Monday, February 18, 2008

ஒரு வயதுக்கு வந்த பெண் என் முன் ஒட்டுத்துணியின்றி... (நினைவில் மலர்பவை )

ஒரு அந்தி சாயும் பொழுது சன நடமாட்டமே குறைய தொடங்கிய நேரம் எனக்கு அப்போது ஒரு பதினைந்து வயசிருக்கும், இலகுவாக உணர்ச்சிவசப்படப் கூடிய வயது. அன்று, வழமைபோல் ரியூசன் வகுப்பை முடித்துக் கொண்டு எனது வீடு திரும்பிப் கொண்டிருந்தேன் எங்கள் ஊருக்கும் ரியூசனுக்கும் இடையில் அடர்பற்றைகளுக் கூடாக எனது சைக்கிளை மிதித்த வண்ணம்..

திடீரென என் கண்முன்னே செக்கச்சிவந்த ஒரு அழகான ஒரு வயசுக்கு வந்த பொண்ணு உடம்பிலே ஒட்டுத் துணியின்றி அம்மணமாக!!

அவள் என்னை ஏதே ஏக்கத்துடன் பார்த்தாள். எனது நரம்புகள் முறுக்கேற உணர்சிகள் பொங்கியது ஓடிப்போய் பாய்ந்து அவளை வாரிஅள்ளி அணைந்து முத்தமிட்டு விட்டு இந்த இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறாய்!

எனது அடுத்தடுத்த கேள்விக் கணைகளால் திணறி அந்த ஒரு வயசு நிரம்பிய பிஞ்சு உள்ளத்தின் வாயால் பேச்சு திக்கித்திணறி வெளிவருகிறது அண்ணா பசிக்குது....

கடையில் ஒரு பண் வாங்கி கொடுத்து விட்டு பின் அவளை குடிகார தந்தையின் வீட்டில் இறக்கி விட்டு எனது வீட்டில் வந்து நடந்ததைக் நினைத்து பின்வருமாறு பராசக்தி வசனம் படித்தேன்!!!!!!!!!!!


காதலித்தவனுடன் கஞ்சியேனும் குடித்து வாழ்வேன்

என காதலித்தவனை மணமுடித்த உன்தாயின் குற்றமா?

அவன் பின் பெரும் குடியாரனாக மாறியது குற்றமா??

அந்த நேரத்தில் அவள் வயிற்றில் வந்து பிறந்தது உன் குற்றமா?

கூலி வேலைக்குச் சென்றவளின்

கற்புக்கும் கூலி கொடுத்தவனின் குற்றமா??

பின் அவள் உன்னை வளர்க்க நினைத்து

தன்னை முழுமையாக விலை கொடுத்தது குற்றமா??

அவள் விலைமாதுவாக மாறியது குற்றமா??

அவளை காலச்சாரத்தின் பெயரால் வேட்டையாடி

கலாச்சாரக் காவலரின் குற்றமா???

இது யார் குற்றம்.............???????

3 comments:

Tech Shankar said...

உம்ம மனசுல அறிஞர் அண்ணான்னு நினைப்பா?

சின்னப் பையன் said...

தெரியலியெப்பா....( நாயகன் பாணியில் படிக்கவும்)...:-)

தமிழ்பித்தன் said...

அண்ணா தமிழ்நெஞ்சம் அறிஞர் அண்ணாவுக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்