் எனக்கு அப்போது ஒரு பதினைந்து வயசிருக்கும், இலகுவாக உணர்ச்சிவசப்படப் கூடிய வயது. அன்று, வழமைபோல் ரியூசன் வகுப்பை முடித்துக் கொண்டு எனது வீடு திரும்பிப் கொண்டிருந்தேன் எங்கள் ஊருக்கும் ரியூசனுக்கும் இடையில் அடர்பற்றைகளுக் கூடாக எனது சைக்கிளை மிதித்த வண்ணம்..
திடீரென என் கண்முன்னே செக்கச்சிவந்த ஒரு அழகான ஒரு வயசுக்கு வந்த பொண்ணு உடம்பிலே ஒட்டுத் துணியின்றி அம்மணமாக!!
அவள் என்னை ஏதே ஏக்கத்துடன் பார்த்தாள். எனது நரம்புகள் முறுக்கேற உணர்சிகள் பொங்கியது ஓடிப்போய் பாய்ந்து அவளை வாரிஅள்ளி அணைந்து முத்தமிட்டு விட்டு இந்த இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறாய்!
எனது அடுத்தடுத்த கேள்விக் கணைகளால் திணறி அந்த ஒரு வயசு நிரம்பிய பிஞ்சு உள்ளத்தின் வாயால் பேச்சு திக்கித்திணறி வெளிவருகிறது அண்ணா பசிக்குது....
கடையில் ஒரு பண் வாங்கி கொடுத்து விட்டு பின் அவளை குடிகார தந்தையின் வீட்டில் இறக்கி விட்டு எனது வீட்டில் வந்து நடந்ததைக் நினைத்து பின்வருமாறு பராசக்தி வசனம் படித்தேன்!!!!!!!!!!!
காதலித்தவனுடன் கஞ்சியேனும் குடித்து வாழ்வேன்
என காதலித்தவனை மணமுடித்த உன்தாயின் குற்றமா?
அவன் பின் பெரும் குடியாரனாக மாறியது குற்றமா??
அந்த நேரத்தில் அவள் வயிற்றில் வந்து பிறந்தது உன் குற்றமா?
கூலி வேலைக்குச் சென்றவளின்
கற்புக்கும் கூலி கொடுத்தவனின் குற்றமா??
பின் அவள் உன்னை வளர்க்க நினைத்து
தன்னை முழுமையாக விலை கொடுத்தது குற்றமா??
அவள் விலைமாதுவாக மாறியது குற்றமா??
அவளை காலச்சாரத்தின் பெயரால் வேட்டையாடி
கலாச்சாரக் காவலரின் குற்றமா???
இது யார் குற்றம்.............???????
Posted by தமிழ்பித்தன் at 3:30 AM 3 comments
Labels: நினைவில் மலர்பவை
Monday, February 11, 2008
நான் முதல் பார்த்த நீலப்படம் (மீள்பதிவு)
அப்ப எனக்கு ஒரு பதின்ம வயது (13 அல்லது 14வயதிருக்கும் )இலங்கை கல்வி முறையில் சொல்வதானால் 8 ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தன். காமம் என்றால் என்ன என்று அறியத்தொடங்குகிற அல்லது ஆவல் படுகிற வயசு அக்காலத்தில் எங்களுக்கு எல்லாம் காமப் பாடம் புகட்டியது. ஒரு சில பத்திரிகைகளே. வாரமித்திரன்(வீரகேசரி வெளியீடு) தினமுரசு (ஈபிடிபி அரசியல் கட்சியின் சார்ந்த பத்திரிகை ) வாரமித்திரனில் வரும் உண்மைசச்சம்பவம் மற்றும் தினமலரில் வருகின்ற இடியமீன், ஹிட்லர் தொடர்கதைகள் அப்போதைய காலத்து எம் நண்பர் வட்டத்தில் மிக பிரபல்யம் வாய்ந்தவை. ஆனால் இவைகளை எங்கள் ஊர் நூலகங்களில் பெற்றுக் கொள்ள முடியாது. உதயன் வீரகேசரி தவிர்ந்த வேறு பத்திரிகைகளை அவர்கள் போடுவதில்லை. அதனால் அவர்களை மனதில் திட்டுவதும் உண்டு. வல்வெட்டித்துறையின் நகராட்சி மன்ற நூல் நிலையத்தில் தான் போய் வாசிக்க வேணும் அப்பத்திரிகைகள் வாசிப்பதானால் பெரிய கியூவே நிற்க்கும், காத்திருந்துதான் வாசிக்கவேணும்.பத்திரிகையை மட்டுமே படித்த நாங்கள் ஆங்கில படங்கள் தொடர்பாக அறிய தொடங்கினோம்
