Friday, November 30, 2007

எனது வீட்டு அயல் நண்பன் சுட்டுக் கொலை

கடந்த திங்கட்கிழமை வல்வெட்டித்துறை தெனியம்பை என்கின்ற இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட எமது வீட்டுக்கு அருகில் வசிக்கும் பரி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட சிவானந்தகுரு பரிமழன் (வயது-29)என்பவருக்கு நினைவஞ்சலியை தெரிவிக்கிறேன்

இவரது தமயன் 1992 ம் ஆண்டு வீரச்சாவை தழுவிய கடற்புலி வீரர்

அதன் காரணமாக சமாதானா காலத்தில் இவர் சமூக விடயங்களில் அதிக அக்கறை செலுத்தினார் பின் சமாதானம் கேள்விக்குறி ஆன போது பலர் அவரை வன்னி செல்லுமாறு நிர்பந்தித்தும் வயதான அம்மா அத்துடன் சகோதரி ஆகியோரை தனியே விட்டு எவ்வாறு செல்வேன், என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். கடந்த ஞாயிறு எம்மூரில் நடந்த சுற்றிவளைப்பில் இவரது அடையாள அட்டையை ஆமி வாங்கிச் சென்று மறு நாள் வந்து வாங்கிச் செல்லுமாறு சொல்லியிருக்கிறான் .பயந்து பயந்து தனது சகோதரியை துணைக்கு அழைத்துக் கொண்டு பொலுகண்டி காம்புக்கு சென்று விசாரனை முடித்து வரும் வழியில் யாரோ ஈனப் பிறவியின் துப்பாக்கி அவன் மீது உமிழ்ந்திருக்கிறது.

மோட்டார் வாகனத்தில் வந்தவர்கள் அவன் மீது கம்பியை வீசி சைக்கிளினால் விழுத்தி விட்டு நான்கு முறை சுட்டு விட்டு சென்று விட்டார்கள்
தனியே உறவுகளை விட்டு செல்ல மறுத்த நீ இன்று தனியாக தூங்க சென்றாயோ?

ஆயிரம் மலர்கள் இப்போதும் உதிர்ந்த்தப் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

6 comments:

தமிழ்பித்தன் said...

அனானியின் கருத்து நீக்கபடுகிறது அவரின் புரிதல் தவறாக உள்ளது

கானா பிரபா said...

தமிழ்ப்பித்தன்

யாழ்ப்பாணம் திறந்த வெளி சுடுகாடு, இழப்புக்கள் தொடர்கதை.

ஆழ்ந்த அனுதாபங்கள்

தமிழ்பித்தன் said...

உங்கள் அனுதாபத்துக்கு நன்றி!

அங்க மிருகத்துக்கு உள்ள சுதந்திரம் சந்தோசம் மனினுக்கு இல்லை

ILA (a) இளா said...

ஆழ்ந்த அனுதாபங்கள் :(

தமிழ்பித்தன் said...

நன்றி இளா!
உங்கள் அனுதாபத்துக்கு தலை வணங்குகிறேன்

aaru said...

ஆழ்ந்த அனுதாபங்கள்,

எனது நண்பன் ஓருவனைக்குட விடிய காலை 5மணிக்கு வீடு புகுந்து தாய் தகப்பனுக்கு முன்னால வைத்து சுட்டதுகள். இது நடந்தது அகஸ்ட் 1. இவைக்கெல்லாம் ஓரு நாள் இருக்கண்ன ஆப்பு