Sunday, January 27, 2008

தமிழச்சியின் கோபம் நியாயமானதா????

எதையும் விளையாட்டாகவும் நகைச்சுவையாகவும் எதிர்வினைக் கருத்தாக எடுக்கும் எனது வாழ்வியல் குணாம்சம் தமிழச்சியின் விடயத்திலும் தாக்கத்தை காட்டியது ஆகவே இது நான் மனதளவில் எழுதும் ஒரு சீரியசான பதிவாக இருக்கும் என்று நம்புகிறேன்
தமிழச்சி சில காலமாக தவறான வார்த்தைப் பிரயோகம் செய்வதாக குத்தி முறிந்து கூக்கிரல் இடுகிறார்கள் பலர். அதில் இந்துத்துவ சாதிய வெறியின் கொப்பளிப்பு தெரிகிறது. இந்துத்துவம் செய்யாத சொல்லாத காம வன்மங்களையா தமிழச்சி குறிப்பிட்டு விட்டார் அல்லது கூறிவிட்டார்.

அவரது சமூகத்தின் மீதான நீயாயமான கோபக் கொப்பிளிப்பின் தடம் புரண்ட ஒரிரு வார்த்தைகளுக்கு அர்த்தம் தேட விளையும் மூடர்களிடம் சில கேள்வி;

சாதியம் சாதியம் என்று கூக்குரல் இடுகிறீர்களே ஒரு தாய் பெற்ற பிள்ளைகளில் ஒன்றை உயர்வாகவும் மற்றதை தாழ்வாகவும் பார்க்குமானால் அந்த தாயை தாழ்வாக பார்க்கப்படும் குழந்தை ஏற்ற மறுக்கிறது. அதே போல தாழ்த்தப்பட்டவனின் நிலை அதை நீங்கள் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்

ஒரு நாய்குள்ள மரியாதையை கூட தர மறுக்கும் சமூகத்திடம் தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வாறு அன்புடன் பழக முடியும். என நினைக்கிறீர்கள். இவற்றை எல்லாம் நியாயமான முறையில் சொல்ல விளைந்தால் தமிழச்சிக்கு சொல்லடி, செருப்பிடி, இணைய கயமை கடைசியாக வளர்மதியின் செவிட்டடி!

அவரின் கோபத்தையும் சமூகம் மீதான அக்கறையையும் கவனத்தில் எடுக்காமல் ஏதோ விதாண்டா வாதம் செய்தாலும் பரவாயில்லை அவரை புண்படுத்துமளவுக்கு நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது

"பார்ப்பனியமும் தீட்டாமையும் ஒழிப்போம் பகுத்தறிவு கொண்டே..."

10 comments:

Anonymous said...

தமிழச்சி என்ற ஒரு தனிப்பட்ட பெண் மீது யாருக்கும் வெறுப்பு இருக்க நியாயமில்லை.
அவரை வெறுக்க, கடுமையாக விமர்சிக்க போதுமான காரணங்கள் உண்டு.
பெரியாரின் பெயரால் அவர் எழுதும் கட்டுரைகளை யாரும் தடுக்க முடியாது. அது அவரின் எழுத்துரிமையை மீறும் செயலாகும். ஆனால் அவரை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.
அவரிடம் வெளிப்படையான வன்முறைப்போக்குத் தெரிகிறது.

அவர் இந்து மதத்தை மட்டுக் ஏன் குறிவைத்துத் தாக்குகின்றார்?
அவருடைய பார்வையில் ஏனைய மதங்கள் திருந்திவிட்டதா? அல்லது ஏனைய மதப் பதிவாளர்களின் தாக்குதலில் இருந்து தப்பியோட விரும்புகின்றாரா?

யோனி, ஆண்குறி இதையெல்லாம் விளம்பரச் சொற்களாகப் பயன்படுதி சுயவிளம்பரம் தேடுகிறாரா?

மனித சமூக வளர்ச்சிக்காக பல விடயங்கள் பேசப்பட வேண்டிய நேரத்தில் பத்துக்காசுக்கு பெறுமதியற்ற பாரிஸ் நிகழ்வுகளை எழுதி சண்டைக் கோழியாக எழுதுவதில் சுய திருப்தி அடைகின்றாரா?. முடிந்தால் ஈழத் தமிழர்களை விமர்சித்தல்.