அக்காலத்தில் ஆங்கிலப்படங்கள் என்பதே கிடையாது. காரணம் யாழ்பாணத்தில் மின்சார விநியோகம் கிடையாது. அப்படி படம் எடுத்துப் போடுவதானாலும் இளைஞர்கள் பலர் சேர்ந்து மிக ரகசியமாக ஓடுவார்கள். (அக்காலத்தில் ஆங்கிப்படம் பார்ப்பதே பெரிய குற்றமாக நினைக்கபட்டது)சிறுவர்களை சேர்க்க மாட்டார்கள் அத்துடன் எங்களுக்கு தனியே படம் எடுத்து போடுவது என்பது எங்கள் சக்திக்கு அப்பால் பட்டதாகவே இருந்தது. (ஓர் சர்பத் குடிப்பதற்கே மாத கணக்கில் சேமிப்பு நடக்கும் காலம் அது) அக்கால கட்டத்தில் சிறிய அளவில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க ஆரம்பித்தார்கள் சரி நாங்களும் ஒரு நாள் ஆங்கிலப்படம் போட வேணும் என்று எல்லோரும் இலட்சியம் ஆக்கிக் கொண்டோம்அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினோம்
ஒரு நண்பனின் உறவினர்கள் வெளிநாடு போனதால் அந்த வீட்டை நண்பனின் குடும்பமே பராமரித்து வந்தது. அந்த வீடு எங்களுக்கு ஒரு பாசறை போல இருந்து வந்தது. (கள்ள இளநீ மரவள்ளி கிழங்கு அவித்தல் உடும்பு சுட்டு சாப்பிடுதல் போன்ற வற்றுக்கு அது எமக்கு பேருதவியாக இருந்து வந்தது ) அங்கே ரீவி டெக் ஆகியன இருந்தன. அதனால் ரீவி டெக் பிரச்சினை இருக்க வில்லை அவர்கள் வீட்டில் இருந்த மோட்டர் வயர் கொண்டு கள்ள கறன் (மின்சாரம்) பெறுவது என்பதும் முடிவாகியது. படக்கொப்பிதான் பிரச்சினைஅப்போதுதான் டைட்டானிக் படம் வந்து சக்கை போட்டுக்கொண்டிருந்தது.
அக்காலத்தில் பத்திரிகைகள் எல்லாம் அதில் வந்த காட்சிகளை எல்லாம் விபரணம் செய்து எழுத ஆரம்பித்தன. அது எங்களுக்கு பேரவாவையும் எதிர்பார்ப்பையும் தந்தது சரி இந்த படம் பார்ப்பது என்றும் முடிவெடுத்துக் கொண்டோம் இனிகொப்பி எடுப்பதில் பெரிய சிக்கல் பெரியவர்களுடன் திரிபவன் ஒருவனை வளைத்துப் போட்டால் காரியம் ஆகும் என நான் ஆலோசனை கூற எல்லோரும் அதற்க்கு தலையாட்டினார்கள் யாரை தெரிந்தெடுப்பது பெரிய பிரச்சினை நீண்ட கால புலனாய்வு முடிவுகளில் ஒருவனை தெரிந்தெடுத்தோம்அன்று அடித்த முயல்கறியுடன் அவனிடம் பேச்சுவார்தைகள் ஆரம்பமாகியது எங்கள் தரப்பு நிபந்தனைகள
* இந்த விடயம் வெளியில் தெரியக் கூடாது
* நீயும் எம்முடன் இருந்து பார்க்க கூடாது
அவன் அனைத்துக்கும் தலையாட்டிவிட்டு அவன் நிபந்தனையை சொன்னான்
*உடும்போ அல்லது முயலோ அடித்தால் எனக்கு அறிவிக்க வேண்டும்
*படக்கொப்பி வாடகை 30 இரண்டு தடைவையும் போய்வரும் ரான்ஸ்போட் செலவு 40 (சுண்டங்காய் காப்பணம் சுமைகூலி முக்கால் பணமாம் )பலருக்கு இந்த நிபந்தனையில் விருப்பம் இல்லை எனிலும ஒத்துக்கொண்டோம் (கோயிலுக்கு ஐஸ்கிறீம் குடிக்க வழங்கப்பட்ட காசுகள் அனைத்தும் சேமிக்கபட்டன)
இவ்வளவும் நடக்க டைட்டானிக் வந்து 3 மாதகாலத்துக்கும் மேலாகியது கொப்பியையும் கொண்டு வந்து தந்து விட்டு பின்னேரம் வாறன் போட கறன்டை கொளுவி வையுங்கோ என்று கூறி சென்றான்ஒருவன்தான் போஸ்டில் ஏறி கறன்ட் கொழுவ ஒப்புக்கொண்டான் (அவன் வீட்டையும் கள்ள கறன்ட் அவன்தானம் கொழுவானம் அந்த எக்ஸ்பீரியன் அடிப்படையில் அவருக்கு அந்த வேலை வழங்ப்பட்டது)இருட்டியது பெரிய ஆவவோடு இருந்தோம் கறன்டும் வந்தது அவனும் வந்து படம் போட்டுவிட்டு போய்விட்டான்
