கடந்த திங்கட்கிழமை வல்வெட்டித்துறை தெனியம்பை என்கின்ற இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட எமது வீட்டுக்கு அருகில் வசிக்கும் பரி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட சிவானந்தகுரு பரிமழன் (வயது-29)என்பவருக்கு நினைவஞ்சலியை தெரிவிக்கிறேன்
இவரது தமயன் 1992 ம் ஆண்டு வீரச்சாவை தழுவிய கடற்புலி வீரர்
அதன் காரணமாக சமாதானா காலத்தில் இவர் சமூக விடயங்களில் அதிக அக்கறை செலுத்தினார் பின் சமாதானம் கேள்விக்குறி ஆன போது பலர் அவரை வன்னி செல்லுமாறு நிர்பந்தித்தும் வயதான அம்மா அத்துடன் சகோதரி ஆகியோரை தனியே விட்டு எவ்வாறு செல்வேன், என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். கடந்த ஞாயிறு எம்மூரில் நடந்த சுற்றிவளைப்பில் இவரது அடையாள அட்டையை ஆமி வாங்கிச் சென்று மறு நாள் வந்து வாங்கிச் செல்லுமாறு சொல்லியிருக்கிறான் .பயந்து பயந்து தனது சகோதரியை துணைக்கு அழைத்துக் கொண்டு பொலுகண்டி காம்புக்கு சென்று விசாரனை முடித்து வரும் வழியில் யாரோ ஈனப் பிறவியின் துப்பாக்கி அவன் மீது உமிழ்ந்திருக்கிறது.
மோட்டார் வாகனத்தில் வந்தவர்கள் அவன் மீது கம்பியை வீசி சைக்கிளினால் விழுத்தி விட்டு நான்கு முறை சுட்டு விட்டு சென்று விட்டார்கள்
தனியே உறவுகளை விட்டு செல்ல மறுத்த நீ இன்று தனியாக தூங்க சென்றாயோ?
ஆயிரம் மலர்கள் இப்போதும் உதிர்ந்த்தப் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
Friday, November 30, 2007
எனது வீட்டு அயல் நண்பன் சுட்டுக் கொலை
Posted by தமிழ்பித்தன் at 3:43 PM 6 comments
Sunday, November 25, 2007
கார்த்திகை தீபத் திருநாள்! வாழ்த்துக்கள்
அகம்பாவம் மிகக் கொடிது ஆணவமும் கொடியது அவற்றுடன் நிலைத்து தம்மை நிலை நிறுத்திக் கொண்டவர் என்பது கிடையாது. வாழ்க்கையின் ஓட்டத்தில் அகம்பாவத்தாலும் ஆணவத்தாலும் அழிந்து போகிறபலரை கண்முன்னே காணுகிறோம். ஆனாலும், அப்படியானவர் தங்களை திருத்த முயலாதது, மிக வருந்தக் கூடியவிடயம். அப்படியான ஆணவத்தை அழித்து பூமியிலே ஒளி பரவச் செய்யவும், சூரன் எனும் அகம்பாவம் கொண்ட அரக்கனை ஆழிக்கவும், முருகப் பொருமான் அவதாரம் எடுக்கிறார். அரக்கனை அழித்தும் விடுகிறார் தொடர்ந்தும் பலர் அழிக்கப் படுவதைக் காண்கிறோம். அந்த நன்நாளில் எல்லோரும் வீடுகளிலே தீபங்கள் ஏற்றி எம்மிலுள்ள அகம்பாவமும் ஆணவமும் அழிய கார்த்திகேயனைப் பிரார்த்திப்போம் .
அனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
அகம்பாவம் பற்றிய பாடல் இது.
Posted by தமிழ்பித்தன் at 5:22 AM 1 comments
Saturday, November 24, 2007
புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமாங்க?!