பெண்ணுரிமை என்றால் சட்டையை மடித்துக் கட்டிவிட்டு தெருவில் நின்று தெருச்சண்டை போட வாருங்கள் என அழைப்பது போன்று தெரிகிறது.


ஆரம்பத்தில் அவருடைய பதிவுகளில் இருந்து பெரியார் குறித்த கருத்துக்களை அறிய விரும்பியவர்களே தமிழச்சியின் பதிவுகளை தவிர்க்க விரும்புகின்றார்கள்.
குறிப்பாக குழந்தைகள் தமிழச்சியின் பதிவுகளை வாசிக்காமல் தடுப்பது நல்லது.

தமிழன்

தமிழ்பித்தன் said...

தமிழன் உங்கள் கருத்துக்கு நான் விளக்கம் பின்பு தருகிறேன்

Anonymous said...

////அவர் இந்து மதத்தை மட்டுக் ஏன் குறிவைத்துத் தாக்குகின்றார்?
அவருடைய பார்வையில் ஏனைய மதங்கள் திருந்திவிட்டதா? அல்லது ஏனைய மதப் பதிவாளர்களின் தாக்குதலில் இருந்து தப்பியோட விரும்புகின்றாரா?/////

இங்கே போய் பாரு கண்ணா.. உனக்கு இருக்கு ஆப்பு

http://thamizachi.blogspot.com/2008/01/blog-post_9940.html

http://thamizachi.blogspot.com/2008/01/blog-post_9864.html

http://thamizachi.blogspot.com/2008/01/blog-post_5957.html

http://thamizachi.blogspot.com/2008/01/blog-post_8628.html

http://thamizachi.blogspot.com/2008/01/blog-post_01.html

bala said...

தமிழ்ப் பித்தன் அய்யா,

உயர் சாதியினரான திராவிட தமிழர்களின் ஆணாதிக்க போக்கையும்,சாதி வெறியையும்,தாழ்த்தப்பட்டவர்கள் மீது அவர்கள் செலுத்தும் வன்முறையையும் ஒரே சமயத்தில் தோலுறித்து,வெளிச்சம் போட்டு , உலகத்துக்கு அவர்களின் கேவலமான இரட்டை நிலைப் பாட்டை காட்டி விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.தோழர் தமிழச்சியின் எழுத்துக்களை கண்டு தாடிக்காரரின் தாடி பெருமிதத்தில் இன்னும் நாலு ,அங்குலம் வளர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.தாடிக்காரர் உயிரோடு இருந்திருந்தால்,வீரமணியை தூக்கிவிட்டு,தமிழச்சியையே வாரிசாக அறிவித்திருப்பார்.வாழக தமிழச்சி செய்யும் பாசறை தொண்டு.

பாலா

தமிழ்பித்தன் said...
This comment has been removed by the author.
தமிழ்பித்தன் said...

cooooooooooooooooooool.........

Anonymous said...

ஊரில ஒரு பழமொழி சொல்லுவாங்கள்.
'முட்டாள் பீய மிதிச்சா 3 இடம் நாசம்'
ஏன்னா முட்டாள் பீய மிதிச்சுட்டு எல்லா இடமும் தேய்ப்பான்.
தமிழ்மணத்து புதுமொழி.
'தமிழச்சி கூட சீண்டினா தமிழ்மணமே நாசம்'.
3 இடமில்லை 30 இடம் நாசம்.

Anonymous said...

மனச்சாட்சியை தொட்டு எழுது! உன் அக்கா, தங்கச்சி யோனி/ ஆண் குறி என விளம்பரத்துக்கு அலைஞ்சா என்ன பாராட்டுவியா?

வி.சபேசன் said...

தமிழ்பித்தனுடைய வலைப்பதிவும் திருடப்பட்டு விட்டதா?
என்ன கொடுமை இது?

தமிழ்பித்தன் said...

இதுதான் உண்மையான எனது நிலை சமூகத்திடம் கோபப்படுவதை தவிர எம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே இது எமது இயலாமையும் கூட