இது வரை எனது அரட்டல்களையும் ஆத்திரங்களையும் கோமாளித்தனங்களையும் ரசித்தும் கண்டித்தும் வந்த எனது வலைப்பதிவு வாசகர்களுக்கு பல கோடி நன்றிகள். எனது வலையுலகம் சார்ந்த ஒரு காலப் போக்கின் அட்டவணை
1999- முதலில் கம்பியூட்டரை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கண்ணுற்றேன்
2001- கம்பியூட்ரை முதல்தடவையாக எனது கரங்கள் தழுவுகின்றன இடம் வல்லை சிதம்பர கல்லூரியில்
2004-ஜனவரி - முதல் தடவையாக இணையத்தை பாவித்தேன் ((அப்ப எல்லாம் இணையம் பற்றி ஒன்றுமே தெரியாது சில பலான மற்றும் சஞ்சிகை செய்தி தளங்களை தவிர))
2004-ஓகஸ்ட்- முதல் தடவையாக யாகூவில் மின்னஞ்சல் கணக்கு திறந்தேன்
2004-டிசம்பர்-வெப்தமிழன் ஊடாக தமிழ் வலைப்பூ தொகுப்பை கண்டேன்.
2005-பெப்ரவரி- நானும் நீண்ட கால போராட்டத்தில் தமிழ் யுனிகோட்டில் அமைந்த
வலைப்பூவை அமைத்தேன்
2005-மார்ச்-தமிழ் மணத்தில் இணைந்து கொள்கிறேன்
2005- ஏப்ரல்- எனது முதல் இணைய நண்பனாக வசந்தன் அவுஸ்ரேலியாவிலிருந்து அறிமுகமாகிறார்
அதனை தொடர்ந்து சயந்தனும் அறிமுகமாகிறார்
2005-ஓகஸ்ட்- வசந்தன் தந்த தகவலின் அடிப்படையில் நெல்லியடியில் குழைக்காட்டான் அல்லது விஜயன் என்பவரை சந்திப்பதன் மூலம் யாழ்பானத்தில் அது முதல் வலைபதிவர் சந்திப்பாகிறது
விஜயன் தந்த தகவலின் படி ஈழநாதனை அடையாளம் கண்டு ((எனது வீட்டுக்கு அருகில் இருப்பவர்)) அவரை சந்திக் நினைக்கையில் அவர் மீண்டும் வெளிநாடு திரும்பிவிட்டார்.
2006 - ஈழநாதனை சிங்கையில் சந்தித்தது.
2006 செப்ரம்பர் - 2007- மார்ச் வரை எழுத முடியவில்லை அந்த இடை வெளிக்குள் எனது வலைப்பதிவு கவலையீனத்தால் அழிவுற்றது.
2007- மார்ச் - மீண்டும் எழுத தொடங்கியது.
இன்று கானா பிரபா இஸ்மாயில் வடுவூர் குமார் மயூரேசன் என பெரிய பட்டாளமே இணைய நண்பர்களாக இருந்தும் ஒருவருடனும் அலவளாவ நேரம் இல்லை
2007 ஓகஸ்ட்- தமிழ் it நீயுஸ் எழுத ஆரம்பித்தது.
2007-செப்ரம்பர் - தமிழச்சியுடன் நடந்த மோதலில் தமிழ்மணத்திலிருந்து தமிழ்பித்தன் நீக்கப்படுகிறது.
2007- ஓக்டோபர்- என் உலகம் ஆரம்பம்
இது வரை முன்நூறுக்கும் அதிகமாக எழுதி முடித்தாச்சு
முதலில் யாழ்பாணத்திலிருந்து எழுதியமை
இம் முறை என் ஏதாவது செய்யலாம் என்று எண்ணியதில் ஒலிப்பேழை மனதில் உதித்திருக்கிறது பார்ப்பம். என்னடா ஒவ்வொன்றையும் தொடங்கி அப்படி விட்டு விட்டு போறியே என்று நினைக்கிறது தெரிகிறது. என்ன எப்போது செய்யனும் என்று எனக்கு தோன்றுகிறதோ அது அப்போது கட்டாயம் செய்வன் இது எனது இயல்பு இது வலைப்பூவிலும் காணலாம்.
உண்மையில் யாழ்பாணத்தில் இருந்து எழுதும் போது சீரியசாக எழுதுவதுண்டு மொக்கை போடுவர்களை கண்டால் கோபம் வரும். இப்போ இயந்திரமாகி விட்ட வாழ்கையில் கிடைகிற சிறிது நேரத்தில் யாருடனாது செல்லமாக சில நெருடலும் வருடலும் அது உங்களை பாதித்தால் இந்நாளில் மன்னிப்பு கோருகிறேன். தொடந்தும் எனது வருடல்கள் தொடரும் நீங்கள் என்னை விரட்டி அடித்தாலும் கூட..........
இவற்றை எல்லாம் தந்த தமிழ் மணத்துக்கு சிரம்தாழ்த்தி நன்றி செலுத்துகிறேன்
நன்றி!
Monday, March 3, 2008
வலைப்பதிவுலகில் 3 ம் ஆண்டு முடிந்து 4 ம் ஆண்டில்
Posted by தமிழ்பித்தன் at 8:22 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வாழ்த்துகின்றேன்.
வாழ்த்துக்கள்
நன்றி மாயா மற்றும் துளசி கோபால்
Post a Comment