எயிட்ஸ் எனும் அரக்கனில் இருந்து நாம் எம்மை மட்டும் தற்காத்துக் கொள்ளவதோடு நின்றுவிடாது எம் சமூதாயத்திலும் பல விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி அழகான வளமான சமூகம் செய்வொம்!
நான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற எயிட்ஸ் விளம்பரத்துடன் முற்றிலுமாக முரண்பட்டு நிற்கிறேன். நான் நினைக்கிறேன் கட்டிய மனைவியுடன் மட்டும் பாலுறவு என்பது சாலப் பொருந்தும் என நினைக்கிறேன் ஏனெனில் ஒரு விதவையோ தபுதாரன் ஒருதனையோ மறுமணத்திற்க்கு முதலாவது கொள்கை தடுக்கும் அதே எனது கருத்து ஆதரிக்கும்
முதலாவது கருத்து திருமணத்திற்கு முந்திய பாலுறவை ஆதரிக்கும் ஆனால் எனது கருத்து அதை எதிர்த்து நிற்கிறது.
மேலும் ஒரு ஆணுறை பற்றி எமது கீழ் தேச மக்களிடம் நிலவும் கருத்துக்கள் அல்லது மூட நம்பிக்கைகள் மிகவும் வருந்தத் தக்கவை!
ஒருதடவை ஆபிரிக்க கிராம மக்களிடம் ஆணுறையை வழங்க முற்பட்ட ஐ.நா அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் வாக்குவாதம் நிகழ்ந்திருக்கிறது. ஏனென்றால் இது கடவுளுக்கு விரோதமான செயலாம். அதுதாங்க ஆணுறை அணிவது!
யாழ்பாண மக்களுடன் ஒரு மருந்தாளன் என்ற வகையில் பழகியதில் இது போன்ற பல அனுபவங்கள் உண்டு.
பலர் ஆணுறையை பாலுறவுக்கு இடையூறாக அதாவது பாலியல் கலவியில் முழுத்திருப்தி இன்மையை உணர்வதாக அறிக முடிகிறது
நான் கற்ற அளவிலே இது ஒரு மிகப் பெரிய முட்டாள் தனம் (கற்றதை விட அனுபவம் பெரிது எனில் நான் இந்த விடயத்தில் நான் பின்வாங்குகிறேன்)
சரியா! இதுக்கு மிஞ்சி விளக்க எனக்கு இந்த விடயத்தில் அனுபவம் இல்லை!
புள்ளி ராஜாவுக்கு ஒரு ஓ..ஓ..!
அவன் அவனெல்லாம் பட்டையைப் போடுறான் பங்குக்கு நாமும் ஏதும் போட வேண்டாமா? எண்ணியதன் விளைவு இந்தப்பட்டை
உங்கள் பக்கத்திலும் இதை இணைக்க விரும்பின் கீழே உள்ள code பயன்படுத்துங்கள்!
Posted by தமிழ்பித்தன் at 4:04 AM 0 comments
Sunday, November 18, 2007
கனடாவில் நடந்து முடிந்த வலைப்பதிவாளர் பட்டறை!
சென்னையை தொடர்ந்து புதுச்சேரி என பல இடங்களில் தமிழ் வலைப்பதிவாளர் பட்டறை நடக்கின்றன. கனடாவிலும் இப்போ நிறைய தமிழ் மக்கள் இருக்கிறார்களே அவர்களை கருத்தில் கொண்டு நாம் ஏன் ஒரு வலைப்பதிவு பட்டையை சீ..சீ பட்டறையை போட்டு வலைப்பதிவு பற்றிய சிந்தனையை கொண்டு செல்லக் கூடாது என நினைத்து ஆக்க பூர்வமான வேலைகளில் இறங்கினேன்
தமிழ் புலம்பெயரந்தவர்கள் அதிகமாக ஆங்கிலம் கற்க்கும் கல்லூரியில் தானேடா நீயும் படிக்கிறாடா அங்கேயே ஆரம்பிச்சுடடா உன் கைவரிசையை!
என்று மனம் போட்டு உசுப்பி எடுக்க!
சரி ஆரம்பிச்சுடலாம் என மனதில் உறுதி எடுத்துக் கொண்டு கல்லூரி சென்று அங்கே லஞ் ரைமுக்கு கூடிநின்ற தோழர்கள் தோழிகளிடம் யாருக்கும் புளோக்கிங் பற்றி தெரியுமா? என்று (மனதுக்க பெரிய லெக்சரர் என்ற மாதிரி பில்டப் விட்டபடி தொடங்கினேன்) அதற்க்கு பலர் தெரியாது என தலையாட்ட தலையாட்ட அங்க நின்ற ஒரு அறிவாறி சொன்னாள் பாருங்க ஒரு பதில்
புளாக்கிங் (blocking) என்றது புளாக் (block) என்பதன் -ing சேர்த்த வடிவம் என்றாள் ஆக!
இதுக்கு மேல வேணாம்யா! பதிவர் பட்டறை!
கொசுறு:- இணையத்தில் உலாவருகின்ற பலருக்கு வலைப்பதிவு (blogging ) பற்றி தெரிந்திருக்க வில்லை அவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது எம் பணியே!
Posted by தமிழ்பித்தன் at 1:50 PM 2 comments
Wednesday, November 14, 2007
புதிய ஜாதிகள் கண்டுபிடிப்பு!
இப்போது இருக்கிற ஜாதிகளின் எண்ணிக்கை கம்மியாக இருப்பதால் எங்கே இவை அனைத்தும் சுலபமாக அழித்துவிடலாம். என்று கருதிய ஒரு குழு புதிய ஜாதிகளை கண்டுபிடிப்பதிலும் தொலைந்து போன அல்லது காணாமல் போன ஜாதிகளை ஆராட்சி செய்து கண்டு பிடிப்பதிலும் மும்முரம் காட்டி வருகிறது அப்படி கண்டுபிடிக்கபட்ட சில புதிய ஜாதிகளை அதன் தலைவர் தோழி ஒருத்தி அறிமுகம் செய்து வைத்தார்.
அவற்றின் விபரம் வருமாறு:-
இணையப் பொறுக்கிகள்
கோப்பை கழுவிகள்
தெருப் பொறிக்கிகள்
மேலும் சில ஜாதிப்பெயர்கள் அறிமுகப் படுத்த பட்டிருந்தாலும் வலைப்பூவின் நன்மை கருதி வெளியிடவில்லை இந்த புளொக்கையாவது காப்பாத்த வேணும்
அந்தாலுந்த லுக்கே இரண்டுநாளா சரியில்லை ஆனாலும் பாப்பம்
Posted by தமிழ்பித்தன் at 3:45 AM 0 comments
Tuesday, November 13, 2007
கருணாநிதியும் ஜேயலலிதாவும் ரகசிய ஒப்பந்தம்! பரபரப்பில் தமிழ்நாடு
விரிவான செய்திகள்:- தமிழக முதலமைச்சரும் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்திருப்பதாக அறிய முடிகிறது. அது சம்பந்தமாக பல புகைப்படங்களும் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
நீண்ட நாட்களாக இருந்து வந்த ஊடல் இதனால் முடிவுக்கு வந்திருக்கிறது.
கருணாநிதி அவாவுக்கு கவிதை ஒன்றையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
ஜெயாவே! என்னை ஜெயிக்க வந்தவளே!
கன்னடத்துப் பைங்கிளியே!
என்கவிபட்டு உன்கால்கள் நடமாடும்
உன் கொடியிடை (இது கொஞ்சம் ஓவரு) தலையசைக்கும்
உன் கண்கள் தாளமிடும்
இவையெல்லாம் பார்த்த எனக்கு இதயவதிர்ச்சி!
நாளை இலையும் சூரியனும் இணைவது கண்டு
சைகோக்களும் ராம கொசு(க்)களும் பொசுங்கிப் போகுமே!
