நான் தமிழ்மணத்தால் நீக்கபட்டவன் என்ற வகையிலும் அதிலும் எந்த முன்னறிவிப்போ அல்லது எச்சரிக்கையே விடுக்கப்படாமல் "எம்..மாம்...பெரிய மனசு"" என்று பதிவிட்டு 15 நிமிடத்துக்குள் எனது பதிவு தமிழ்மணத்தை விட்டு நீக்கபட்டது. என்பது அனைவரும் அறிவர் அதற்காக நான் கண்ணகியைப் போல் நீதி கேட்டு எதையாவது எரிப்பேன் என்று நினைக்காதீர் நான் காத்திருந்த நல்ல சந்தர்ப்பம் என கருதி இது தொடர்பாக விளக்கம் அளிக்கலாம். என நினைக்கிறேன். உண்மையில், தமிழ்மணம் திரட்டியில் இருந்து தனது அதிகாரத்தை பயன்படுத்தி பதிவர்களை நீக்கம் அதிகாரத்தை நான் வரவேற்கிறேன். அது ஆபாசத்தை குறைக்கும் என்பதில் எனக்கு உடன்பாடே ஆனால் அந்த அதிகாரமே துஸ்பிரயோகமாகி சர்வதிகாரமாக மாற்றம் பெறுகிறதோ அப்போது அது வன்மையாக கண்டிக்க அல்லது எதிர்க்க வேண்டியது. கடந்த சில காலங்களாக தமிழ்மணம் தன்னை சர்வதிகாரியாக (தமிழில் சிறந்த திரட்டி என்பதில்) காட்டிக்கொள்வதிலும் அதை உறுதி செய்ய பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததையும் எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது என பலர் கூறுவதை காணமுடிகிறது. சரி தமிழ்மணம் என்பது ஒரு தனி வரம்புக்கு உட்பட்ட நிறுவனமாக தொழில்படுமிடத்து அங்கு சேவை என்ற பதம் தேவை அற்றதாகிறது அத்துடன் பொது கருத்து கேட்டறிதல் என்பதும் போலி நாடகமாகி விடுகிறது.
நானெல்லாம் தமிழ்மணத்தைப் பார்த்தே பதிவெழுத வந்தவன் என்பதனால் நான் அதற்க்கு தலைவணங்குகிறேன். நான் (பதிவர்கள்) தலை வணங்குகிறேன் என்பதற்காக உன்கருத்துடன் ஒத்துப்போகுமாறோ அல்லது உன் குறையை என்னை சுட்ட விடாமல் தடுத்தலோ ஏற்கத்தகுமா?? (அதற்காக அப்படி நடந்து விட்டது என்று கூற வரவில்லை அப்படி நடந்தால் அவை ஏற்க முடியாது என்றே கூற விளைகிறேன்
அதற்காக நான் விலக்கபட்டைமையை நான் ஒரு போதும் நான் விமர்சிக்கவில்லை ((இதுவரை)) அதை அன்புடன் அரவணைத்து அதை இதுவரை மீண்டும் சேர்க்க முயலாமல் அதை ஒரு கடந்த பாதைகளின் அடையாளமாக காட்டவே முயல்கிறேன்
தமிழ் மணத்திடம் நான் கண்ட மிகப் பெரிய குறை அந்த 24 மணி அவகாசம்
ஐயா! தமிழ் மண நிர்வாகிகளே நாங்கள் உங்களை போல் கணணிக்கு முன்னமர்ந்து ஜீமெயிலை திறந்து வைத்துக் கொண்டு வரும் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தபடி வேலை செய்பவர்கள் அல்ல. நாலு தட்டு கழுவினால்தான் நாளைய தட்டில் நமக்கு சோறு 24 மணி நேரத்தில் பதிலைத்தா என்று நீ அதட்டும் போது நாம் தட்டு கழுவுதலை விட்டு விட்டு உமக்கு பதில் போடுவதா கொஞ்சம் சிந்தித்துப் பார். எம்மால் சில வேளைகளில் வாரத்துக்கு கூட இணையப்பக்கம் வரமுடியாமல் போகலாம்
நாம் நக்கீரர் பரம்பரை நெற்றிக்கண்ணை திறக்கினும் குற்றம் குற்றமே! அதற்காக நெற்றிக்கண்ணை திறக்காதேயும் நான் தாங்க மாட்டேன். அழுதுடுவேன்
என்னை எழுதத் தூண்டிய பதிவு
http://kanimai.blogspot.com/2007/12/auhority.html
Friday, December 21, 2007
நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே! ((தமிழ்மணத்திற்க்கு))
Posted by தமிழ்பித்தன் at 10:38 PM
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
2007 இன் சந்தில சிந்து விருதை யாருக்கு கொடுக்கலாம்னு விவாதித்துக்கொண்டிருந்தோம். :)
வாசிப்பவர்கள் திரிபுகளைப் புரிந்துகொள்ளாதிருப்பதற்காக மட்டும்:
/நான் தமிழ்மணத்தால் நீக்கபட்டவன் என்ற வகையிலும் அதிலும் எந்த முன்னறிவிப்போ அல்லது எச்சரிக்கையே விடுக்கப்படாமல் "எம்..மாம்...பெரிய மனசு"" என்று பதிவிட்டு 15 நிமிடத்துக்குள் எனது பதிவு தமிழ்மணத்தை விட்டு நீக்கபட்டது. என்பது அனைவரும் அறிவர்/
உங்களின் மூன்று இடுகைகளை நீக்குவதற்குத் தொடர்ச்சியாக அறிவித்தல் தந்தபின்னரேதான், பதிவு நீக்கப்பட்டது.
1. உங்கள் பின்னூட்டங்களையே பின்னூட்டங்களாகத் தொகுத்துப் போடும் நீண்ட பதிவு மட்டுறுத்துப்படாமல் தமிழ்மணம் முகப்புப்பின்னூட்டமேம்படுத்துகையை அடைத்துக்கொண்டு நின்றதால்
2. தமிழச்சியுடன் சிக்கல் படுத்திக்கொண்ட இன்னோர் இடுகை
3. இந்த எம்மாம் பெரிய மனசு இடுகை
பதினைந்து நிமிடங்களிலே நீக்கப்பட்டது என்று என்ன அர்த்தத்திலே சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. வாசித்து, தமிழ்மணம் சேர்கையிலே சுட்டிய விதிகளிலே மீறலிருப்பின் நீக்கவேண்டியிருப்பின் காரணத்தினைத் தந்து, நீக்க ஐந்து நிமிடங்களும் தேவையில்லையே :-(
நீங்கள் வீம்புக்குக் கொக்கி போடாதவர் என்ற நம்பிக்கையுள்ளதாலேயே இப்பின்னூட்டவிளக்கம். இல்லாவிட்டால், குத்தி முறிந்து ஊருக்கு வித்தகனாக சித்தி புத்தி எல்லாம் செலவழித்து வித்தை காட்டுங்கள் என்று விட்டுவிட்டுப் போயிருப்பேன் :-)
உங்களின் மற்றைய வரிகளுக்குப் பதிலளிக்கத் தோன்றவில்லை; தேவையில்லை என்றே படுகின்றது.
வருமாண்டு வளமுடனேயிருக்கட்டும்.
அண்ணோய்
என்ன நடந்தது? ஏன் இந்தக் கொகொகொலைவெறி?
பெயரிலி அண்ணா நீ எனக்கு அறிவுரை சொல்ல வந்ததால் கொஞ்சம் உரிமை எடுத்து ஒரு கேள்வி கேட்கிறேன் அதாவது என்ன வகையில் நீங்கள் 24 மணிநேர அவகாசத்தை மற்றும் தமிழ்மணத்தைப் பற்றி எழுதுபவர்களிடம் விளக்கம் கேட்டல் அகியவற்றை நியாயப்படுத்த முயல்கின்றீர்கள் அல்லது விளங்கிக் கொள்கிறீர்கள்
ஏம்பா!
தமிழச்சி அக்கா இன்றிலிருந்து
தான் தமிழ்மணத்தில் வர ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்குள்ள
உன் புத்தியை காட்டறீயே!
அப்பிடியா,,,,,???????
Post a Comment