Sunday, January 20, 2008

நானும் எனது உண்டியலும் ((நினைவில் மலர்பவை தொடர்கிறது))

அப்போ எனக்கு 10 , 11 வயசிருக்கும் அப்பா வங்கியில் பென்சன் எடுப்பதால் சித்திரைப் புத்தாண்டு அன்றைக்கு அப்பாக்கு ஒரு உண்டியல் மக்கள் வங்கியால் வழங்கப்பட்டது. அப்பா அதை எனக்கு பரிசாக அளித்தார். சரி ஒருக்கா நானும் அதை நிரப்பி பார்ப்பம் என்று தொடங்கியாச்சு கோயிலுக்கு போகேக்க தார காசெல்லாம் அதுக்க போச்சு.

அடுத்த, ஒரு நிரந்தர கொள்கை இருந்திச்சு அதுக்க ஐந்து ருபாவ தவிர வேற ஒன்றும் போடுவதில்லை. என்று அம்மம்மா அப்பப்ப கொஞ்ச காசு தர்றவா அதையும் கொண்டு போய் போடுவன். ((இதை அறிஞ்சு அவா காசுக்கு பதிலாக பண்டமாக வழங்க தொடங்கினது வேற கதை)) அப்பிடி இப்பிடி அங்க பிடுங்கி இங்க பிடுங்கி உண்டியலுக்க போட்டால் அது நிரம்பிற பாட்டை காணவில்லை. என்னடா, இது இப்போதைக்கு நிரம்பாதோ? என்ற ஏக்கம் வேற தினமும் குச்சி விட்டு அளந்து பார்கிறது. இப்பிடியே, ஏக்கத் தோட காலத்தை கழிச்சன்.

அப்ப, ஒரு நாள் வழமைபோல ரீயூஷன் விட்டு வேளைக்கு வீடு திரும்பினம் அம்மா உண்டியலை தலைகீழா கவித்த படி ஒரு குச்சியால ஒவ்வொரு காசு குத்தியா எடுக்கிறா. எனக்கு பொத்தண்டு வந்துதே கோபம். உடனே புத்தகங்களை எல்லாம் சுழட்டி எறிஞ்சிட்டு மண்ணுக்க வந்து பிரண்டு உறுண்டு அழ தொடங்கியாச்சு அப்பா வந்து சமாதானம் செய்து பார்த்தார் (((இதுதான் எங்க ஊர் சிறுவர் பாவிக்கிற அதியுச்ச ஆயுதம் இதை பாவிச்சா பேச்சு வார்த்தைக்கே இடமில்லை என்றுதான் அர்த்தம்)). சரி வரவில்லை ((((எனக்கு எள்ளுப்பாகு வேண்டத்தான் எடுத்தவா அம்மா)), உடனே கடைக்குப் போய் 200 ரூபாவை ஐந்து ரூபாவாக மாற்றி உண்டியலுக்க போட்டபொதுதான் அழுகை நின்னிஞ்சு.

அப்படி, இப்படியாக உண்டியல் நிரம்பிச்சு ஒரு தீபாவளிக்கு முதல் அதை உடைச்சு எண்ணினேன் 1885 இருந்திச்சு அப்ப நான் என்னை நானே கோடீஸ்வரனாகதான் எண்ணினேன் அப்ப இருந்த சந்தோசம் இப்ப ஒரு மில்லியன் லாட்டரி அதிஸ்டம் அடிச்சா கூட வருமா தெரியலை

11 வருடங்களின் பின் மீண்டும் இன்று ஒரு உண்டியலை வாங்கினேன்.சேர்ப்பதற்கல்ல சிதையாமல் இருப்பதற்க்கு!

2 comments:

வவ்வால் said...

தமிழ் பித்தன்,
இது போல உங்களுக்கு நன்றாக எழுது வருகிறதே , தொடர்ந்து எழுதவும்.(அவ்வப்போது பித்தம் ஏறிவிடுகிறது :-)))

அப்போது இங்கே கூட sbi வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அழகான உண்டியல் கொடுப்பார்கள்,அதற்கு சாவி எல்லாம் இருக்கும். நானும் அப்படிக்காசுப்போட்டதுண்டு. அப்போதெல்லாம் சொந்தக்காரர்கள் வந்துவிட்டு ஊருக்கு திரும்புகையில் காசு தருவார்கள். எங்கம்மா வாங்கக்கூடாது என்று மிரட்டுவார்கள், அதையும் மீறி நம் கையில் திணிப்பார்கள் உறவினர், நாம் ஏதோ பயந்துக்கொண்டே வாங்குவது போல வாங்கிக்கொள்வோம். அதை எல்லாம் உண்டியலில் போட்டு வைப்பேன்.ஆனால் எனக்கு ஒரு முறை கூட நிரம்பியதே இல்லை.பின்னர் நானே குச்சியை விட்டு காசு எடுத்தால் எப்படி நிரம்பும்.

தமிழ்பித்தன் said...

எனக்கும் அண்ணா இப்பிடி எழுத வேணும் என்றுதான் ஆசை இப்பிடி எழுதினால் யார் கண்டுக்கிறான் அப்பப்ப நானும் இருக்கிறதை உறுதிப்படுத்த சில உறட்டுகள் செய்ய வேண்டிக் கிடக்கு!

உங்கள் ரசனைக்கு ஏற்றால் போல் தொடர்ந்து எழுதுவேன் இதை ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி