பட்டங்கள் விருதுகள் எல்லாம் நாட்டில மலிஞ்சு போச்சு பாருங்கோ எவனெவன் அதை கொடுக்கிறது அல்லது வாங்கிறது என்று விவஸ்தையே இல்லாமல் கிடக்கு இப்ப விருது என்றாளே ஏதோ பஞ்சு முட்டாசி மாதிரி மலிஞ்சு போச்சு
அந்த வியாதி இப்ப வலைப்பூவையும் ஆட்டத் தொடங்கிவிட்டது. அவனவன் எப்படியாவது ஒரு விருது வேண்ட வேணும் என்ற குறிக்கோளை விட்டுட்டு விருது வாங்கிறவனுக்கு அத்துடன் இரண்டு கும்மியும் மொக்கையும் இலவச இணைப்பாக எப்படி கொடுக்கலாம், என்றெல்லோ நம்மட பதிவர் சிந்தித்துக் கொண்டு இருக்கினம், அதுக்கில்ல 17 நடுவர்கள் அறிமுகம் செய்தாகி விட்டது. இவையளுக்கு ஸ்பெஷல் மொக்கைகள் வரலாம் என்று எதிர்பாக்கலாம் சரி இந்த விருது கிடைத்தவன் திறமையான எழுத்தாளன் என்று வைத்துக் கொள்வோம்.
அப்படி எடுக்கமுடியாமல் போனவன் என்ன எழுத்தாளன் இல்லையோஎங்கட எழுத்து பிடித்திருந்தால் ஒரு வரி பின்னூட்டம் மூலம் உட்சாக படுத்துகிறார்கள் தானே,அதை விட என்ன உற்சாக வேண்டிக்கிடக்க
என்ர பிரண்ட் ஒருத்தன் இருந்தவன் அவன் யாரையும் கொழுவி விடுறதெண்டாலே ஏதாவது போட்டியை இரண்டு பேருக்கும் இடையில் வைப்பான். அதனாலேயே, அவர்கள் இருவருக்கும் இடையில் கொழுவல் வந்துவிடும். அப்படி நல்ல நட்பாக இருக்கும் நம்மட வலைப்பதிவாளர்களை பிரிக்க இது ஒரு வழியாகிவிடுமோ என பயமாக கிடக்கு!
இந்த விருது போட்டியால் இங்க கட்சி கொடி பிரச்சாரம் என்று எல்லா கறுமாந்திரமும் வலையேறினாலும் ஆச்சரியம் இல்லை
அதுக்கிடையில் நடுவர்மார் பாடு திண்டாட்டம் தெரிவு செய்து முடிய எவனெவன் கத்தி பொல்லோட அலையிறானே தெரியவில்லை. எதற்க்கும் முடிவுகள் அறிவித்து 48 மணி நேரத்துக்கு எங்கள் நாட்டில் தேர்தல் முடிந்த பின்பு ஊரடங்கு சட்டம் போடுவது போல அனைத்து திரட்டிகளையும் மூடி விடலாம்
Tuesday, December 18, 2007
விருதுக்காக எருதின் மீது சவாரியா?????
Posted by தமிழ்பித்தன் at 11:37 AM
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
விருது எருது.. அட அட கவிதையா வருதே.. (வருதே.. இங்கேயுமா :)
:)
Post a Comment