நாளை நம் தமிழகம் நன்றாய் மலரும்
அங்கே!
பல பாடசாலை பேருந்துகளும்
பல பத்திரிகை அலுவலகங்களும்
எரியூட்டும் காட்சி அரங்கேற்றுவோம் வா!
வாக்கு வாங்க காசுண்டு!
எமை கேட்க யாருண்டு!
நாளைய தமிழகம் ந(ா)ற்றமிழகமாய் மாற்றுவோம்!
அங்கே!
திரையுலகத்துக்கு சில சலுகை அதுபோதுமடி
எம் குலமோங்க!
தமிழ் வாழும் தமிழ் குலம் வாழும்!
Posted by தமிழ்பித்தன் at 3:26 AM 5 comments
Monday, November 12, 2007
வலைப்பூவின் தசாவதாரி!
விளங்கினால் விளங்குங்கள் விளங்காட்டி கம்முண்டு கிடவுங்கோ!
அடுப்பில் கடைசியாக காச்சிய சொதியை
திருடிக் குடித்த பூனையை வைத்து ஷங்கரின் சிவாஐி றேஞ்சில்
ஓர் படம் எடுக்க நினைத்து அதை படாது படுத்த அது வீட்டை விட்டு
தப்பி ஓடும் வழியிலே கண்ட குழவியுடன் ஓரு கொழுவல் ஒன்றை கொழுவியதால் ஏற்பட்ட காயத்தை ஆற்ற தன் ஆசாமி நண்பனிடம்
கொண்டோடி போய் காட்டியது.
யாரெண்டு கண்டு பிடிச்சிட்டியளோ!
அப்புடியெல்லாம் பார்க்கப்படாது! வேணாம் அழுதுடுவன்
Posted by தமிழ்பித்தன் at 3:50 AM 0 comments
Friday, November 9, 2007
இதுதான் சாதனை (வயதுக்கு வந்தவருக்கு மட்டும்)
நேற்றைய தினம் எனக்கு ஒரு குறுஞ் செய்தி வாழ்த்து வந்தது பாருங்கோ!
அதில் குறிப்பிட்டு இருந்தது.
அஸாரதீன் 37 Ballலில் 100 அடித்தார் இதுவல்ல சாதனை! திருதராட்டினன் இரண்டு ballலில் 100 அடித்தாரே அதுதான் சாதனை!
அப்படி நீரும் 100 அடிக்க வாழ்த்துக்கள் என்று குறிப்பீட்டிருந்தது.
ஏதாவது புரியுதா??
இந்த குழந்தை மனசுக்கு ஒன்றுமே புரியல போங்க!
Posted by தமிழ்பித்தன் at 7:15 AM 4 comments
Thursday, November 8, 2007
கானா வருவார் எனக் மயக்கத்துடன் காத்திருக்கும் பாவனா?? (நேரடி வீடியோ செய்தி )
Posted by தமிழ்பித்தன் at 10:11 PM 2 comments
Wednesday, November 7, 2007
கானா பிரபாவுக்கும் பாவனாவுக்குமிடையே தொடர்பு!
றேடியோஸ்பதி புகழ் கானா பிரபாவுக்கும் தீபாவளி திரைப்பட புகழ் பாவனாக்குமிடையே தொடர்பு! வலைப்பூவுலகமே அதிரும் படியான செய்தி!
நீண்ட காலமாக ஏதோ முன்பின் தொடர்பு இருப்பதாக எமது நண்பர்கள் வட்டத்திலே அறியப்பட்டாலும் அதை நிரூபிக்க ஆதாரங்ககள் இன்றி தவித்தோம். இன்று அதற்கான ஆதாரம் புகைப்பட வடிவில் கிடைத்தது. அது கீழே இருக்கிறது பாருங்கள்.
அனைவருக்கும் தீபத்திருநாளாம் தீபாவளி
நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
Posted by தமிழ்பித்தன் at 9:36 PM 20 comments