பேப்பரில் வாசித்த அனுபவத்தில் படம் போக போக கதை சொல்ல ஆரம்பித்தேன் (சிலருக்கு இது போறமையாகவும் இருந்தது ) எப்ப படம் கீறும் கட்டம் வரும் என ஆவலோடு எதிர்பார்த்தோம் அதுவும் வந்தது அவன் அவளை கூட்டிக்கொண்டு ஒரு தனியறைக்கு செல்கிறான் எங்கள் மத்தியில் மிகவும் அமைதி நிலவியது (அந்த நேரத்தில் யாரையாவது சொறிஞ்சாலே கொலைபண்ணியிருப்பார்கள் ) அவன் பென்சில் சீவியது தான் பார்த்தோம். ஒரு காட்சி கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து சென்றது. அக்காலத்தில் எங்களுக்கு ஸ்ரில்(still) பண்ணவோ றீபிளேய்( replay) பண்ணவோ தெரியவில்லை. திடீரென அவன் தான் கீறிய படத்தை காட்டுகிறான். அடப்பாவி எங்கேடா நீ சொன்ன கட்டம் என்று எல்லோரம் ஏக்கத்துடம் பார்க்க பெறுங்கோ சில வேளை இன்னொரு கீறல் கட்டம் வராலாம். என்று ஆறுதல் கூறினேன் பின் அப்படி ஒரு கட்டம் வரவேயில்லை. என்பது போக கப்பல் மோத முதல் இருந்த அந்த ஜீப் கட்டமும் இருக்க வில்லை எல்லொரும் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம். போந்து விசாரத்ததில் முந்தி வந்த கொப்பிகள் ஒழுங்காக வந்ததாம் பேந்து சிலரால் அந்த கட்டங்கள் நீக்குமாறு பணிக்கப்பட்டதன் காரணத்தால் அவை நீக்கபட்டதாம்
"அந்த கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து போனாலும் அது எங்களுக்கு நீலப்படமே"
Posted by தமிழ்பித்தன் at 7:43 PM 4 comments
Friday, February 1, 2008
தமிழச்சிக்கு தமிழ்பித்தன் ஜால்ராவா?? யாரிந்த தமிழ்பித்தன்????
என்னடா நம்மட பொடியலுக்கு இன்னும் சொறி கிழம்பவில்லை என்று பார்த்தால் நம்மட கொண்டோடி பின்வருமாறு சொறிந்து காட்டுறார்
அதுசரி, தீவாரே,
ஆய்வாளர் எண்ட வகையில உங்களிடம் ஒரு கேள்வி.
அண்மைய காலங்களில் 'தமிழ்(ப்) பித்தன்' தமிழச்சிக்கு வால்பிடித்து எழுதுவதிலுள்ள சூட்சுமம் என்ன? கடந்த காலங்களில் அவர் எழுதிவந்தவற்றுக்கு முற்றுமுழுதாக 180 பாகையில் திரும்பிநின்று ஜால்ரா தட்ட என்ன காரணம்?
கனடா மாற்றியதா? கன்னியர் மாற்றினரா? என்னதான் நடந்திருக்கும்?
துப்பறிந்து அல்லது துப்பியெறிந்துப் பதில் சொல்லும் தீவாரே
வீணா துப்பியெறிந்து நேரத்தை வீணடிக்க வேணாம் இவன்தான் அந்த தமிழ்பித்தன்
பெயர்-தமிழ்பித்தன்
பிறந்தது -எங்கோ
வளர்ந்தது - அன்னை மடிக்குள்
வளர நினைப்பது -பெண்மை மடிக்குள்
சாதனைகள் - பேச்சளவில்
சோதனை - மூச்சளவில்
இழந்தது - காதலை
பெற்றது -நல்ல நட்பை
வாழநினைப்பது - நல்ல மனிதனாக
சாக நினைப்பது - ஒரு தமிழனாக
இதுவரை - எதிர்பாட்டாளன்
இன்று முதல் - மனதில் உள்ளதை உளற ஆரம்பித்தல்
பிடிக்காதது - பெண்மை உருவில் அலையும் .........
பிடித்தது - தாய்மை
வெறுப்பது - பெண் அடிமை
கொதிப்பது - சாதி முறமை
கனவுகள் - எல்லாம் அசின் மயம்
ஆசைகள்- நிறைய பிசினாய் மனதில் ஒட்டியபடி!
சொல்ல நினைப்பது `"நான் எதிர்பார்ப்பதெல்லாம் சாதிகள் அற்ற தமிழ் சமூகத்தையே, நாஸ்தீகமான தமிழ் சமூகத்தை அல்ல"
- தமிழ்பித்தன்
Posted by தமிழ்பித்தன் at 3:23 AM 7 comments