Wednesday, December 5, 2007

பிகருக்கு வரவிலக்கணம்.....


எனது நண்பனின் பிறந்தநாள் கடந்த ஞாயிறு கொண்டாடப் பட்டது. நானும் போனேன். அங்கே எல்லோரும் ஏதோ விட்டுக் குடித்துக் கொண்டிருந்தார்கள். நான் வழமையாக அவற்றை எல்லாம் புறக்கணித்து விட்டு குழந்தைகளின் சங்கீத கதிரை விளையாட்டில் நடுவராக வந்து அமர்ந்து விடுகிறேன்.
((மூன்று வருடமாக தண்ணிக்கே தண்ணி காட்டுறம்))

ஆனால் நண்பன் விடுவதாக இல்லை வா நண்பா வந்து கொஞ்சமாக தனக்கா என்றான்.(நான் அடிச்சாத்தான் அவனுக்கு போதையேறுமோ?.) சரி யெண்டு (நல்ல சாட்டு கிடைத்தது). நண்பா உனக்காகதான் வாரன் மற்றம் படி எல்லாம் விட்டுட்டன் தெரியும்தானே என்று பீலா எல்லாம் விட்டபடி போய் அமர்ந்தால் வழமைபோல் அவர்களது தத்துவார்ந்த சிந்தனையை ஆரம்பித்தார்கள்.

அப்ப ஒருவன் டோய் ஸ்கூலுக்கு போறாய் ஏதாவது தமிழ் ஹிந்தி பிகருகள் அம்பிட்டுதோடா? என்று கேட்க.
((நாமளும் மிகவும் நல்லவன் தானே))

அண்ணா பீகரேண்டா என்ணணா? (நம்ம டாக்டர் ரைலில்)

அவன் ஆத்திரத்தில் ஆகா ஏறினத இறங்கப் பண்ணிடியேடா பாவி..

மச்சான் இவனுக்கு பிகரெண்டால் என்னனு தெரியாதாம் அதுக்கு ஒரு வரவிலக்கணம் எடுத்து விடு என்றான் அதுக்கு மற்றவன்...

பிகரெண்டால்!அலுங்காமல் குழுங்காமல் அம்சமாக செக்க செவேலென ஓரு கன்னிப் பெண்ணு இருந்தால் அது பிகர் எனப்படும் என்று முடித்தார்.

எனக்குள்ள தூங்கிக் கிட்டிருந்த கண்ணதாசன் அப்பப்ப பிரண்டு உறுண்டு படுத்தவர் இதைக் கேட்டவுன் எழுந்து இது பிழை என்றார்.(எல்லாம் இந்தால் உள்ள போனதால வந்த வினை)

அதுக்கு ஒருத்தன் நக்கீரர் ரைலில் சொற்குற்றமா? பொருள் குற்றமா? என்றான்.
அதுக்கு நான் எனக்கு மற்றப் பெக் வாக்காமல் இருக்கிறியளே அதுதான் குற்றம் என்றேன்.

சரி உள்ளேயிருந்து ஒரு குரல் ஊத்துடா இன்னும் ஊத்து அப்பத்தான் கண்ணதாசன் விழிப்பாரு என்று.. சரியெண்டு நானும் மடமடவென கொஞ்சத்தை அடிச்சுட்டு டேய் நிறுத்துங்கடா? என்றொரு சத்தம். (அடேய் யாரெண்டு கேளாதெயும் அது நான்தான்)

உதென்னடா? பிகருக்கு வரவிலக்கணம். அப்ப கறுப்பாயிருந்தால் பிகரு கிடையாதா? கன்னி மட்டும் தான் பிகரா?

அப்ப சொல்லேண்டா நீ என்றார்கள். நானும்...

அலுங்காமல் குலுங்காமல் ஒரு சுமாரான பொண்ணு எம்மைக் கடந்து போகும் போது அவளது கண்ணாணது எமது இதயச் செயற்பாட்டியலில் ஒரு நிமிடமெனிலும் தடுமாற்றத்தை உண்டு பண்ணுமாயின் அது பிகர் எனப்படும் என்றேன்.

2 comments:

Anonymous said...

i accept

Anonymous said...

thamizachi maathiriyaa?