Friday, December 14, 2007

இந்து தூக்கி எறிந்தது இஸ்லாம் மற்றும் கிறீஸ்தவம் ஏந்திக் கொண்டன

இந்து மதமானது மதத்துடன் சேர்த்து தன் மொழியையும் இலவச இணைப்பாக வழங்குவதில் குறியாக இருந்தமையே நவீன யுகத்தில் இந்து மதத்தின் வளர்ச்சியானது அல்லது தேய்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இஸ்லாமம் கிறீஸ்தவ மதங்கள் மொழியை ஒரு பொருட்டாக கருதாமல் இந்துவை போல் அல்லாது அந்ததந்த மொழி வளர்ச்சிக்காக உறுதுணையாக இருந்தன.

இந்துமதம் தனக்கென தரக்கட்டுப்பாடு என்ற வகையில் ஜாதியை பிரித்துக் கொண்டது ஜாதியானது அக்காலத்துக்கு இயல்பு பெற்றதாக இருந்திருக்கலாம்.
அக்காலத்தில் பிராமணர் ஆறிவு பெறக்கூடியவர்களாகவும் மற்றவர்கள் கொத்தடிமைகளாகவும் இருந்து வந்துள்ளனர். இதன் விளைவு அவர்கள் தாங்கள் இருக்கின்ற நிலமையை சிந்திக்க முடியாதவர்களாக இருந்தார்கள்

பின் தொடர்ந்து நடந்த முகலாயர்களின் படையெடுப்பு அவர்களை பிராமணிய பூனூல் கட்டுக்குலிருந்து வெளியே வந்து சிந்திக்க தூண்டியது. அதன் விளைவு வட இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பெருபாலானோர் மதம் மாறினர் . இது முஸ்லீம் மதத்தின் வீரியம் என்பதையும் விடவும் இந்து மதத்தின் குறைபாடு எனலாம்.

ஆனால் தென் இந்தியா இதனுள் ஏனோ பெரிதாக அமிழ்ந்து போய் விடாமல் இருந்தது.

பின் வந்த கிறீஸ்தவம் ஒப்பிட்டு ரீதியில் மக்களிடம் சென்று சேரவில்லை.

'இந்துமதம் தானாகதோன்றிய மதம் அதனிடை வந்த கயவர்களினால் வந்த ஜாதி என்ற பேயை ஓட்டும் வரை அதற்க்கு தேய்வு காலமே""

இஸ்லாமிய தளம் ஒன்றை பார்த்தேன் அங்கே அரபிக் உருது ஆகியவற்றுக்கு அடுத்து தாக தமிழையும் இணைத்து தளம் அமைத்திருக்கிறார்கள் சென்று முஸ்லீம் பாடல்களை கேட்டுப்பாருங்கள் எனக்கு முஸ்லீம் பாடல்கள் உயர் ஸ்தாயியில் பாடுவதாலே என்னமோ ரொம்ப பிடிக்கும்

ஜனாப் நாகூர் ஹனீபா (தொகுப்பு)
காயல் செய்கு முஹம்மது (தொகுப்பு)

0 comments: