எது நாகரீகம் என்கிறாய்!
அன்பான வார்த்தை கதைத்து
இடையே "அன்பே சிவம்" என்றும்
பசுவைத் தெய்வம் என்றும்
கூறி...
மனிதத்ததை அடிமையாக்கி
பரதேசிபோல் நோக்கும்
நீதான் நாகரீக கோமாளி!
திரோபதைக்கு துயிலளிக்கும் கண்ணண்
போருக்கு கணவரை தூண்டிவிட்டு
இரத்த களறி ஓட விட்ட
கதை கேட்டுப் பூரித்துப் போன
புனிதக் குஞ்சுகளே உன்னருகில்
எத்தனையர் துயிலின்றி
அதை நினையாத
நீதான் நாகரீக கோமாளி!
தர்மங்கள் அழிந்து அதர்மம் ஓங்கும் போது பிறப்பெடுக்கும்
கண்ணணிடம் ஓர் கேள்வி தர்மம் ஒரு கிலோ என்ன விலை??
Thursday, January 31, 2008
தமிழச்சியின் அண்மைய பதிவுகளால் குழம்பிப்போன நாகரீக குஞ்சுகள்
Posted by தமிழ்பித்தன் at 4:38 PM 0 comments
தமிழ்மணத்தில் பரபரப்பு:- மீண்டும் தமிழச்சியின் தளம் தாக்கப்பட்டது
Posted by தமிழ்பித்தன் at 12:55 PM 5 comments
இந்த பேட்டுச் சுரக்காய் வெறும் ஏட்டுச் சுரக்காயே!
கைவிரல் ரேகை தேய கணணியில் தட்டும் அக்கா தமிழ் இனம் உச்சம் தலையில் தட்டியே திருந்தல நீங்கள் கணணியில் தட்டியா திருந்த போகுது வெறும் ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாதம்.
Posted by தமிழ்பித்தன் at 8:13 AM 1 comments
Sunday, January 27, 2008
தமிழச்சியின் கோபம் நியாயமானதா????
எதையும் விளையாட்டாகவும் நகைச்சுவையாகவும் எதிர்வினைக் கருத்தாக எடுக்கும் எனது வாழ்வியல் குணாம்சம் தமிழச்சியின் விடயத்திலும் தாக்கத்தை காட்டியது ஆகவே இது நான் மனதளவில் எழுதும் ஒரு சீரியசான பதிவாக இருக்கும் என்று நம்புகிறேன்
தமிழச்சி சில காலமாக தவறான வார்த்தைப் பிரயோகம் செய்வதாக குத்தி முறிந்து கூக்கிரல் இடுகிறார்கள் பலர். அதில் இந்துத்துவ சாதிய வெறியின் கொப்பளிப்பு தெரிகிறது. இந்துத்துவம் செய்யாத சொல்லாத காம வன்மங்களையா தமிழச்சி குறிப்பிட்டு விட்டார் அல்லது கூறிவிட்டார்.
அவரது சமூகத்தின் மீதான நீயாயமான கோபக் கொப்பிளிப்பின் தடம் புரண்ட ஒரிரு வார்த்தைகளுக்கு அர்த்தம் தேட விளையும் மூடர்களிடம் சில கேள்வி;
சாதியம் சாதியம் என்று கூக்குரல் இடுகிறீர்களே ஒரு தாய் பெற்ற பிள்ளைகளில் ஒன்றை உயர்வாகவும் மற்றதை தாழ்வாகவும் பார்க்குமானால் அந்த தாயை தாழ்வாக பார்க்கப்படும் குழந்தை ஏற்ற மறுக்கிறது. அதே போல தாழ்த்தப்பட்டவனின் நிலை அதை நீங்கள் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்
ஒரு நாய்குள்ள மரியாதையை கூட தர மறுக்கும் சமூகத்திடம் தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வாறு அன்புடன் பழக முடியும். என நினைக்கிறீர்கள். இவற்றை எல்லாம் நியாயமான முறையில் சொல்ல விளைந்தால் தமிழச்சிக்கு சொல்லடி, செருப்பிடி, இணைய கயமை கடைசியாக வளர்மதியின் செவிட்டடி!
அவரின் கோபத்தையும் சமூகம் மீதான அக்கறையையும் கவனத்தில் எடுக்காமல் ஏதோ விதாண்டா வாதம் செய்தாலும் பரவாயில்லை அவரை புண்படுத்துமளவுக்கு நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது
"பார்ப்பனியமும் தீட்டாமையும் ஒழிப்போம் பகுத்தறிவு கொண்டே..."
Posted by தமிழ்பித்தன் at 3:35 AM 10 comments
Friday, January 25, 2008
பெரியார் திரையரங்கில் பலனா படமா???????
Posted by தமிழ்பித்தன் at 1:39 AM 12 comments
Monday, January 21, 2008
Sunday, January 20, 2008
நானும் எனது உண்டியலும் ((நினைவில் மலர்பவை தொடர்கிறது))
அப்போ எனக்கு 10 , 11 வயசிருக்கும் அப்பா வங்கியில் பென்சன் எடுப்பதால் சித்திரைப் புத்தாண்டு அன்றைக்கு அப்பாக்கு ஒரு உண்டியல் மக்கள் வங்கியால் வழங்கப்பட்டது. அப்பா அதை எனக்கு பரிசாக அளித்தார். சரி ஒருக்கா நானும் அதை நிரப்பி பார்ப்பம் என்று தொடங்கியாச்சு கோயிலுக்கு போகேக்க தார காசெல்லாம் அதுக்க போச்சு.
அடுத்த, ஒரு நிரந்தர கொள்கை இருந்திச்சு அதுக்க ஐந்து ருபாவ தவிர வேற ஒன்றும் போடுவதில்லை. என்று அம்மம்மா அப்பப்ப கொஞ்ச காசு தர்றவா அதையும் கொண்டு போய் போடுவன். ((இதை அறிஞ்சு அவா காசுக்கு பதிலாக பண்டமாக வழங்க தொடங்கினது வேற கதை)) அப்பிடி இப்பிடி அங்க பிடுங்கி இங்க பிடுங்கி உண்டியலுக்க போட்டால் அது நிரம்பிற பாட்டை காணவில்லை. என்னடா, இது இப்போதைக்கு நிரம்பாதோ? என்ற ஏக்கம் வேற தினமும் குச்சி விட்டு அளந்து பார்கிறது. இப்பிடியே, ஏக்கத் தோட காலத்தை கழிச்சன்.
அப்ப, ஒரு நாள் வழமைபோல ரீயூஷன் விட்டு வேளைக்கு வீடு திரும்பினம் அம்மா உண்டியலை தலைகீழா கவித்த படி ஒரு குச்சியால ஒவ்வொரு காசு குத்தியா எடுக்கிறா. எனக்கு பொத்தண்டு வந்துதே கோபம். உடனே புத்தகங்களை எல்லாம் சுழட்டி எறிஞ்சிட்டு மண்ணுக்க வந்து பிரண்டு உறுண்டு அழ தொடங்கியாச்சு அப்பா வந்து சமாதானம் செய்து பார்த்தார் (((இதுதான் எங்க ஊர் சிறுவர் பாவிக்கிற அதியுச்ச ஆயுதம் இதை பாவிச்சா பேச்சு வார்த்தைக்கே இடமில்லை என்றுதான் அர்த்தம்)). சரி வரவில்லை ((((எனக்கு எள்ளுப்பாகு வேண்டத்தான் எடுத்தவா அம்மா)), உடனே கடைக்குப் போய் 200 ரூபாவை ஐந்து ரூபாவாக மாற்றி உண்டியலுக்க போட்டபொதுதான் அழுகை நின்னிஞ்சு.
அப்படி, இப்படியாக உண்டியல் நிரம்பிச்சு ஒரு தீபாவளிக்கு முதல் அதை உடைச்சு எண்ணினேன் 1885 இருந்திச்சு அப்ப நான் என்னை நானே கோடீஸ்வரனாகதான் எண்ணினேன் அப்ப இருந்த சந்தோசம் இப்ப ஒரு மில்லியன் லாட்டரி அதிஸ்டம் அடிச்சா கூட வருமா தெரியலை
11 வருடங்களின் பின் மீண்டும் இன்று ஒரு உண்டியலை வாங்கினேன்.சேர்ப்பதற்கல்ல சிதையாமல் இருப்பதற்க்கு!
Posted by தமிழ்பித்தன் at 4:01 PM 2 comments
Monday, January 14, 2008
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
தை
எதை - நீ
எமக்காக - விதை-ப்பாய்
இந்நாளில்
சி-தை மீதான வாழ்க்கைக்கு தீர்வா?
கந்தக புகை மறந்து
மாசற்ற மாநிலம் கண்டு
மழுங்கி புகைகள் தெளிந்து
சிங்கள பேய்கள் ஓய்ந்து
தமிழர் தம் கரங்கள் ஓங்கி!
தாயகம் மணம் தரணி எங்கும் வீசிடவே
பொங்கிடுவாய் தமிழ் தை-மகளே
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Posted by தமிழ்பித்தன் at 2:38 AM 0 comments
Sunday, January 13, 2008
ஹி..ஹி சிரிங்க..!
நம்மட இரண்டு பேர் பிரான்ஸ் போய் வாழ்க்கையை தொடங்கினார்கள் அவர்கள் அங்க வேலைக்கு போவதும் வழக்கம் அங்கேயும் ஊரைப் போல சாப்பாடு கட்டிக் கொண்டு போவது வழக்கம். அவர்கள் வழமையாக வேலைதளத்தில்தான் உணவருந்துவது வழக்கம். அன்று ஒருவன் சொன்னான் "வா இன்று நாம் ஏதாவது உணவகத்துக்குப் போய் ஒரு குளிர்பாணத்தோடு உணவை அருந்துவோம்" என்று அதற்க்கு மற்றவனும் ஆமோதிக்கவே இருவரும் ஒரு உணவகத்தை அடைந்தனர். ஒவ்வொரு குளிர்பாணத்தை ஓடர் செய்து விட்டு தங்கள் உணவு பொட்டலங்களை பிரித்து உண்ண ஆரம்பித்த வேளை அங்கே வந்த உணவக மேலாளர் "இங்கே உங்கள் சொந்த உணவுகளை நீங்கள் உண்ணுவதை அனுமதிக்க முடியாது" என்றார் உடனே அவர்கள் "சரி சார்" என்று தலையசைத்து விட்டு தங்கள் உணவுப் பொட்டலங்களை மாற்றி உண்ண ஆரம்பித்தார்கள்
Posted by தமிழ்பித்தன் at 6:28 PM 2 comments
Saturday, January 12, 2008
கடந்த வருடங்களுக்கான விருதுகள் அறிவிப்பு!
எல்லாரும் விருது குடுக்கிறாங்கள் ((றூம் போட்டு யோசிச்சிருப்பாங்களோ??) நாமலும் நம்மட கடனுக்கு நாலு பேருக்கு விருது குடுப்பம் என்று முடிவெடுத்தன். யாருக்கு என்ன விருது குடுக்கலாம் என்று யோசிச்சு வைச்சுட்டு பேந்து பாத்தன் சரி நம்மட பதிவர்கள் என்ன நினைக்கிறார்கள் பார்ப்பம் என்று முடிவெடுத்து இப்ப விருதை உங்கள் கையில் விடுறன் கீழே காணப்படுகிற விருதுகளுக்கு யார் யார் பொருத்தம் என்று கூறுங்கள் சரியாக விடைகளை யார் அதிகம் கூறுகிறாரோ அவர் தமிழ் வலையுலக சிரஞ்சீவி 2007 என்ற வலையுலகின் அதியுயர் விருதைப் பெற்றுக் கொள்வார்
1) இசைப் புயல் இருப்பதால் இசைச் சூறாவளி (இவர் ஒரு பதிவிரதன்)
2) மஞ்சள் துண்டை கனவு காண்பவர் ((இவரின் பார்வையே ஒரு மாதிரிதான்))
3) தசாவதாரி ((இவர் தனது பூனைக்குட்டியை கனகாலமா தேடுறார் சுந்தரா ரவல்ஸில் வடிவேலின் பாஸ்போட்டை எலி கோண்டு போனது போல் இவரின் எலியை பூனைக்குட்டி கொண்டு போட்டுது அதுதான் தேடுறார் தப்பான அர்த்தம் எடுக்க வேண்டாம் கணணி சுண்டெலியை சொன்னேன்))
4)வெள்ளித்திரை இவருக்கு (((சின்ன))குட்டிகளென்றாலே குஷாலாயிடுவார்
5)சேகுவரா ((வலையுலக பொதுவுடமை வாதி))
6)ரவுசர்ப்பாண்டி ((இப்ப இவர் கிழிப்பது இல்லையாம் இவரின் கிழிக்கப்படுகிறதாம்))
7)வலையுலக சுப்பர் ஸ்ரார் (அவரோ ஆஸ்தீகம் இவரோ நாஸ்தீகம் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறான்ரா இவன் நல்லவன் போல கிடக்குடா.......
இனி மூன்று சீரியசான கேள்விகள்
8)*சென்ற ஆண்டின் தமிழ்வலைப்பூவுலகின் சிறந்த முயற்சி எது?
9)*யாழ்ப்பாணத்திலிருந்து முதல் வலைப்பதியப்பட்ட வலைப்பதிவு எது?
10)*அப்போது அவர் என்ன புனைப்பெயரில் எழுதினார்?
சரி உங்கள் பதில்களை தட்டுங்கள்
நிபந்தனைகள்
ஒருவர் குறைந்தது இரண்டு பின்னூட்டம் இடவேண்டும் ஒன்று போட்டியின் விடைகளும் மற்றையதில் போட்டி பற்றிய கருத்துக்களும் காணப்பட வேண்டும் விடைகள் அடங்கிய பின்னூட்டம் பிரசுரிக்கபடமாட்டாது
ஒருவர் எத்தனை தடவையானாலும் பதிலளிக்கலாம் ஆனால் எதில் அதிக விடைகள் சரியாக காணப்படுகிறதோ அது போட்டிக்கு எடுக்கப்படும்
கால எல்லை
அடுத்த வார இறுதி வரை
நடுவர் குழு
எழுத்தாளர் சுஜாதா கவிப்பேரரசு வைரமுத்து நடிகர் சேரன் என்று எல்லாம் பில்டப் கிடையாது அனைத்தும் யாமே!
பரிசு ;- வலையுலக சிரஞ்சீவிக்கு ஒரு வாரகால Rapidshare கட்டணக் கணக்கு
Posted by தமிழ்பித்தன் at 5:21 AM 0 comments
Monday, January 7, 2008
பில்கேட்ஸ் விடை பெற்றார் அவரது நகைச்சுவை வீடியோவும்
பில்கேட்ஸ் தனது மைக்ரோ சாப்ட் வேலையை துறந்து கோண்டார் அது தொடர்பாக நடந்த கூட்டம் ஒன்றில் அவர் தான் பதவி ஓய்வு பெற்றவுடன் என்னவெல்லாம் செய்வேன் என ஒரு நகைச்சுவை வீடியோவையும் போட்டு காண்பித்து அசத்தினார் அவற்றை பார்த்து மகிழுங்கள்
Posted by தமிழ்பித்தன் at 1:25 PM 6 comments