Thursday, February 28, 2008

சுஜாதா எனும் வாரிசை இழந்த தமிழ்த்தாய்

சுஜாதா என்கின்ற ஒரு சிறந்த ஒரு எழுத்தாளனை நாம் இழந்து நிற்கிறோம். அவரது எழுத்துக்களுக்கு அடிமையாகாதவர்கள் இருக்க முடியாது. நான் மிகவும் விரும்பி வாசித்தது அவரது "கற்றதும் பெற்றதும்" ஆனந்த விகடனில் வந்த இதை தவறாது வாசிப்பேன்.

இணையம் எனது கரத்தில் தவழ துவங்கிய சில நாட்களிலேயே, (அக்காலத்தில் இணைய முகவரிகள் எங்களுக்கு தட்டுப்பாடு புத்தகங்களில் வருவனவற்றை சோதிப்பது தான் வழக்கம்)) நான் writersuyatha.com என்ற வலைத்தளத்தினுள் சென்று சனி தோறும் 10 மணி முதல் 11 மணி வரை அவருடைய அரட்டையில் கலந்து கொள்வது வழக்கம். பல காலங்களில் அந்த அரட்டையை கூர்ந்து கவனிப்பேனே ஒழிய நல்ல கேள்விகளை நான் தெடுத்ததாக தெரியவில்லை. அக்காலத்தில் யுனிக்கோட்டைப் பற்றியும் தமிழ் இணையம் பற்றியும் அதிகம் அரட்டப்பட்டன. எனக்கு அக்காலத்தில் இவை பற்றி எதுவும் தெரிந்திராத காலத்தில் சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல பார்த்ததுதான் மிச்சம்.

என்னவானாலும் கூட இன்று தமிழ் எழுத்து உலகத்தில் அவரின் இடத்ததை நிரப்ப எவரும் இல்லை என்பது மட்டும் உண்மை.

0 comments: