திருநெல்வேலி: இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்காக, இளைஞர் ஒருவர் பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து ஷூ பாலிஷ் செய்து, நிதி திரட்டி வருகிறார். நெல்லையை சேர்ந்தவர் பாபுராஜ் (30). சமூக சேவைகள் செய்து வருகிறார். அண்மையில் சென்னை அருகே திருக்கழுக்குன்றத்தில் இதயேந்திரன் என்ற மாணவர் விபத்தில் சிக்கி இறந்தபோது அவரது இதயம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ததற்காக அவரது தந்தை டாக்டர் அசோகனுக்கு, நெல்லையில் பாராட்டி விருது வழங்கினார்.
இவர் நேற்று காலையில் பாளையங்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து அங்கு வருகிற பயணிகளின் ஷூக்களுக்கு பாலிஷ் செய்தார். அதற்கு கட்டணம் என்றில்லாமல் நன்கொடையாக எவ்வளவு தந்தாலும் வாங்கிக் கொள்கிறார். ஒரு வாரத்திற்கு இதே போல ஷூ பாலிஷ் செய்து இதன் மூலம் கிடைக்கும் தொகையை, இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
thanks dinamalar
Friday, October 31, 2008
இலங்கை தமிழர் நிவாரணத்திற்கு ஷூ பாலிஷ் செய்யும் இளைஞர்
Posted by தமிழ்பித்தன் at 2:49 PM
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
இந்த நண்பரின்செயல் ஈழத்தமிழரின் இதயங்களை நெகிழ வைக்கிறது ஆனால் நான் ஜரோப்பாவில் வாழுபவன் என்கிற முறையில் ஒரு கருத்து அதாவது இன்னமும் தங்கள் காலணியை இன்னொருவன் துடைத்து விடும் மனநிலையில் உள்ள இந்தியர்கள் வாழுகிறார்களா?? நம்ப முடியவில்லை??
எனக்கும் தான், அதுதான் அதை பிரசுரித்தேன். எத்தனையே நமது ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்து புலம் மறந்து போன நிலையில் தமிழகத்தின் எழுச்சி மயிர்கூச்செறிய வைக்கிறது. இது செய்திக்கு வந்த ஒரு நிகழ்வே; செய்திக்கு வராமல் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் அங்கே நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு ஒரு நன்றியை தவிர வேறு எதையும் செய்ய முடியாத எங்களில் சிலர் அவர்கள் ஆதரவு தரும் இந்த நேரத்தில் தேவையற்ற பழையவைகளை கிழறுதல் நல்லதல்ல.
அனானி உங்கள் சொந்த கருத்தை மட்டும் பதியுங்கள். கண்டவற்றை கொப்பி பேஸ்ட செய்ய வேண்டாம். உங்கள் புரிதலுக்கு நன்றி!
என்ன கைமாறு செய்யப் போகிறோம் :(
எதையும் சீரியசாக எடுத்துகொள்ளாது ஜோக் அடிக்கும், அதிகம் உணர்ச்சிவசப்படாது இருக்கும் எனக்கு - இச்செய்தி என்னவோ செய்கிறது.
என்ன கைமாறு செய்யப் போகிறோம் :(
// இன்னமும் தங்கள் காலணியை இன்னொருவன் துடைத்து விடும் மனநிலையில் உள்ள இந்தியர்கள் வாழுகிறார்களா?? நம்ப முடியவில்லை??//
???
This service is every where
FYI: Shoeshine booth at Dublin Airport
http://www.alamy.com/thumbs/6/%7BF73F5EA3-00FD-4243-9E34-9C503228A78B%7D/AWJ2AA.jpg
**
What he does here is token of love and just to create people awareness.
இப்படியும் ஒருவரா?!
செயலில் தன் அன்பை காட்டிய சகோதரருக்கு நன்றிகள்..
அனானி அதற்கு அதுவல்ல அர்த்தம்! தமிழனின் ஷூ துடைத்தாலும் பறவாயில்லை என் உறவுகளில் இரத்தம் சிந்தலை நிறுத்தி தமிழனின் அடிமைவிலங்கை உடைக்க உதவுவேன் என்பது தான் அர்த்தம்
தமிழ்நாட்டின் முதல்வருக்குப் பணிவான வேண்டுகோள்:
தமிழகத் தமிழரின் உணர்வுக்கு இந்த நெல்லை இளைஞர் ஒரு காட்டாக உள்ளார்.
இப்படியெல்லாம் திரட்டிய பணத்தைச் சிங்கள அரசிடம் கொடுத்து ஈழத் தமிழர்க்கு எதிராகப் பயன்படுத்த உதவி செய்து இரண்டகத்தைக் கூட்டிக் கொள்ளாதீர்கள்!
உண்மையிலேயே வலிக்கிறது :(
Post a Comment